Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Factory

3 தென்கொரிய வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 1,614 கோடி ரூபாய் முதலீடுகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திரா கையெழுத்திட்டுள்ளது.

ஹூண்டாய், கியா கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் ‘ ஹவாஷின், செயோன்’ மற்றும் ‘ ஐவாமெட்’ ஆகிய மூன்று கொரிய நிறுவனங்கள், ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, அனந்தபூர் மாவட்டத்தில் இந்த புதிய உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஹவாஷின் நிறுவனம் 850 கோடி ரூபாயும், செயோன் நிறுவனம் 514 கோடி ரூபாயும், ஐவாமெட் நிறுவனம் 250 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த திட்டங்களின் வாயிலாக அனந்தபூர் பகுதியில் கிட்டத்தட்ட 1,418 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், அப்பகுதி, வாகன உதிரிபாக தயாரிப்பு மையமாக மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம், ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு, ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் வினியோக தொடரில் உள்ள கொரிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  கண்ணிமைக்கும் நேரத்தில் கருகிய உழைப்பு..!! திருச்செந்தூரில் 9 லட்ச ரூபாய் வலைகள் தீக்கிரையான அதிர்ச்சி சம்பவம்!

தென் மாநிலங்களுக்கு இடையே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழகம் ஏற்கனவே கொரிய நிறுவனங்களின் முக்கிய முதலீட்டு மையமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், கொரிய நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்வது தமிழகத்துக்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அமையவிருந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தவெக அரசு அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்களை அண்டை மாநிலங்களுக்கு மாற்றத் தொடங்கியதாகத் தொழில் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

திமுக தரப்பு குற்றச்சாட்டு: எதிர்க்கட்சித் தலைவர்கள், தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் கொள்கை தோல்விகளால்தான் தமிழகத்திற்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான முதலீடுகள் ஆந்திராவிற்குத் தடம் மாறுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தவெக அரசின் விளக்கம்: தவெக தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நிலவிய ஊழல் மற்றும் தாமதமான அனுமதிகள் காரணமாகவே 25-க்கும் மேற்பட்ட பெரிய திட்டங்களும் (சுமார் ₹3.3 லட்சம் கோடி முதலீடு), 2 லட்சம் வேலைவாய்ப்புகளும் குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே நழுவிவிட்டன என்று அவர் எதிர்வாதம் செய்துள்ளார்.

இதையும் படியுங்க  ”ஆந்திராவில் கொரோனா அறிகுறியுடன் 2 பேர் பலி: முகக்கவசம் அணிய அரசு உத்தரவு!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago