Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

thirumavalavan

சிதம்பரம் தொகுதியில் தெருத்தெருவாய் நின்று, “திருமாவுக்கு ஒரு ஓட்டு போடுங்கய்யா”ன்னு கும்பிடு போட்ட தொண்டனின் முகத்தில் கரியை பூசியது யாரு? வேற யாருமில்லைங்க… அவரோட தலைவரேதான்!

அரசியல்னா கொள்கை வேணும்னு சொல்வாங்க. ஆனா திருமாவளவன் அரசியல்னா… கொள்கை இல்லை, கூட்டணி கணக்குதான்! நேத்து கிண்டலடிச்ச வாய், இன்னிக்கு புகழ் பாடுது. நேத்து வழக்கு போடுன்னு கர்ஜிச்ச தொண்டை, இன்னிக்கு வருத்தம் சொன்னேன்னு குழையுது.

வாங்க… ஒவ்வொரு பல்டியா எண்ணிப் பார்ப்போம்!

பல்டி 1: ஆட்சியில் பங்கு – துணிக்கடை ஆஃபர்ல இருந்து புகழாரம் வரை!
அப்போ: த.வெ.க விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அப்புறம் மேடையில் ‘கலகல’ன்னு சிரிச்சுக்கிட்டே குத்தினாரு திருமா. “தீபாவளி, பொங்கலுக்கு துணிக்கடைக்காரன் ஆஃபர் கொடுப்பான்… அது மாதிரி ‘ஆட்சியில் பங்கு தர்றேன்’னு ஆஃபர் கொடுத்து விஜய் காத்திருக்காரு!” அரங்கமே சிரிச்சுது.

Thiruma

இப்போ: மதுராந்தகம் கூட்டணி மேடை. அதே வாய், அதே திருமா. ஆனா வார்த்தை? “தேர்தலுக்கு முன்பே ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ன்னு சொன்ன ஒரே தலைவர் தமிழ்நாட்டுல ஜோசப் விஜய்தான்!”

இதையும் படியுங்க  திருச்சி கிழக்கில் களம் இறங்கும் திருச்சி வேலுச்சாமி..! விசுவாசத்திற்கு விஜய் கொடுக்கும் பரிசு..!?

என்னங்க இது? துணிக்கடை ஆஃபர்னு கிண்டலடிச்சது நீங்கதானே? இப்போ அதே ஆஃபருக்கு ஆரத்தி எடுக்குறீங்களே… கூட்டணி கணக்கா? இல்ல அமைச்சர் கனவா?

பல்டி 2: கரூர் சம்பவம் – ‘வழக்கு போடு’ன்னவரு, ‘வருத்தம் சொன்னேன்’ன்றாரு!
அப்போ (அக்.2, 2025, திருச்சி): “விஜய் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸ் ஏன் தயங்குது?”ன்னு கேள்வி. செப்.11, 2026, தர்மபுரி திருமண மேடையில் இன்னும் ஆவேசம்: “கரூர் சம்பவத்துல விஜய் மீது வழக்கு தொடுத்திருக்கணும்னு நான் சொன்னேனா இல்லையா… வேணும்னே காலம் தாழ்த்தினாங்க… அப்பவே விஜய்யை அம்பலப்படுத்தியிருக்கணுமா வேண்டாமா?”

இப்போ (அக்.1, மதுராந்தகம்): “கரூர் சம்பவம் நடந்தப்போ ஆதவ் அர்ஜுனாவுக்கு போன் பண்ணி, ‘வருத்தப்பட வேண்டாம், மனம் தளர வேண்டாம், இது ஒரு விபத்து, அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம், விஜய்கிட்ட என் வருத்தத்தை சொல்லுங்க’ன்னு சொன்னேன்!”

அடடா! வழக்கு போடச் சொன்னவரே இன்னிக்கு ஆறுதல் சொன்னேன்றாரு! உயிரிழந்த குடும்பங்கள் காதுல இது எப்படி விழும்? அரசியலுக்காக நாக்கை இப்படியா மாத்துறது?

இதையும் படியுங்க  பள்ளி விழாவில் வெடித்த சர்ச்சை..! மேயருக்கு செக் வைத்த சபாநாயகர்..! எகிறும் அரசியல் பரபரப்பு!

பல்டி 3: பா.ஜ.க எதிர்ப்பு – ‘உறுதியில்லை’ன்னவரு, ‘துணிச்சல்’ன்றாரு!
அப்போ (அக்.9, 2025, செங்கம்): “பா.ஜ.க எதிர்ப்புல விஜய் உறுதியா இல்லை”ன்னு சந்தேக விதை.

இப்போ: “சினிமாவுல விஜய், அரசியல்ல ஜோசப் விஜய்! பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை தன் பெயரை அறிவிச்சதுல இருந்தே எடுக்குறாரு… பேருலயே தேர்தல் களம் காணுற துணிச்சல்!”

அடேங்கப்பா! பேருலயே பா.ஜ.க எதிர்ப்பை கண்டுபிடிச்ச புது அரசியல் ஆராய்ச்சி இது! நேத்து சந்தேகம், இன்னிக்கு சிலிர்ப்பு!

பல்டி 4: விக்கிரவாண்டி மாநாடு – ‘வெறுப்பு அரசியல்’ன்னவரு, ‘Strategy’ன்றாரு!
அப்போ: “மாநாட்டுல ஆக்கபூர்வமான திட்டம் எதுவும் இல்லை. தி.மு.க வெறுப்பு, தி.மு.க வெறுப்புன்னு தான் த.வெ.க உமிழ்ந்துச்சு!”

இப்போ: “தேர்தலுக்கு முன்னாடி தி.மு.க-வை மட்டுமே குறிவச்சு பேசினாரு விஜய். அது ஒரு Strategy!”

அன்னிக்கு வெறுப்பு, இன்னிக்கு யுக்தியா? நாக்கு இருக்கே… அது ரப்பர் நாக்கு போல!

பல்டி 5 & 6: குறைத்து மதிப்பிட்ட கதை முதல் கூட்டணி முறிவு வரை!
அப்போ (மார்ச் 8, 2025, சென்னை): “இன்னும் கூட்டணி நிச்சயமாகலை. எவ்வளவு ஓட்டு வாங்குவாருன்னு யாருக்கும் தெரியாது. ஆனா முதலமைச்சரே இவர்தான்னு மீடியா வரிஞ்சு கட்டுது”ன்னு ஏளனம்.

இதையும் படியுங்க  இபிஎஸ் மகன் மிதுன் கையில் செல்கிறதா அதிமுக..? தந்திரமாக காய் நகர்த்தும் எடப்பாடியார்..!

இப்போ: “த.வெ.க-வை நாங்க குறைச்சு மதிப்பிட்டோம்ன்றதை விட, குறுகிய யுக்தியோட அணுகினோம்ன்றதுதான் உண்மை”ன்னு ஒப்புதல் வாக்குமூலம்!

கூட்டணி முறிவு குறித்து அப்போ (செப்.11, 2026): “100% தி.மு.க கூட்டணியில வி.சி.க நீடிக்க முடியாம போனதுக்கு தி.மு.க தான் முழு பொறுப்பு!”

இப்போ: “த.வெ.க-வோட இணைஞ்சு பயணிக்கிற சூழல் உருவானதுக்கு ‘காலம் இட்ட கட்டளை’ தான் காரணம்”னு தத்துவம்!

ஒரே ஒரு அமைச்சர் பதவிக்காக இவ்வளவு பல்டியா? தொண்டர்களே கேட்குறாங்க… தலைவரே, நீங்க தி.மு.க பக்கமா? த.வெ.க பக்கமா? இல்ல அமைச்சர் பதவி இருக்குற பக்கமா?

முரண் அரசியலின் மொத்த உருவமா இன்னிக்கு அம்பலப்பட்டு நிற்கிறார் திருமாவளவன்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago