Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vs babu

”ஏண்டா எத்தனை நாளைக்கு தான்டா மூடி மறைப்பீங்க.. சொல்லுங்களேன்டா இருக்காரா? இல்லையா? தலையே வெடிச்சிரும்போல இருக்கே.. ஒரு சட்டமற்ற உறுப்பினருக்கே இந்த நிலைமைனா சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை ஏற்படுதுன்னு யோசிச்சு பார்த்தா தலையே சுத்திரும் போலயே..” 50 நாள் கடந்தும் விஎஸ் பாபு பற்றி மருத்துவமனையிலிருந்து எந்த தகவலும் வராததன் ரகசிய பின்னணி என்ன?

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றோடு 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து செப்டம்பர் 22க்கு பிறகு மருத்துவமனை அறிக்கை வெளியாகாமலே இருந்து வருகிறது.. இந்த நிலையில் அவர் எப்படி இருக்கிறார்? என அவரது ஆதரவாளர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டார்.

VS Babu

முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை தோற்கடித்து கொத்து புரோட்டா போட்டுட்டார். சுமார் 80700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் ஸ்டாலின். இதனால்அவரால் சட்டமன்றத்திற்கே செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தபோதும் நேரடியாக மக்களை சந்தித்து நன்றி
தெரிவித்தார் ஸ்டாலின்.

இதையும் படியுங்க  தமிழும் தெரியல.. ஒரு இழவும் புரியல..! அப்செட்டில் விஜய்… மரிய வில்சனுக்கு செக்..!

இருந்தபோதும் வி.எஸ்.பாபு ஸ்டாலினின் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டியதன் மூலம்தான் சமூக வலைதளங்களில் பிரபலமானார். காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிந்ததும் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு கையில் சைகை காட்டியது வைரல் ஆனது. தேர்தல் முடிவுகள் வந்தபோது வி.எஸ்.பாபு இரண்டு கைகளால் கேம் ஓவர் செய்கையை செய்து காட்டினார். இப்போது நடைபெற்ற முடிந்த தமிழக சட்டசபையில் சில நிகழ்வுகள் மட்டுமே வி.எஸ்.பாபு பங்கேற்றார். அதன் பிறகு பெரும்பாலான நாட்களில் அவர் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை.

உடல் நலன் பாதிக்கப்பட்டதால் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. இப்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்க  2029 பிரதமர் விஜய்..? தவெக-வின் ரகசிய திட்டம் லீக்: கதறும் காங்கிரஸ், அதிரும் திமுக!

இந்த நிலையில் வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை எதுவும் வராததும் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை அடிக்கடி மருத்துவமனை தரப்பிலிருந்து அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டது. பெரும்பாலும் அவரது உடல்நலம் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மட்டுமே அவ்வபோது அறிக்கைகள் வெளிவந்தது. ஆனால் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் மாதம் முழுவதும் அவர் உடல்நலன் குறித்த எந்த அறிக்கையும் வெளிவரவில்லை.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்கிறார் என தெரிந்து கொள்வது அந்த தொகுதி மக்களின் உரிமை. ஆனால் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து எந்தவித அறிக்கையும் அளிக்காமல் இருப்பதால் பொதுமக்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் அவரது உடல்நலம் தொடர்பாக உரிய விளக்கத்தை அரசு தரப்பில் இருந்தோ, மருத்துவமனை தரப்பிலிருந்தோ வெளியிட வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா? இல்லை உடல்நிலை என்ன கண்டிஷனில் இருக்கிறது என்பதை மருத்துவமனை வெளியிடுவதற்கு ஏன் தயக்கம் கொள்கிறது? இதன் உள்குத்து என்ன? இனியாவது மருத்துவமனையில் இருந்து தகவல் ஏதேனும் வெளியாகுமா?

இதையும் படியுங்க  மாறாத திமுக விசுவாசம்..! டம்மியாக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்..! முன்பே சொன்ன #Republic தமிழ்நாடு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 hours ago at 8 hours ago