நிச்சயதார்த்த விழாக்கள் என்பது பொதுவாக இரு மனங்கள் இணையும் மங்கல நிகழ்வாகவே பார்க்கப்படும். ஆனால், தமிழக அரசியல் களத்திலோ அது அதிகார பலத்தையும், வாரிசு அரசியலின் செல்வாக்கையும், விமர்சனப் புயலையும் கிளப்பும் ஒரு மேடையாகவே பெரும்பாலும் மாறிவிடுகிறது.
அப்படி ஒரு பரபரப்பான அரசியல்-சினிமா விஐபிக்களின் சங்கமமாக அரங்கேறியிருக்கிறது, திமுகவின் மூத்த புள்ளியும் பொதுச் செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமண நிச்சயதார்த்த விழா. காட்பாடியில் நடந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வு, வெறும் வாழ்த்துகளோடு மட்டும் கடந்து போய்விடவில்லை. சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

விழாவின் இறுதியில் அரங்கேறிய ஒரு நடனமும், அதில் ‘நடமாடும் நகைக்கடையாக’ வலம் வந்த ஒரு திமுக பிரமுகரின் பின்னணியும் தற்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்தையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.
திமுக பொதுச் செயலாளரும், மூத்த முன்னாள் அமைச்சருமான துரை முருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் – சங்கீதா மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடியை பூர்வீகமாக கொண்ட துபாய் தொழிலதிபரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான கண்ணன் ரவி- தீபா தம்பதியினர் மகன் தீபக் ரவிக்கும் திருமண நிச்சயதார்த்த விழா ஜூலை 12 – ஆம் தேதி, துரைமுருகனுக்கு சொந்தமான காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி கலைஞர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியிக்கு தலைமை சார்பில் திமுக எம்.பி., கனிமொழி, தலைமை தாங்கினார. எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எம்பி, எம்எல்ஏக்கள், மற்றும் திண்டுக்கல் லியோனி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் சரத்குமார், ஜெய், சதிஷ், நடன இயக்குநர் கலா மாஸ்டர், இயக்குநர் பாண்டிராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தின் இறுதியில் விழா நாயகன் எம்.பி.கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் போன்றோர் சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அதில், சிலம்பரசன் நடித்து வெளியான வல்லவன் படத்தில் இடம்பெற்ற ‘யம்மாடி ஆத்தாடி’ என்ற பாடலுக்கு வளைந்து நெளிந்து நடனமாடி இருக்கிறார்கள். அந்த movement செய்தவர்களில் ஒருவர் ஹரி நாடாருக்கு டஃப் கொடுக்கும் வகையில் கை, கழுத்து நிறைய நகைகள் தொங்கவிட்டு அவர் போட்ட குத்தாட்டம்தான் யார் அவர்? துரைமுருகன் பினாமியா ? அவருக்கு பூர்வீக சொத்துக்கள் இல்லை. பின்னர் எப்படி வந்தது இந்த நகைகள்? வருமான வரிதுறை விசாரிக்க வேண்டும் என்று இணையதளவாசிகள் பலரும் பல விதமான சந்தேக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து, இணையவாசிகளோடு நாமும் அவரை பற்றி விசாரிக்க தொடங்கியதில் “காட்பாடி ஊராட்சி திமுக ஒன்றிய குழு தலைவர் வல்லிமலை வேல்முருகன்” என தெரியவந்தது. வேல்முருகனின் திடீர் அரசியல் வருகையையும், தலைவரானதையும் இன்னும் ஆச்சரியம் விலகாமலேயே தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் காட்பாடி பகுதி உ.பி.க்கள். இவரை பற்றி மேலும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோத போது, ”சின்ன வல்லிமலையைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துவிட்டு 16 வயதில் பெங்களூரு சென்று பல தொழில் செய்து, தற்போது பெட்ரோலியம் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். எப்பவும் கழுத்தில் 3 கிலோவுக்கு குறையாமல் தங்கத்தாலான சங்கிலிகள், கைகளில் பிரேஸ்லெட் உருளைகள் அணிந்து உலா வருவது வல்லிமலை வேல்முருகனுக்கு அலாதிப் பிரியம்.
ஒன்றியத் தலைவராவதற்கு முன்பு வரை தூங்கும் போது தவிர மற்ற நேரங்களில் நடமாடும் நகைக்கடையாகவே இருந்தார். துரை முருகன் மற்றும் கதிர் ஆனந்த்க்கு தேர்தல் நேரத்தில் மட்டும்வேலை பார்ப்பார். இதன் பலனாக 2021 உள்ளாட்சி தேர்தலில் பெங்களூருவில் இருந்து ஃபாரின் காரில் இறக்கி கவுன்சிலர், பின்னர் போட்டியின்றி ஒன்றியக் குழு தலைவராக்கிவிட்டார்கள் அப்பனும் மகனும். இதுதான் அவர் ஹிஸ்டரிங்க” என்றனர்.
“பாராசிட்டமாலில் 95% ஆல்கஹாலா? யூடியூபர் கிளப்பிய பீதி… உண்மையை உடைத்த சுகாதாரத்துறை!
சொத்து சம்பந்தமாக தேடியதில் 2021 வேல்முருகன் வேட்புமனு நிலவரப்படி மொத்த சொத்துக்கள் ரூ.22 கோடி. அதில் அசையும் சொத்துகள் 10,79,66,676 ரூபாய் என்றும், அசையா சொத்துகள் 3,27,27,090 ரூபாய் என்றும் இவரது மனைவி மலர்கொடி பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் பிள்ளைகள் பெயரில் 11- லட்சம் இருப்பதாகவும் , கடைசியாக வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்யவில்லை என்ற விவரத்தையும் தெரியப்படுத்தி இருந்தார்.
தவெக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளிவந்த வண்ணம் இருப்பதை மடைமாற்ற, திமுக மாஜி அமைச்சர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கவும், புதுசு புதுசா ஊழல் வழக்கு போட்டு கைது செய்ய காத்திருக்கும் நிலையில் , துரைமுருகன் பேத்தி நிச்சயதார்த்தத்தில் வல்லிமலை வேல்முருகனோடு துரை முருகன் மகன் ஆட்டம் போட்ட வீடியோ திசை திருப்பி வருவதால் இது ஆளுங்கட்சிக்கு அல்வா துண்டு போல சிக்கியிருக்கிறது
யார் கண்டார்.. வல்லிமலை வேல்முருகனை கஸ்டடி எடுத்து துரைமுருகனுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
