https://republictn.com/

தி.மு.கவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு தொடர்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது இந்தியா முழுவதும் வாடிக்கை ஆகியுள்ளது. ரீல்ஸ் பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால் நாங்கள் சுட்டிக் காட்டுவோம். அமைச்சர்கள் அதை உள்வாங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்” எனஅமைச்சர் கீர்த்தனாவின் ‘ரீல்ஸ் ஆய்வு’ குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். ”திமுகவுடன் நட்பு தொடர்கிறது. தவெக தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லை.

தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்ந்தோம். அமைச்சரவையில் இணைந்தாலும் தவெக கூட்டணியில் இணையவில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவு ஏற்படவில்லை. விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு தான் தவெக அரசை விசிக ஆதரித்தது” என அதிர வைத்துள்ளார் திருமாவளவன்.

‘உங்க சண்டைகள வெளியே வைச்சுக்கோங்க..! கரூர் விவகாரத்தில் திமுக-மீது கடுப்பான உச்ச நீதிமன்றம்

விசிக-வுக்கு அமைச்சரவையில் சமூக நீதி அமைச்சர் பதவியை கொடுத்துள்ளது தவெக. அதைவிட வெயிட்டான அமைச்சர் பதவியும், தனக்கு திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், விசிகவினருக்கு வாரியத் தலைவர்கள் பதவிகளை கொடுக்க வேண்டும் என திருமாவளவன் பலமான டிமாண்ட் வைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேவேளை அவ்வப்போது தவெக ஆட்சியை பற்றி கூட்டணியில் இருந்து கொண்டே கடுமையாக விமர்சித்து வருகிறார் திருமாவளவன்.

இதனால் கடுப்பான விஜய், கூட்டணியை விட்டு போனால் போகட்டும். ஆட்சியை தக்கவைக்க எங்களுக்கு தெரியும் என கறாராக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாமக வுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது தவெக.

ரீல்ஸ் போட்டு பல்ப் வாங்கிய தவெக எம்.எல்.ஏ… ஆதாரத்தோடு திமுக கொடுத்த சவுக்கடி பதில்..!

இது குறித்து நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். ”என்னப்பா! என்ன நடக்குது? பாமகவும் இப்போ த வெ க கூட்டணிக்கு வந்துடுச்சா? சௌம்யா அன்புமணி மினிஸ்டர் ஆயிடுவாங்களா? அப்போ திருமா அங்கிருந்து கிளம்பிடுவாரா? இல்லை மானம் கெட்டுப் போய் அங்கேயே தங்கிடுவாரா? மு.க.ஸ்டாலின் அருமை இப்போது திருமாவுக்கு புரியுமா?

தவேக கூட்டணிக்குள் பாமக வருகிறது. அதனால் தான் திருமாவின் பல்டி. திருமா தவெக கூட்டணியை விட்டு வந்தால் தனியாதான் வரணும். தொண்டர்கள் தவெகவோடு போய்விடுவார்கள். திருமாவளவனால் திமுகவை எதிர்த்து தனித்து இயங்க முடியாது. திமுகவின் போலி முற்போக்கு வட்டம், சல்லடையால் சலித்து விடும். திருமாவை எதிர்த்து பேசாத விஜயை கடுமையாக தாக்கினார் திருமா. ஆனால் சோபா என திரும்பி திரும்பி பேசும் உதயநிதியை எதிர்த்து பேச துணிவில்லை. அப்படி பேசினால் கட்சி உடையும். ஒருவேளை பாமக உள்ளே வந்து, விசிக நாங்க வெளியேறுகிறோம்னு முடிவெடுத்தால் அண்ணன் திருமா மட்டும்தான் வெளியே போவாரு. கூட யாரும் போக மாட்டாய்ங்க. தொண்டர்கள், அமைச்சர் உட்பட எல்லாரும் தவெக கூட செம்மயா செட்டில் ஆகிட்டாய்ங்க”

தவெக- வில் இருந்து விரைவில் தூக்கி எறிவது நிச்சயம் என்பதை தெரிந்தே இப்போதே அண்ணன் ஸ்டாலினிடம் ஒரு துண்டை கூட்டணிக்காக விரிச்சி போட்டுவைப்போம் என்ற ரீதியில் நாசுக்காக பட்டும்படாமல் போட்டுவைக்கிறார். எப்படியும் மன்னித்து ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை.

பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன்! தென்னை மரத்துல ஒரு குத்து! பானை மரத்துல ஒரு குத்து! திரிசங்கு சொர்கத்தில் இருக்கிறார் திருமா! மதில் மேல் பூனையாக, என்ன செய்வதென்று குழம்பிப் போய் இருக்கிறார்! பாவம்! உண்மையை சொல்லப் போனால் தமிழ்நாட்டின் நிலையே அப்படித்தான் இருக்கிறது.

தவெக கூட்டணியால் விசிக வளர்கிறதா…? அழிகிறதா..? அதிர வைக்கும் மக்கள் கணிப்பு..!

அமேசானில் சில பொருட்கள் வாங்கும் போது ரிட்டர்ன் கிடையாது. எக்சேஞ்ச் மட்டும் உண்டு என்பார்கள். மாற்றிக் கொள்வதற்கு இது என்ன, பானையா? சட்டியா? தமிழ்நாட்டின் வாழ்வாதாரமே சீரழிகிறது. இதெல்லாம் எங்கு போய் முடியும் என்கின்ற கவலை திருமாவிற்கு வந்திருக்கலாம். குழம்பித் தெளியுங்கள் திருமா?” என விவாதித்து வருகின்றனர்.

2 thoughts on “திருமா ஒரு 9 ரூபாய் நோட்டு..! விசிக-வை மீண்டும் சேர்க்கவேண்டாம்… திமுக-வில் கடும் எதிர்ப்பு..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago