Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

‘மாற்றத்தின் முகம்’ எனத் தன்னை முன்னிறுத்தி ஆட்சியில் அமர்ந்துள்ள த.வெ.க தலைவர், முதல்வர் விஜய், தற்போது தி.மு.க-வின் கருணாநிதி குடும்பத்திற்குள்ளேயே தனது அரசியல் மூவை துவங்கியுள்ள தகவல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி, த.வெ.க-வில் இணையப் போவதாகவும், மதுரை மேயர் பதவியைக் குறிவைத்து அவர் காய்களை நகர்த்தி வருவதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.

தி.மு.க குடும்பத்தில் நீண்ட காலமாகவே மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், கயல்விழி தனது அரசியல் எதிர்காலத்திற்காக த.வெ.க-வை தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரையின் மிக முக்கிய அதிகார மையமான மேயர் பதவியைக் குறிவைத்து, த.வெ.க தரப்புடன் அவர் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இது நிஜமாகும் பட்சத்தில், கருணாநிதி குடும்பத்தில் இருந்து விஜய் தூக்கும் ‘முதல் விக்கெட்’டாக இது அமையும்.

இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு கயல்விழி வந்ததாகவும், முதல்வர் விஜயைச் சந்திதிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  E-cigarettes really grew to become a sensible various to

மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக வலம் வந்தவர் பாஸ்கரன். தற்போதும் அழகிரி குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் இவர், தலைமைச் செயலகத்திற்கு கயல்விழி வந்திருப்பதை தெரிந்து கொண்டவர், உடனடியாக கயல்விழியை முதல்வர் விஜயைச் சந்திக்க விடாமல் தடுத்த பாஸ்கரன், அங்கிருந்தபடியே மதுரையில் இருக்கும் மு.க.அழகிரிக்கு அவசரமாக போன் போட்டு விபரத்தைக் சொன்னதாக கூறுகிறார்கள்.

அழகிரியின் தலையீட்டால் இந்தச் சந்திப்பு தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டாலும், கயல்விழி த.வெ.க-வை நோக்கிப் போடும் ‘ரூட்’ இன்னும் மாறவில்லை என்றே சொல்லப்படுகிறது. தி.மு.க-வின் குடும்ப அரசியலுக்குள்ளேயே புகுந்து விஜய் நடத்தும் இந்த ஸ்கெட்ச், தி.மு.க-விற்குப் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. இந்த அதிரடித் திருப்பம் தமிழக அரசியலில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago