Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது தவெக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இது விசிக-வின் வளர்ச்சிக்கு உதவுமா..? என்பது குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டோம்.

”எட்டு நபர்களுக்கு மேலே பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இது ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய வளர்ச்சியை பாதிக்காது என்பதே என்னுடைய கருத்து. அம்பேத்கருடைய கனவுகள் இன்றைக்கு தமிழ்நாட்டில் நிறைவேறி இருக்கிறது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பலம்தான்.

பட்டியலினத்த மக்களை இதுவரைக்கும் ஆண்ட திமுகவோ, அதிமுகவோ ஓட்டுக்காகத்தான் வச்சிருந்தாங்களே தவிர, பட்டியலின மக்களுக்கு வந்து முழு சுதந்திரம் கொடுத்ததே கிடையாது.

எந்த ஒரு கட்சி ஆளுங்கட்சியா வரணும்னு நினைக்குதோ, அவங்களுக்கு விசிகாவோட ஆதரவு வேணும் என்பதை அவங்க ப்ரூப் பண்ணிட்டாங்க. அதுதான் அவங்களோட வெற்றின்னு நான் நினைக்கிறேன்.

“நான் தளபதிக்கு தான் ஓட்டு போட்டேன்!” – மேடையில் அட்லி ஓபன் டாக்! அரங்கத்தையே உலுக்கிய நெகிழ்ச்சியான தருணம்!

இதையும் படியுங்க  "விஜயிடம் ரூ.50 கோடி வாங்கினேனா..? நரம்பில்லாத நாக்கு..! திமுக-வுக்கு வைகோ மறைமுக எச்சரிக்கை..!

விசிக அவங்களுடைய அமைச்சரவைக்காகத்தான் தவெகவுக்கு போயிருக்காங்கன்னுதான் சொல்ல முடியும். விசிக, தவெகவோட இணைஞ்சிருக்கிறது அவங்க பலத்தை கூடுதல் படுத்தலாம். தனிப்பட்ட முறையில கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போறது என்பது கேள்விக்குறியான விஷயம்தான்.

இந்த தடவை பட்டியலின மக்கள் மாத்தி தவெக-வுக்கு வாக்களிச்சதுனால அவர்களுடைய ஓட்டு சதவீதம் 70%, 80% சரிந்துவிட்டது. இனி அவர்கள் விசிக-வை காப்பாத்திக்கணும்னா அவருக்கு வேற வழி இல்லை.

விசிக இதுக்கு முன்னாடியே கண்ட வளர்ச்சியோட, இனி வரும் காலங்களில் விசிக அமோக வளர்ச்சி பெறும்.

மோடிக்கு குறி… மரண மிரட்டல் விடுத்த இளைஞர்..! மின்னல் வேகத்தில் தட்டித் தூக்கிய ஆஸ்திரேலிய போலீஸ்..!

தவெக கூட்டணி கூட சேர்ந்ததுனால விசிக-வுக்கு திருப்திங்கறத ஏத்துக்க முடியாது. சந்தர்ப்பவாத கூட்டணின்னு தான் சொல்லணும்.

கண்டிப்பா உதவும், ஏன்னா ரெண்டு பேருமே ஒரே போர்ட்ல பயணிக்கிறாங்க. அப்ப அந்த ஒரே போர்ட்ல பயணிக்கிற போது, ஒரே கருத்துள்ளவங்க பயணித்தாங்கன்னா அது சிறப்பா இருக்கும்.

இதையும் படியுங்க  கைகழுவிய விஜய்..! இடியாப்ப சிக்கலில் எஸ்.பி.வி- சி.வி.சி அணி..! எடப்பாடியின் கள்ளச்சிரிப்பு..!

விசிக ஒவ்வொரு கூட்டணியா மாறி மாறி வருவதனால, விசிக, தவெக போய் சேர்ந்ததுனால அவங்களுடைய கட்சி வளர்ச்சி ஆகாது. வளர்ச்சி வந்து குறையறதுக்கு உண்டான வாய்ப்புகள் அதிகம்.

விசிக ஓட்டெல்லாம் கொண்டு போன தவெகவிடம் செல்லுவது என்பது, ஆறு சென்று கடலில் சங்கமித்து தன்னைத்தானே மாய்த்து கொள்வதற்கு சமமாகும்.

உதவ வாய்ப்பு கம்மி. ஏன்னா ஏற்கனவே திருமாவுக்கு உள்ள ஓட்ட விஜய் வாங்கிட்டாரு. இப்ப இவருக்குள்ள ஓட்டு அதிகமா இருக்குன்னு சொல்ல முடியாதுல்ல.

இன்னைக்கு தவெக-வை நம்பி விடுதலை சிறுத்தைகள் கிடையாது. ஆனா அவங்க ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு எடுத்துருக்காங்க. அதனால இந்த கட்சிக்கு வளர்ச்சிக்கு முன்னேற்றமாகத்தான் இருக்கும் .

திமுக கூட்டணியில் கசப்பான பாடம்… தவெக-விடம் உஷாரான காங்கிரஸ்..! மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’..!

விசிகவுக்கு- உதவுறதுக்கு வாய்ப்பு இல்லைங்கிறதுதான் என்னுடைய கருத்தா இருக்கு. ஏன்னா அது சமூக நீதிக்கான கொள்கைகளில் அவங்களுக்கு அதிகமான உடன்பாடு இருக்காதுங்கிறது என்னுடைய கருத்தா இருக்கு.

இதையும் படியுங்க  “விஜய்யின் ‘ரூ.1,200 கோடி’ கனவுத் திட்டம்.. ‘இது எங்க தாத்தா பூமி!’ - பட்டினப்பாக்கத்தில் மீண்டும் வந்த ‘CRZ’ சிக்கல்!”

தவெவுடன் சேர்ந்ததனால் தான் விடுதலை சிறுத்தையினுடைய வளர்ச்சி இருக்கும் என்பதல்ல. விடுதலை சிறுத்தை கட்சி பொதுவான கட்சி என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபித்து விட்டது. தலித்தோட ஓட்டுகள் எல்லாமே தவெவுக்கு வந்துருச்சுன்னு சொல்ல முடியாது” என மக்கள் கூறியிருக்கின்றனர்.

2 thoughts on “தவெக கூட்டணியால் விசிக வளர்கிறதா…? அழிகிறதா..? அதிர வைக்கும் மக்கள் கணிப்பு..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago