https://republictn.com/

தவெக-வை உலுக்கிற அந்த மெகா எம்எல்ஏ பேரம் பேசும் வழக்கின் அடுத்த கட்ட அதிர்ச்சி தமிழக வெற்றி கழகத்தோட ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவை ராஜினாமா செய்ய சொல்லி விலை பேசிய அந்த சதிவழக்கில் ஏற்கெனவே 8 பேரை போலீஸ் கைது செய்து இருக்கிறது. இந்த மெகா ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக் குமாரோட
பெயர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் இவர்கள் இருவரும் நேற்று அதாவது ஜூலை ஆறாம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனச் சொல்லி போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

ஆனால் இந்த ரெண்டு பேருமே நேற்று போலீஸ் முன் ஆஜராகாமல் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள். இதற்கிடையில் செந்தில் பாலாஜியோட தம்பி அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில அவசர அவசரமாக ஒரு முன்ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக் குமார் தரப்பு இந்த வழக்கில் என்னை வேண்டும் என்றே திட்டமிட்டு பழி வாங்குவதற்காக சிக்க வைத்திருக்கிறார்கள் என வாதாடினார்கள்.

“கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ன ஆவாங்க?” – பள்ளி ஆய்வில் கீர்த்தனா விட்ட வார்த்தை.. எகிறிய உதயநிதி..!

ஆனால் போலீஸ் தரப்போ இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கிற அந்த ஸ்பெஷல் கோர்ட் அமருவுக்கு இதை உடனே மாற்ற வேண்டும் என கறாராக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி குமரப்பன்
எம்பி.,க்கள், எம்.எல்.ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கிற நீதிபதி இளந்திரையன் அமர்வுக்கு இந்த முன் ஜாமீன் மனுவை அதிரடியாக மாற்றி விட்டார்.

அதோட இந்த வழக்கை வரும் ஜூலை எட்டாம் தேதி அன்னைக்கு அதாவது நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறர்கள். இன்னொரு பக்கம் நேற்று விசாரணைக்கு ஆஜராகாமல் செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் டாட்டா காட்டியதால் இவர்கள் இரண்டு பேரும் இப்போது எங்கே பதுங்கி இருக்கிறார்கள் என தேடுவதற்காக போலீஸ் மெகா வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள். கரூர் விஐபிகள், செந்தில் பாலாஜிக்கு ரொம்ப நெருக்கமான புள்ளிகள் என எல்லாரோது போன் கால்களையும், நடமாட்டங்களையும் போலீஸ் அக்யூரேட்டா கவனித்து கண்காணித்துக் கொண்டு வருகிறார்கள். இப்படி ட்ராக்கிங் பண்ணிக்கொண்டு இருந்தபோதுதான் போலீசாருக்கு சும்மா தூக்கி வாரி போடுற மாதிரியான ஒரு அதிரடி ரகசிய தகவல் ஒன்று கிடைத்து இருக்கிறது.

திருமா ஒரு 9 ரூபாய் நோட்டு..! விசிக-வை மீண்டும் சேர்க்கவேண்டாம்… திமுக-வில் கடும் எதிர்ப்பு..!

மிக சமீபத்தில் அதிமுக-வில்ல இருந்து தவெக-வுக்கு வந்து சேர்ந்தாரே முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜய பாஸ்கர். அவரோட பிஏ.,க்களில் ரொம்ப முக்கியமான ஒருவர் இருக்கிறார். அவரோட பெயர் முருகப்பெருமான். இந்த முருகப்பெருமானுக்கும் தலைமுறைவாக இருக்கிற செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கும் நடுவில் ரொம்ப திக்கான ஒரு அண்டர் கிரவுண்ட் நட்பு இருக்கிறது. இந்த நிலைமையில் தவெக விஐபி விஜய பாஸ்கரோட அந்த பி.ஏ முருகப்பெருமானுக்கு தொடர்புள்ள ஏதோ ஒரு ரகசிய இடத்தில்தான் இப்போது செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் பதுங்கி இருக்கலாம் என்கிற ஸ்ட்ராங்கான யூகத்துக்கு போலீஸ் வந்திருக்கிறது.

இதை சும்மா போகிற போக்கில் எல்லாம் சொல்லவில்லை. தங்களுக்கு கிடைத்த பக்காவான சோர்ஸ் விபரங்களை வைத்தேதான் போலீஸ் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த விஷயம் இப்போது அர்ஜென்டாக முதலமைச்சர் விஜயோட கவனத்துக்கும் கொண்டு போகப்பட்டிருக்கிறது. ஆனால் புதுக்கோட்டை விஜய பாஸ்கர் தரப்போ இதுபற்றி எந்த டென்ஷனுமே இல்லாமல் கூலாக புதுக்கோட்டையில உட்காந்து தங்களோட ஆதரவாளர்களுக்கு தவெகவில் பெரிய பெரிய பதவிகளை வாங்கி தரும் அந்த மெகா வேலையில ரொம்ப பிஸியாக இருக்கிறார்.

”எங்க அண்ணன் புதுக்கோட்டை விஜய் பாஸ்கர் தவெக-வில் லேட்டா சேர்ந்தாலும் சும்மா லேட்டஸ்ட்டா தரமான வெயிட்டான சிபாரிசு மூலமாதான் சேர்ந்திருக்காரு. நம்ம முதலமைச்சர் விஜய்க்கு ரொம்பவும் வேண்டிய மெகா தொழிலதிபரான விஷ்ணு ரெட்டிதான் எங்க அண்ணனை தவெகவில் சேர்த்து வச்சாரு. அதனால தவெக-வில் இனிமே எங்க அண்ணன் விஜய பாஸ்கருக்கு ஏறுமுகம் தான்” என அவரோட ஆதரவாளர்கள் மெதப்பில் கெத்து காட்டிக்கொண்டு வருகிறார்கள்.

ரீல்ஸ் போட்டு பல்ப் வாங்கிய தவெக எம்.எல்.ஏ… ஆதாரத்தோடு திமுக கொடுத்த சவுக்கடி பதில்..!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

2 thoughts on “விஜய்க்கே அல்வா..! செந்தில் பாலாஜி-யை மறைத்து பாதுகாக்கும் தவெக விஐபி-யின் பி.ஏ..! படுபயங்கர ட்விஸ்ட்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago