Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

jeganath mishra

தமிழக அரசியல் களம் எப்போதுமே புதுமைகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாதது. அந்த வகையில், தற்போதைய தவெக ஆட்சியில் மக்கள் பணிகளைத் தாண்டி சமூக வலைத்தளங்களில் வலம் வரும் ‘ரீல்ஸ்’ கலாச்சாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமைச்சர்களின் ஆய்வுகள் முதல் அடிமட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் வரை அனைத்தும் கேமரா கோணங்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ‘ரீல்ஸ்’களாக வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. “தவெக அரசு ரீல்ஸ் மோகத்தில் இருந்து வெளிவந்து, எப்போது ரியல் ஆட்சியாக மக்கள் பணிகளைத் தொடங்கப் போகிறது?” என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

திருமாவின் திமுக ட்ரம் கார்டு.. விசிக-வின் டபுள் கேம்..! கூட்டணிக்குள் வரும் பாமக..! தவெக எடுத்த அதிரடி முடிவு..!

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை முனைப்புடன் செய்து வரும் தவெக எம்.எல்.ஏ ஜெகனாத் மிஸ்ரா, சமீபத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று சர்ச்சையில் முடிந்துள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பரவது மகன் மணிகண்டன். இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் பலியானார்.

இதையும் படியுங்க  ''எனக்கு மக்கள்தான் முக்கியம்..!" கோல்மாலில் சிக்கிய 5 அமைச்சர்கள்..! CM விஜய் அதிரடி முடிவு..!

இந்த சம்பவம் குறித்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்ட கம்பம் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜெகனாத் மிஸ்ரா, ”கம்பம் நகராட்சி நிர்வாகத்தினரும், துப்புரவு பணி ஒப்பந்த தாரர்களும் மணிகண்டன் இறுதி சடங்கிற்கு வரவில்லை. இவர்களுக்கு மனசாட்சியை இல்லையா? எனக் கூறி வீடியோவை பதிவு செய்தார்.

இந்த வீடியோவை பார்த்த கம்பம் நகராட்சி சேர்மனின் கணவரும், திமுக முக்கிய பொருப்பில் உள்ள வழக்கறிஞருமான நெப்போலியன், த.வெ.க, எம்.எல்.ஏ-வுக்கு சில அறிவுரைகளை வழங்கி பதில் பதிவு செய்தார்.

தலைகீழ் ட்விஸ்ட்… தவெக-வை விழுங்கும் அதிமுக..? ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்..! அலறும் விஜய் ரசிகர்கள்!

”சட்டமன்ற உறுப்பினர் ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்பு நன்கு விசாரித்து உண்மை நிலை தெரிந்து பேச வேண்டும். விபத்து நடந்த அன்று அவர் விடுமுறையில் இருந்ததால் விஷயம் உடனடியாக தெரியவில்லை. தெரிந்த உடன் கம்பம் நகராட்சி தூய்மை அதிகாரியும், தனியார் நிறுவன சூப்பர்வைசரும் உடனடியாக சென்று நகராட்சி சார்பில் இறுதி மரியாதை செலுத்திவிட்டு இறுதிச்சடங்கு செய்வதற்கான தொகையை அவர் குடும்பத்தினரிடம் வழங்கிவிட்டு, இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் அரசு தரப்பில்(தாட்கோ) மூலம், அவர் பணியாற்றிய நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் EPF ஆகியவற்றை பெற்றுத் தருவதாக உறுதியளித்து வந்துள்ளார்.

இதையும் படியுங்க  "50 வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு இதுதான்! - தவெக-வில் ஏன் இணைந்தேன்? உண்மைகளை உடைத்த செங்கோட்டையன்!"

கம்பம் நகராட்சி சேர்மன் வனிதா துரைநெப்போலியன் , அவரது கணவர் துரைநெப்போலியன்.

இந்த உண்மையை மறைத்து மக்களுக்கு தவறான தகவலை ரீல்ஸ்க்காக தெரிவிகக் கூடாது. அரசியல் எல்லோருக்கும் பொதுவானது. பொது வெளியில் நாகரீகமாக நடந்து கொள்வது என்பது அனைவருக்கும் பொதுவானது” என பதிவு செய்ததுடன் நகராட்சி நிர்வாகத்தினர் இறுதி மறியாதை செய்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் த.வெ.க எம்.எல்.ஏ. ஜெகனாத் மிஸ்ரா தனது சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை முனைப்புடன் செய்து வரும் சூழலில் சில விடயங்களில் உண்மை நிலை தெரியாமல் ரீல்ஸ் வெளியிடுவதை விடுத்து, மக்களுக்கு தொடர்ந்து நல திட்டபணிகளை மேற்கொள்ள வேண்டும் என கம்பம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் : த, முத்துவெளியப்பன்.

“வேலியே பயிரை மேய்ந்த கதை: ₹20 கோடி கோல்டு காயின் மோசடி… விடிந்ததும் கைதான ராயபுரம் லேடி இன்ஸ்பெக்டர்!”

2 thoughts on “ரீல்ஸ் போட்டு பல்ப் வாங்கிய தவெக எம்.எல்.ஏ… ஆதாரத்தோடு திமுக கொடுத்த சவுக்கடி பதில்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago