Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rupees

உடலில் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக பெருகும் செல்கள் ஆரோக்கியமான திசுக்களை அழித்து உடல் முழுவதும் பரவும் கொடிய நோய்தான் கேன்சர். அதனால் நோயாளிக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக குடும்பத்தையே தலைக்கீழாக மாற்றிவிடும்.

தனக்கு புற்றுநோய் வந்துவிட்டது என கண்டறியப்பட்ட நொடியிலிருந்து உயிரை குடிக்கும் ரண வலியுடன் பொருளாதார சிதைவும் சேர்ந்து அந்த நோயாளியை நிழலாக துரத்திக் கொண்டுதான் இருக்கும். அறுவை சிகிச்சை, கீமோதெரப்பி இவை தொடங்கி பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பல லட்சம் வரை செலவாகும். அதிலும் ஆயிரக்கணக்கில் விற்கும் மருந்துகளை வாங்குவதில் நடுத்தர குடும்பங்களுக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கும் திண்டாட்டம்தான்.

இந்த சூழலில் புற்று நோயாளிகளின் பொருளாதார சுமையை சற்று இறக்கி வைக்கும் வகையில் கேன்சர்களின் மருந்துகள் விலையை மத்திய அரசு குறைத்திருக்கிறது. புற்றுநோய் மருந்து விலையை கட்டுப்படுத்துதல் தொடர்பான மனு விசாரணையின் போது பகல் கொள்ளை படுகொலைக்கு சமம் என உச்சநீதிமன்றம் கடுமையாக சாடி இருந்த நிலையில் புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச செல்லறை விலையில் 30%த்துக்கும் மேல் லாபம் பெறக்கூடாது என வரம்பு நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதையும் படியுங்க  ”ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு புற்றுநோய்! தமிழ்நாட்டை உலுக்கும் அதிர்ச்சித் தகவல்! சென்னை முதலிடமா?
Republic Tamil

அதனை அடுத்து, 543 புற்றுநோய் மருந்துகளின் சில்லற விலையை 90% வரை குறைத்து, தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணயம், விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் மார்பக புற்று நோய்க்கான பல்போஸ்லி கிளிப் மருந்து ₹40,000யிலிருந்து 272 ஆகவும் அனார்சோல் மருந்து ₹695யலிருந்து ₹73யாகவும் குறைக்கப்படுகிறது.

கேன்சரின் முக்கிய சிகிச்சையான கீமோதெரப்பிக்கான தியோட்டப்பா மருந்தின் விலை ₹80,000யிலிருந்து ₹7150யாக குறைக்கப்படுகிறது. கேன்சர் நோயின் போது, எலும்பு பாதிப்பை தடுக்கும் மருந்தாக உள்ள டெப்ரூமாப் ஊசி 2₹2,031ய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அது ₹5,930க விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்த புற்று நோய்க்கான மருந்து டெசட் 20812யிலிருந்து ₹85ஆகவும் பெவாசிசப் மருந்தின் விலை 21,767யலிருந்து ₹5930ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை குறைப்பு நவம்பர் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முன்பெல்லாம் எங்கோ ஒருரு இடங்களில் ஒன்று இரண்டு பேர் கேன்சரால் பாதிக்கப்படுவர். ஆனால், தற்போதைய வாழ்வியல் சூழலில் கேன்சரால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்த கேன்சர் தரும் உபாதையை விட பொருளாதார பெரும் சுமையை தூக்கிச் சுமப்பதே நோயாளிகளை வாட்டி வதைக்கும் நிலையில் இந்த மருந்துகளின் விலை குறைவால் உரிய நேரத்தில் மருந்துகளை உட்கொண்டு தங்கள் ஆயுட்காலத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள பேருதவியாக இருக்கும் என பலரும் நம்புகின்றனர்.

இதையும் படியுங்க  6G உலகத்துக்கே ராஜா நாமதான்..! 12 மாசத்துல பெரிய ஆட்டம் இருக்கு.. ! 24 நாடுகளுடன் இணைந்து மாஸ் காட்டும் இந்தியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 hours ago at 8 hours ago