Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Shanmugapriya

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய ரூ. 100 கோடி தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு மற்றும் லஞ்ச வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

சண்முகப்பிரியா சென்னையில் துணிக்கடை மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வரும் ஒரு பெண் தொழில்முனைவோர். லஞ்சப் பணத்தைக் கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட ஓட்டுநர் உமாசங்கர் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சண்முகப்பிரியாவின் பெயர் முதன்முதலில் அடிபட்டது. லஞ்சமாகப் பெறப்பட்ட பெரும் தொகை, ஓட்டுநர் மூலம் சென்னை பெருங்குடியில் உள்ள சண்முகப்பிரியாவின் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணம் சண்முகப்பிரியாவின் ஜவுளி வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டதா, அல்லது வேறு வழிகளில் கைமாறியதா என்ற பணப் பரிமாற்றம் குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Anbil mahesh

இந்நிலையில் சண்முகப் பிரியா-அன்பில் மகேஷ்- உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ள நெருக்கம் பற்றி எக்ஸ் தளப்பதிவில் சுபேஷ் என்பவர் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அவரது பதிவில், ”சண்முகப்பிரியா… பல படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர். உதய நிதிக்கு மிக நெருக்கமானவர். அன்பில் மகேஷுக்கு மிக மிக நெருக்கமானவர். 2018 களின் இறுதிப்பகுதி. ஏஞ்சல் என ஒரு திரைப்படம். இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், பயல் ராஜ்புத் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடிப்பில்.. ராம் சரவணன் தயாரிக்கிறார். OSD Films.

இதையும் படியுங்க  ரைடு பயத்தில் மாஜி-க்கள்… தன்மானப் பிரச்சினையாக மாறிய இடைத்தேர்தல்: ஸ்டாலினிடம் ஓடிய உதயநிதி..!

பிஜி தீவுகளின் தலைநகரமான சுவா, நவுவா மற்றும் மமனுக்கா தீவுகள் போன்ற அழகிய கடற்கரை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 7 வாரங்கள் நடைபெற்றது.

பிஜியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்த இந்த 7 வாரமும் அன்பில் மகேஷும், நான்கு நண்பர்களும், உதயநிதி கூடவே இருந்தனர். கும்மி அடித்தனர். அதில் சண்முகப்பிரியாவும் ஒருவர். படத்துக்கு காஸ்டியும் டிசைனர்ன்னு பேரு. 20 லட்சம் ரூபா சம்பளம்.

Shanmuga priya

ஷண்முகப் ப்ரியா இந்த படத்தில் ஒரு பிட்டு துணிகூட எடுத்து தைச்சதில்லை. உதயநிதிக்கு இரண்டரை கோடி சம்பளம். 5 பேர் சும்மா உட்கார்ந்து பிஜி தீவில் நல்லா குடித்து விட்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்தார்கள்.
தயாரிப்பாளருக்கு 17 கோடி செலவு. நடு ரோடு.

7 நாள் படப்பிடிக்கு இருக்க கொரோனா. அது முடிய உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலில் ஈடுபட்டு ‘மாமன்னன்’ படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையை நிறைவு செய்வதாக அறிவித்ததால், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதையும் படியுங்க  "3.70 லட்சம் புகார்கள்.. மின்கட்டணக் குளறுபடியால் திணறும் மக்கள்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த நெருக்கடி!"

7 நாள் சூட்டிங்தான். தயாரிப்பாளருக்கு 17 கோடி செலவு. ”ப்ளீஸ் சார்.. முடிச்சுக்குடுங்க”ன்னு கேட்ட மனுசனை நாயை விட கேவலமா மதித்து அவரை ஒதுக்கி அவர் மேல் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளும் நிலமையில் நிக்க வைத்தது இந்த சண்முகப்பிரியா உட்பட அந்த ஜவர் டீம்தான்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் ராம் சரவணன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த மாதிரி பலவிஷயங்களில் உதயநிதிக்கும், அன்பிலுக்கும் மிகமிக நெருக்கமானவர்தான் இந்த சண்முகப்பிரியா.

சண்முகப்பிரியாவுக்கு பின்புலமாக, பாதுகாப்பு அரணாக திமுக நிற்கும். அந்தளவு செல்வாக்கானவர் சண்முகப்பிரியா. உதயநிதி சார் நண்பர்கள் எல்லாம் தறுதலைகள். வாட்ச் விக்ரம், ஆகாஷ், கூட்டிக்கொடுக்கிற சதீஸ், ரத்திஷ், வாலாடி கார்த்தி வரிசையில் சண்முகப்பிரியா’

Shanmugapriya

ஏழை ஒருவேளை சோற்றுக்கு கிட்னியை விற்கிறான். ஸ்டாலின் கலைஞருக்கு 80 கோடியில் பேனா சிலை வைப்பேன் என்றார். உதயநிதி, நிவேதா பெத்துராஜுக்காக கார் ரேஸையே நடத்தினார். 50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்தார். கூட பார்ட்டியில் குடித்து விட்டு ஆடிய நடிகைகளுக்கு 30 லட்சத்தில் காண்ட் பேக் வாங்கி கொடுத்தார். சபரீசன் 33 கோடிக்கு வாட்ச் கட்டுகிறார்.

இதையும் படியுங்க  'கருப்பு' ரிலீஸில் திடீர் பிரச்சனை! உருக்கமாக பேசிய R.J. பாலாஜி

இப்போது அன்பில் மகேஷ் பல நூறு கோடியை அடித்து அதில் பாதிய கூத்தடிக்க சண்முகப்பிரியாவுக்கு கொடுத்திருக்கிறார். எவ்வளவு பணத்திமிர் இருந்தால் இதெல்லாம் செய்வார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago