உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் யார் பாஸ்? எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜக்கர்பெர்க் அல்லது பில் கேட்ஸ். உங்க பதிலும் இதுதானா? அப்படியானால் நீங்கள் தப்பு கணக்கு போடுறீங்கன்னு அர்த்தம். நிஜத்தில் இவர்களை விட 10 மடங்கு பவர்ஃபுல்லான சில ரகசிய குடும்பங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள்.
இவர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிடுவதோ, ஃபோர்ப்ஸ் இதழின் அட்டைப்படங்களில் தோன்றுவதோ அல்லது ஆடம்பர கார்களைக் காட்டி விளம்பரப்படுத்துவதோ இல்லை. மாறாக, சாமானிய மனிதர்களின் அன்றாடத் தேவைகளான பெட்ரோல், அழகுசாதனப் பொருட்கள், உணவு, இணையம் ஆகியவற்றின் மூலமாகத் தொடர்ந்து பணம் ஈட்டி வருகின்றனர். சில நாடுகளின் மொத்த பட்ஜெட்டை விட அதிக வருமானம் ஈட்டும் அந்த 8 சக்திவாய்ந்த குடும்பங்களைப் பற்றி விரிவாகக் கீழே காண்போம்.
ரோத்சச்சைல்ட் குடும்பம்
நிதிச் சந்தை, வங்கித் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் ரோத்சச்சைல்ட் குடும்பத்தின் சொத்து மதிப்பை இதுவரை எந்தவொரு சர்வதேச ஊடகத்தாலும் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. ஏனென்றால், அந்த ஊடக நிறுவனங்களுக்கே கடன் வழங்கும் அமைப்புகளை இவர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மேயர் ஆம்ஷல் ரோத்சச்சைல்ட் என்பவர் தனது ஐந்து மகன்களை ஐரோப்பாவின் முக்கிய 5 நாடுகளுக்கு அனுப்பி பிரம்மாண்டமான நிதி நெட்வொர்க்கை உருவாக்கினார்.
போர்கள், சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை அரசாங்கங்களுக்கு முன்பாகவே அறிந்துகொண்டு சந்தையைக் கட்டுப்படுத்தினர். போர் நடக்கும் இரு பக்கங்களுக்கும் நிதியுதவி அளித்து லாபம் ஈட்டும் உத்தியை இவர்கள் கையாண்டனர்.
வங்கிகள், ரயில்வே துறைகள் மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அபூர்வமான வைன் எஸ்டேட்டுகளையும் (Wine Estates) இவர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
அல் சவுத் குடும்பம்
உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றான சவுதி அராம்கோ (Saudi Aramco), சவுதி அரேபியாவின் ராஜ குடும்பமான அல் சவுத் குடும்பத்திற்குச் சொந்தமானது. உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் பெருமளவிலான வருவாயை இவர்கள் ஈட்டுகின்றனர். உலகச் சந்தையில் பெட்ரோல் தேவை மற்றும் விலையேற்றங்கள் இவர்களின் வருமானத்தை நேரடியாக உயர்த்துகின்றன.
கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க, சுமார் 500 பில்லியன் டாலர் (சுமார் ₹40 லட்சம் கோடி) மதிப்பில் நியோம் (NEOM) எனும் எதிர்கால நகரத்தை பாலைவனத்தின் நடுவே உருவாக்கி வருகின்றனர்.
கிரவுண்ட் குடும்பம்
ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகளில் அடிபடாத இந்தக் குடும்பம், பொதுமக்களுக்கான நுகர்பொருட்களை விற்காமல் அரசாங்கங்களுக்கான பாதுகாப்புச் சாதனங்களை விற்பனை செய்கிறது.
அமெரிக்க அரசாங்கத்திற்குக் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ராணுவ ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தில் முக்கியப் பங்குகளைக் கொண்டுள்ளனர். இவர்களின் வாடிக்கையாளர்கள் சாமானிய மக்கள் அல்லர். வல்லரசு நாடுகளின் அரசாங்கங்களே. அதேவேளையில், ‘ஆஸ்பென்’ போன்ற எலைட் ஸ்கை ரிசார்ட்டுகளையும் இவர்கள் நிர்வகிக்கின்றனர். அங்கு உலகத் தலைவர்களும் முதலீட்டாளர்களும் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.
மார்ஸ் குடும்பம்
ஸ்னிக்கர்ஸ் (Snickers), ட்விக்ஸ் (Twix), மார்ஸ் (Mars) போன்ற சாக்லேட் பார்களைத் தயாரிக்கும் மார்ஸ் குடும்பம், மனிதர்களின் உணவுப் பழக்கம் மற்றும் செல்லப்பிராணிகளின் எமோஷனல் அட்டாச்மென்ட் ஆகியவற்றைப் பின்னணியாக வைத்து வணிகம் செய்கிறது.
மனிதர்கள் விருப்பப்படும்போது மட்டுமே சாக்லேட் வாங்குவார்கள். ஆனால், வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவை தினமும் வாங்கி ஆக வேண்டும். பெடிகிரி (Pedigree), விஸ்காஸ் (Whiskies), ராயல் கானின் (Royal Canin) போன்ற உலகப் புகழ்பெற்ற செல்லப்பிராணி உணவு பிராண்டுகள் இவர்களுடையதே.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வெட்டர்னரி மருத்துவமனைகளையும் இவர்களே நிர்வகிக்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் 65 பில்லியன் டாலர் (சுமார் ₹5 லட்சம் கோடி) வருவாய் ஈட்டுகின்றனர்.
அம்பானி குடும்பம்
இந்தியாவின் முன்னணித் தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பின்னால் இருக்கும் அம்பானி குடும்பம், தங்கள் பிரம்மாண்டமான வாழ்க்கை முறையினாலும், டிஜிட்டல் புரட்சியினாலும் உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதிக்கு அருகில், சுமார் ₹16,000 கோடி செலவில் கட்டப்பட்ட 27 மாடிகள் கொண்ட ‘ஆண்டிலியா’ (Antilia) இல்லம் இவர்களின் பொருளாதாரப் பலத்திற்குச் சான்றாகும். ‘ஜியோ’ (Jio) அமைப்பின் மூலம் குறைந்த விலையில் இணையச் சேவையை வழங்கி, கோடிக்கணக்கான மக்களின் இணையப் பயன்பாட்டுப் பழக்கத்தை மாற்றியமைத்தனர். எளிய ரீசார்ஜ் கட்டணங்கள் மூலம் மிகப்பெரிய சந்தையைக் கட்டுப்படுத்தும் உத்தியை இவர்கள் கையாள்கின்றனர்.
வால்டன் குடும்பம்
ஆடம்பரமான ஷோரூம்களுக்குப் பதிலாக, குறைந்த விலை மற்றும் தள்ளுபடி எனும் கொள்கையை முதன்மையாக வைத்துச் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் வால்டன் குடும்பத்தினர்.
இவர்களின் வால்மார்ட் அங்காடி சங்கிலி, மக்களிடம் உள்ள ‘பணத்தைச் சேமிக்க வேண்டும்’ என்ற உளவியலை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வால்மார்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம் 681 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது பல சிறிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது. குறைந்த லாப வரம்பில் அதிக அளவிலான விற்பனை செய்வதே இவர்களின் வெற்றிக்கான ரகசியம்.
அர்னால்ட் குடும்பம்
வால்மார்ட் குடும்பத்திற்கு நேர்மாறாக, சாதாரண மக்களுக்கு எட்டாத ஆடம்பரத்தையும், சமூக அந்தஸ்தையும் விற்றுப் பணம் ஈட்டுபவர்கள் அர்னால்ட் குடும்பத்தினர். எல்.வி.எம்.ஹெச் (LVMH) குழுமத்தின் கீழ் லூயி விட்டான் (Louis Vuitton), டியோர் (Dior), பல்காரி (Bulgari), டிப்பனி (Tiffany) போன்ற உலகின் டாப் லக்சரி பிராண்டுகள் வருகின்றன.
இவர்கள் பொருட்களின் பயன்பாட்டு மதிப்பைத் தாண்டி, வாங்குபவரின் ‘சமூக அந்தஸ்தை’ விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெருமளவிலான லாப வரம்பை ஈட்டி உலகக் குபேரர்களாகத் திகழ்கின்றனர்.
பெட்டன்கோர்ட் மேயர்ஸ் குடும்பம்
ஆடம்பரப் பொருட்களை விடத் தினமும் தீர்ந்துபோகும் அழகுசாதனப் பொருட்களைத் தொடர்ந்து விற்பனை செய்வதன் மூலம் இக்குடும்பம் உச்சத்தை அடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பியூட்டி பிராண்டான லோரியல் (L’Oréal) நிறுவனத்தின் பின்னணியில் இக்குடும்பம் உள்ளது. “இன்னும் அழகாகவும் இளமையாகவும் தெரிய வேண்டும்” என்ற மனிதனின் இயல்பான ஆசையையே முதலீடாகக் கொண்டு, எளிய ஃபேஸ் வாஷ் முதல் ஆடம்பர வாசனைத் திரவியங்கள் வரை வணிகப் பிணையலை உருவாக்கியுள்ளனர்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த ஃபிரான்சுவாஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண்மணியாகச் சரித்திரம் சரித்திரம் படைத்துள்ளார்.
ஒரு மனுஷன் தன்னிடம் இருக்கிற இன்செக்யூரிட்டியை கவர் செய்ய வேண்டும் என நினைக்கிற ஃபீலிங் தான் இவர்களுக்கான கற்பக விருட்சம். இந்த எட்டு குடும்பங்களை பற்றி தெரிந்து கொண்டதற்கு பிறகு ஒரு முறை யோசித்துப் பாருங்கள். உலகத்தை நிஜமாவே அரசியல்வாதிகள் தான் ஆட்சி செய்கிறார்களா?இல்ல நம்ம அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிற இந்த சக்தி வாய்ந்த வியாபார குடும்பங்களா..?
