Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Murder

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில், கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான 19 வயது இளைஞர், செலவுக்குப் பணம் தர மறுத்த தனது பெற்ற தாயைக் கத்தியால் குத்தியும், இரும்புப் பட்டையால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சித்தன் (50), கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சின்னபாப்பா (42). இந்தத் தம்பதியின் மகன் தேவராஜ் (19), கூலி வேலை செய்து வந்துள்ளார். தேவராஜ் சிறுவயது முதலே கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.

காவலரின் தொப்பியை அணிந்து ரகளையில் ஈடுபட்டவர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, போதை மயக்கத்தில் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தேவராஜ், அங்கிருந்த காவலர் ஒருவரின் தொப்பியைப் பிடுங்கி அணிந்துகொண்டு அட்டகாசம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இண்டூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட தேவராஜ், சுமார் மூன்று மாதங்கள் சிறையில் இருந்ததாகத் தெரிகிறது.

இதையும் படியுங்க  "52 வழக்குகள்… ஜெயிலருக்கே ஸ்கெட்ச்… சொகுசு ஓட்டலில் துப்பாக்கி முனையில் வீழ்ந்த வடசென்னை தாதா!"

இதையடுத்து, அவரது தாய் சின்னபாப்பா மகனை ஜாமீனில் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். அண்மையில் சிறையிலிருந்து வெளியே வந்த தேவராஜ், மீண்டும் போதைப் பழக்கத்திற்காகப் பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்துள்ளார்.

ரூ.200 தர மறுத்ததால் கொடூரத் தாக்குதல்

அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, போதை மயக்கத்தில் இருந்த தேவராஜ் தனது தாய் சின்னபாப்பாவிடம் ரூ.200 கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தேவராஜ் வீட்டில் இருந்த கத்தி மற்றும் இரும்புப் பட்டையை எடுத்துத் தனது தாயைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கத்தியால் குத்தியும், இரும்புப் பட்டையால் அடித்தும் கொடூரமாகத் தாக்கியதில் சின்னபாப்பா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் – அருகிலேயே நின்ற மகன்

தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தபோது, சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். தேவராஜ் கையில் இரும்புப் பட்டையுடன் அவரது உடலுக்கு அருகிலேயே நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "அவ எனக்கு மட்டும்தான் சொந்தம்!" – அடுத்தவன் பொண்டாட்டிக்கு போட்டாபோட்டி..! வேலூரில் பெயிண்டருக்கு நேர்ந்த ட்விஸ்ட்..!

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இண்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சின்னபாப்பாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாயைக் கொலை செய்த பின்னரும் தேவராஜ் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்காமல், போதை மயக்கத்தில் ஆயுதத்துடன் அங்கேயே நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் கையும் களவுமாகப் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தருமபுரி மாவட்ட காவல்துறையினர் தேவராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் இரும்புப் பட்டை உள்ளிட்ட பொருட்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா மற்றும் மது போன்ற போதைப் பழக்கங்களால் ஏற்பட்டதாகக் கூறப்படும் குடும்பத் தகராறு, பெற்ற தாயின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  சொல்லவே வெட்கக்கேடு.. கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு.. ரவுண்ட் கட்டி அடிக்கும் டிடிவி.தினகரன்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago