Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TrishaOplus_16908288

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வெறும் இடைத்தேர்தல் அல்ல. தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றப்போகும் சதுரங்க ஆட்டம். இந்த ஆட்டத்தின் பகடைக்காயாக மாறப்போவது யார் தெரியுமா? நடிகை திரிஷா!

ஆம். தவெக வேட்பாளராக திரிஷாவின் பெயரை முன்மொழிந்திருப்பது சாதாரண தவெக நிர்வாகி அல்ல. டெல்லியில் இருந்து வந்த அழுத்தம் என்கிறது உளவுத்துறை வட்டாரம். அந்த அழுத்தத்தின் பெயர்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

டெல்லி ஏன் திரிஷாவை விரும்புகிறது?

கடந்த மாதம் சென்னையில் நடந்த ரகசிய சந்திப்பில்தான் இந்த ‘ஸ்கிரிப்ட்’ எழுதப்பட்டதாக சொல்கிறார்கள். திமுகவை வீழ்த்த விஜய்யை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது பாஜகவின் கணக்கு. ஆனால், விஜய் தனித்து நின்று ஜெயித்துவிட்டால், நாளை பாஜகவுக்கே அவர் எதிரியாகிவிடுவார். அதனால், விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க டெல்லிக்கு ஒரு ‘கண்ணி’ தேவை.

அந்தக் கண்ணிதான் திரிஷா என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திரிஷாவுக்கு தேசிய அளவில் இருக்கும் இமேஜ், பெண் வாக்காளர்களிடம் இருக்கும் செல்வாக்கு, சர்ச்சைகள் இல்லாத ‘கிளீன்’ முகம்… இவை அனைத்தும் பாஜகவின் தேவைக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. திரிஷா வென்றால், அவர் மூலம் தவெகவுக்குள் ஒரு மறைமுக அதிகார மையத்தை உருவாக்கலாம் என்பது அமித்ஷாவின் தொலைநோக்குத் திட்டம்.

இது வெறும் ஊகம் அல்ல என்பதற்கு கடந்த சில மாதங்களாக திரிஷாவைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே சாட்சி!

இதையும் படியுங்க  புவி வெப்ப மாறுதலால் புதிய ஏரிகள் உருவாக்கம் இந்தியா போன்ற நாடுகள் இயற்கை பேரிடரில் சிக்கும்  விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கை..!

1. கோவை ரோடு ஷோ – அரசியல் ஒத்திகை!

கடந்த அக்டோபரில் கோவை காந்திபுரத்தில் தனியார் நிறுவன திறப்பு விழாவில் திரிஷா பங்கேற்றார். திறந்த காரில் நின்றபடி அவர் கையசைத்துச் சென்றபோது திரண்ட கூட்டம், அசப்பில் ஒரு அரசியல் ரோடு ஷோ போலவே இருந்தது. “கூட்டத்தைக் கூட்டும் சக்தி இருக்கிறதா என்று டெல்லி டெஸ்ட் செய்து பார்த்துவிட்டது” என்கிறார்கள்.

2. ‘மௌன’ புன்னகையில் ஒளிந்திருக்கும் சம்மதம்!

அதே கோவை நிகழ்வில் செய்தியாளர்கள், “அரசியலுக்கு வருவீர்களா?” என்று நேரடியாகக் கேட்டனர். திரிஷா மறுக்கவில்லை. புன்னகையை மட்டுமே பதிலாக்கினார். அரசியலில் இந்த மௌனத்திற்கு அர்த்தம் ‘சம்மதம்’ என்பதுதான். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, தவெக ஆதரவாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

3. பழைய வீடியோ, புதிய அர்த்தம்!

“தமிழக முதலமைச்சராக ஆசை” என்று திரிஷா பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் நகைச்சுவையாகச் சொன்ன வீடியோ இப்போது திட்டமிட்டு வைரலாக்கப்படுகிறது. இதன் பின்னணியில் தவெகவின் சமூக ஊடகப் பிரிவு இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் மனதில் ‘திரிஷா CM’ என்ற பிம்பத்தை விதைக்கும் முயற்சி இது.

4. மதுரை போஸ்டர்கள் – ஜெ. ஃபார்முலா!

இதையும் படியுங்க  "அவள்தான் என் உயிர்..!" புன்டா கானாவில் மலர்ந்த காதல்..! 72 வயது கோடீஸ்வர மூதாட்டியுடன் 22 வயது இளைஞர் திருமணம்!

மதுரையில் ‘திரிஷா நற்பணி மன்றம்’ சார்பில் அவரை அரசியலுக்கு அழைத்து பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து ஃபார்முலா இது. முதலில் ரசிகர் மன்றம், பிறகு அரசியல் என்ட்ரி. ஜெயலலிதா பாணியில் ஒரு பெண் தலைமையை தமிழகம் ஏற்கும் என்பது டெல்லியின் நம்பிக்கை.

ஜான் ஆரோக்கியசாமி ஏன் ஓரங்கட்டப்படுகிறார்?

திருச்சி தவெக மாவட்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஜான் ஆரோக்கியசாமிக்காகத்தான் விஜய்யிடம் பரிந்துரை செய்திருக்கிறார்கள். காரணம், அவர் உள்ளூர். பூத் ஏஜெண்டுகளை அவரால் திரட்ட முடியும். கிறிஸ்தவ, சிறுபான்மை வாக்குகளை உறுதி செய்ய முடியும்.

ஆனால், “ஜான் ஜெயித்தால் அது தவெகவின் வெற்றி. திரிஷா ஜெயித்தால் அது தேசிய வெற்றி” என்று டெல்லி தரப்பு விஜய்யிடம் கூறியதாக தகவல். திரிஷாவை நிறுத்தினால், தேர்தல் பிரச்சாரத்துக்கு தேசிய ஊடகங்கள் திருச்சியில் முகாமிடும். திமுகவுக்கு எதிரான அலை தமிழகம் முழுவதும் பரவும். இதுதான் அமித்ஷாவின் கணக்கு.

களம் சுத்தம் செய்யப்படுகிறதா? அன்பில் மகேஷ் கைதுக்கும் இதற்கும் தொடர்பா?

மிக முக்கியமான கேள்வி இதுதான். அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதும், கே.என். நேரு வீட்டில் நடந்த DVAC ரெய்டும் தற்செயலானதல்ல என்கிறார்கள்.

திரிஷா போன்ற ஸ்டார் வேட்பாளர் களமிறங்கும்போது, எதிர்த்தரப்பில் வலுவான களப்பணியாளர்கள் இருக்கக்கூடாது. திமுகவின் இரண்டு தூண்களையும் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்துவிட்டால், தேர்தல் களம் தவெகவுக்கு எளிதாகிவிடும். இந்த ‘களம் அமைத்துக் கொடுக்கும்’ வேலையைத்தான் தற்போதைய அதிகாரம் செய்து வருவதாக திமுக தலைமை குமுறுகிறது.

இதையும் படியுங்க  ''விஜய்க்கு அந்த அளவுக்கு நாலேட்ஜ் இல்ல..!'' அண்ணாமலை ஆடப்போகும் மாஸ் ஆட்டம்..!

“திரிஷாவை ஜெயிக்க வைக்க மத்திய அரசின் மறைமுக ஆதரவும், மாநில அரசின் அதிகார பலமும் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது தேர்தல் அல்ல, அறிவிக்கப்படாத அவசரநிலை” என்கிறார் திமுக மூத்த நிர்வாகி ஒருவர் பெயர் வெளியிட விரும்பாமல்.

விஜய்யின் தர்மசங்கடம்!

விஜய் இப்போது இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமியை நிறுத்தினால், கட்சிக்காரர்கள் மகிழ்வார்கள். ஆனால், டெல்லியின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும்.

திரிஷாவை நிறுத்தினால், டெல்லியின் ஆசி கிடைக்கும். தேசிய அளவில் தவெகவுக்கு பெரும் விளம்பரம் கிடைக்கும். ஆனால், ‘விஜய் டெல்லியின் பொம்மை’ என்ற விமர்சனத்தை திமுக முன்வைக்கும்.

ஆனால், விஜய்யின் நெருங்கிய வட்டாரம் சொல்வது வேறு: “தலைவர் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். திரிஷாதான் வேட்பாளர். அறிவிப்பு மட்டும்தான் பாக்கி. அமித்ஷாவின் விருப்பத்தை தலைவர் நிராகரிக்க மாட்டார்.”

திருச்சி கிழக்கில் திரிஷா களமிறங்கினால், அது தமிழக அரசியலில் சினிமா – அரசியல் – டெல்லி என்ற முக்கூட்டணியின் புதிய அத்தியாயமாக இருக்கும்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago