Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

6G NEtwork

6ஜி நெட்வொர்க் போட்டியில் முன்னணியில் இருப்பதற்காக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தின் புதிய இணையத் தொழில்நுட்பமான 6ஜியை உருவாக்கி, அதற்கான விதிகளை வகுக்க இந்தியா, அமெரிக்கா மற்றும் மேலும் 24 நாடுகள் இணைந்து செயல்படும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை கூறியுள்ளது. 6ஜியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா இனி ஒரு முக்கியப் பங்கை வகிக்கும்.

ஜி20 புத்தாக்க அமைச்சர்கள் மாநாட்டின் போது, ​​வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, அமெரிக்க வர்த்தகம், தொழில்துறை செயலாளர் ஹோவர்ட் லட்னிக்கை சந்தித்தார். அப்போது இருவரும் 6ஜி தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.

அமெரிக்கா உட்பட 24 நாடுகளுடன்
அமெரிக்க வர்த்தகத் துறை எக்ஸ்தளப்பதிவில், “எதிர்கால 6G இணையத் தொழில்நுட்பம் நமது பாதுகாப்பை உறுதிசெய்து, வணிகம், தொழில்நுட்பத்தில் நாட்டை முன்னோக்கிச் செலுத்தி, புத்தாக்கத்தை ஊக்குவிப்பதை உறுதி செய்வதற்காக, 6G-ஐ உருவாக்கும் பணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் 24 பிற நாடுகளுடன் இணைந்துள்ளது என்பதை இன்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  டிரம்பின் உதவியால் அதானிக்கு க்ளீன் சிட்..! அமெரிக்க நீதிமன்றத்தில் ரூ.2600 கோடியில் ஆடிய மாஸ்டர் கேம்..!

அமெரிக்காவின் மியாமியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில் இந்தத்தகவல் வெளியாகி உள்ளது. இதில், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பல அமைச்சர் மட்டத்திலான கூட்டங்களில் பங்கேற்றார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கத் தொலைத்தொடர்பு முகமையால் தொடங்கப்பட்ட ‘6G தலைமைத்துவம், பாதுகாப்பு முன்முயற்சியில் இந்தியா ஒரு அங்கமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவும் மீதமுள்ள 25 நாடுகளும் அடுத்த 12 மாதங்களுக்கு இணைந்து ஒரு பாதுகாப்பான, வலுவான, நம்பகமான 6G நெட்வொர்க் உள்கட்டமைப்பை உருவாக்கும். இந்தக் கூட்டாண்மையின் நோக்கம், 6ஜி வலையமைப்புகளில் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், வெவ்வேறு நிறுவனங்களின் சாதனங்களை எளிதாக ஒன்றிணைப்பதை சாத்தியமாக்குவதும், வலையமைப்பை நிர்வகிக்கப் பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதும் ஆகும்.

உலக அளவில் மையமாக மாறும் ‘இந்தியா 6ஜி இயக்கம்’
இந்தியா தனது ‘இந்தியா 6ஜி இயக்கம்’ மூலம் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஒரு உலகளாவிய மையமாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. 6ஜியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய காப்புரிமைகள், உபகரணங்கள், மலிவு விலைத் தொலைத்தொடர்புப் பொருட்களை உருவாக்கி அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்வதும் இந்தியாவின் இலக்காகும்.

இதையும் படியுங்க  "'கட்டாய உழைப்பு' விவகாரம்: உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! அதிரடி சுங்க வரி விதிப்பு!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago