பல டன் தங்கத்தை அவசர அவசரமாக ரஷ்யா விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தங்கத்தை சீனா தான் வாங்கி குவித்து வருகின்றன. இதனால் தங்கத்தின் விலை மாறப் போகிறதா? மக்கள் நினைப்பது கனவில் கூட நடக்காது என பல்வேறு நிபுணர்கள் சொல்வது ஏன்? விரிவாக பார்க்கலாம்.
எந்த ஒரு நாட்டின் மத்திய வங்கி அதிக தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறதோ அதனை பொறுத்து அதன் பலம் அமைகின்றது. தங்கத்தின் மதிப்பு எப்போதும் நிலைத்திருப்பதால் அது அந்த நாட்டிற்கு மிகப்பெரிய கவசமாக செயல்படுகின்றது. மேலும் பண வீக்கம் அதிகரிக்கும் காலங்களில் பணத்தின் வாங்கும் திறன் குறைவதால் தங்கம் முதலீட்டின் மதிப்பை பாதுகாக்க உதவும் ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

இதனால் தான் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மாதிரியான உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளன. குறிப்பாக தங்கத்தை அதிகம் வைத்துள்ள நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. இப்படியான சூழ்நிலையில் தங்களது தங்க கையிருப்பை பெருமளவில் சீனாவுக்கு ரஷ்யா விற்பனை செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரின் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ரஷ்யா பாதுகாப்பு துறை மற்றும் ராணுவ செலவினங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க 2026 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் தனது இருப்பிலிருந்து சுமார் 62 டன் அளவில் தங்கத்தை சீனாவிற்கு ரஷ்யா விற்பனை செய்து உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 6.2 டன் தங்கத்தை விற்பனை செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. லண்டன் சந்தைக்கு பதிலாக ஹாங்காங் வழியாக இந்த தங்க விற்பனை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. செல்லும் தங்கத்தின் அளவு முந்தைய ஆண்டை விட கிட்டதட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலர் மீதான சார்பை குறைக்கவும் அந்நிய செலாவணி இருப்பை வலுப்படுத்தவும் சீனா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் உலக அளவில் தங்கம் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்படாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் கடந்த 2024ல் 25% வரை ஏறிய தங்கம் விலை 2025-ல் 67 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் 2026 இல் நான்கு சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இது சாதாரண சரிதான். வரும் காலங்களில் தங்கத்தின் சரிவு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். அது பெரும்பாலும் நடக்காது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
