Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

புவி வெப்பமயமாதலால் . உலகம் முழுவதும் புதிதாக 56,659 ஏரிகள் உருவாகியுள்ளன!

புவி வெப்பமயமாதலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் புதிதாக 56 ஆயிரத்து 659 ஏரிகள் உருவாகியிருப்பதாக சமீபத்திய அறிவியல் ஆய்வு அதிர்ச்சி தகவலால் தெரியவந்துள்ளது

துருவப் பகுதிகள் இமயமலை போன்ற உயரமான மலைப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், உருகும் நீர் பள்ளத்தாக்குகளில் தேங்கி புதிய ஏரிகளாக உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செயற்கைக்கோள் படங்களின் ஆய்வில் கண்டறியப்பட்ட இந்த புதிய ஏரிகள், எதிர்காலத்தில் இப்பகுதியை ஒட்டியுள்ள மாநிலங்களில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரிகளின் கரைகள் பனி மற்றும் பாறைக் கழிவுகளால் இயற்கையாக உருவானவை என்பதால், அவை மிகவும் பலவீனமாக உள்ளன. நிலநடுக்கம் அல்லது நீர்மட்டம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இயற்கை அணைகள் உடைந்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  The tapered oval form suits properly against the vulva

இதனால் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும், லட்சக்கணக்கான மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, புதிதாக உருவாகியுள்ள ஏரிகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, ஆபத்தான ஏரிகளில் இருந்து நீரை பாதுகாப்பாக வெளியேற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உலக விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புவி வெப்பமயமாதலின் தீவிர விளைவுகளை உணர்ந்து, அனைத்து நாடுகளுக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago