Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் திரைமறைவில் நடக்கும் நிழல் யுத்தங்களும் ‘டீலிங்’குகளும் எப்போதும் சாமானியர்களின் கற்பனைக்கு எட்டாதவை. மேடைகளில் மைக் பிடித்து, “தீயசக்தி… ஊழல் சக்தி…” என எதிர்க்கட்சியான தி.மு.க-வை நோக்கிச் சிங்கம் போல உருமும் முதலமைச்சர் விஜய், திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துதான் இருக்கிறாரா? அல்லது அவரது பெயரைக் கெடுக்க, அவருக்கு மிக நெருக்கமானவர்களே தி.மு.க முகாமோடு கைகோர்த்து ‘மெகா டீல்’ போட்டு வருகிறார்களா? என்ற பகீர் கேள்வி த.வெ.க-வின் உள்வட்டாரத்திலேயே தற்பொழுது பலமாகப் புகைச்சலைக் கிளப்பி வருகிறது.

விஷ்ணு ரெட்டி லாபி… சபரீசன் – உதயநிதி கூட்டணி
முதலமைச்சர் விஜய்யின் கல்லூரி காலத்துத் தோழரும், தற்போது முதலமைச்சர் அலுவலகத்தின் பொது நிகழ்வுகள், பொது விவகாரங்களுக்கான அரசு அதிகாரப்பூர்வ ஆலோசகருமான விஷ்ணு ரெட்டியைச் சுற்றித்தான் இந்த ஒட்டுமொத்தப் புகாரும் சுழல்கிறது.

கோட்டை வட்டாரத்தில் தற்பொழுது கசிந்துள்ள தகவல்களின்படி, விஷ்ணு ரெட்டியின் மைத்துனர், தி.மு.க-வின் மிக முக்கியத் தூண்களான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் மிக நெருக்கமான நட்பு வளையத்திற்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  “மும்மொழி கட்டாயமா?.. மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை!”

“2029-ல் ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ உறுதி? ₹7 லட்சம் கோடி மிச்சம்.. நாடாளுமன்றக் குழுவின் மாஸ் அப்டேட்!”

இந்த அண்டர்கிரவுண்ட் பாலம் வழியாகவே, சபரீசன் தனக்கு வேண்டிய முக்கிய அதிகாரிகளுக்கு த.வெ.க அரசில் ‘டாப்’ பதவிகளை விஷ்ணு ரெட்டியின் மைத்துனர் மூலமாகக் கச்சிதமாக ‘ரூட்’ போட்டு வாங்கிக் கொடுத்திருப்பதாகத் தற்பொழுது தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.

தீயசக்தி முழக்கம்… திரைமறைவு நாடகம்
சமீபத்தில் த.வெ.க அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் சபரீசனுக்கு எதிராகப் பல ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்க, அதற்குப் பதிலாகச் சபரீசன் தரப்பில் இருந்து அவர்களுக்கு அவதூறு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது வரை அரசியல் களம் அனல் பறந்தது. இப்படி வெளியில் இரு கட்சிகளும் லெப்ட்-ரைட் வாங்கிக் கொள்ளும் வேளையில், உள்ளே இப்படி ஒரு அதிகாரப்பூர்வ டீலிங் ஓடிக் கொண்டிருப்பதுதான் த.வெ.க தொண்டர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்… சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!

இதையும் படியுங்க  அறிவாலயத்தில் மெகா 'ஆபரேஷன்'..! திமுக எடுத்த அதிரடி முடிவு..! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்..!

“அதிகாரிகள் நியமனம் மட்டுமன்றி, இன்னும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பின்னணி விவகாரங்களும், ஒப்பந்தங்களும் இந்த இரு முகாம்களுக்கும் இடையே மிக ரகசியமாகப் பேசி முடிக்கப்படுவதாகக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. வெளியில் பொது மேடைகளில் தி.மு.க-வை சவால் விடும் முதலமைச்சர் விஜய், உள்ளே நடக்கும் இந்த விசுவாச துரோகங்களை கவனிக்கத் தவறிவிட்டாரா?” என்று சீனியர் த.வெ.க நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஏமாற்றப்படுகிறாரா விஜய்?
களத்தில் இறங்கித் தீவிரமாக உழைத்துக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த த.வெ.க-வின் தம்பிகள் தற்பொழுது பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த அண்டர்கிரவுண்ட் லாபி மற்றும் ‘மெகா டீல்கள்’ முதலமைச்சர் விஜய்க்குத் தெரிந்துதான் நடக்கிறதா, அல்லது தனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் விஷ்ணு ரெட்டியை விஜய் குருட்டுத்தனமாக நம்பி ஏமாறுகிறாரா? என்ற விவாதம் கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது.

“எங்கே உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சுப்பாருங்க..? விஜய்க்கு செக்.. தவெக-வை திணறடிக்கும் பெண் ஐஏஎஸ்..!

நேர்மையான அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, எதிர்க்கட்சி முகாமுக்கு விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளைத் தூக்கிப் பிடிக்கும் இந்த ‘நண்பர்கள் லாபி’க்கு முதலமைச்சர் விஜய் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல்லையெனில், த.வெ.க அரசின் நம்பகத்தன்மை சாமானிய மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகிவிடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். கோட்டைக்குள் புகுந்துள்ள இந்த நிழல் மனிதர்களை முதலமைச்சர் விஜய் எப்படி வேட்டையாடப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்க  “கட்சி தாவலை ஊக்குவிக்கிறதா தவெக? பி. சண்முகம் சரமாரி விமர்சனம்!”
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago