Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் எப்போது உயரும், எப்போது குறையும் என்பது சாமானிய மக்களுக்குப் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஆனால், தற்பொழுது எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரக் கட்டணம் தாறுமாறாக, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எகிறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சத்தமில்லாமல் போயிருக்கலாம், ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழகக் காவல்துறையின் டாப் அதிகாரிகளுக்கே இந்த ‘மின்கட்டண ஷாக்’ விஷயம் தற்பொழுது கோட்டை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

விசிட் அடித்த போலீஸ் அதிகாரிகள்
கடந்த சில நாட்களாகச் சென்னையில் உள்ள மின்சாரத் துறையின் தலைமை அலுவலகத்திற்குச் சில முக்கியக் காவல் துறை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ‘விசிட்’ அடித்துள்ளனர். காரணம், சென்னையில் உள்ள காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் காவலர்களின் வீடுகளுக்கு, கடந்த முறையை விட இந்த முறை மின்சாரக் கட்டணம் அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்து வந்துள்ளது.

விஷயம் என்னவென்று காவல் அதிகாரிகள் மின்சார வாரியத்திடம் விசாரித்த போதுதான், இது காவலர் குடியிருப்புகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான “மறைமுகக் கட்டண உயர்வு” என்ற அதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது.

“₹1.80 கோடி மோசடி.. நடிகர் ஆர்யா மீது பாய்ந்த அதிரடி வழக்கு! பின்னணியில் இருக்கும் ‘அனந்தன் காடு’ பட ரகசியம்!”

பல்பு வாங்கிய த.வெ.க தம்பிகள்
இந்த விவகாரத்தின் உச்சக்கட்ட நகைச்சுவையே சமூக வலைதளங்களில் தான் அரங்கேறியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு அமைந்த பிறகு, மின்சாரக் கட்டணத்தை ஆன்லைனில் மிக எளிதாகக் கட்டும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தங்களின் சாதனையாக நினைத்த சில த.வெ.க தம்பிகள், “விஜய் அண்ணன் ஆட்சியில் கரண்ட் பில் கட்டுவது எவ்வளவு ஈஸி பாருங்கள்!” என்று தங்களின் மின் கட்டண ரசீதுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எக்ஸ் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பெருமையாகப் பகிர்ந்து வந்தனர்.

அதைப் பார்த்த பொதுமக்களும் நெட்டிசன்களும், “டேய் தம்பிகளா… ஆன்லைன் வசதியைப் பார்க்குறீங்க… ஆனா பில் தொகையைப் பார்க்க மாட்டீங்களா? கடந்த மாசத்தை விட பில் அப்படியே டபுளா எகிறி இருக்குடா!” என்று கமெண்ட்டுகளில் அந்த ஸ்கிரீன்ஷாட்களை வைத்தே த.வெ.க-வைக் கிழித்துத் தொங்கவிட ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகுதான், இந்த மெகா மின் கட்டண மோசடி விவகாரமே வெளிச்சத்திற்கு வந்து நாறத் தொடங்கியுள்ளது.

“எங்கே உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சுப்பாருங்க..? விஜய்க்கு செக்.. தவெக-வை திணறடிக்கும் பெண் ஐஏஎஸ்..!

குத்துமதிப்பா போட்டோம்
பாதிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்று, “எந்த அறிவிப்பும் இல்லாமல் எப்படிப் பில் தொகையைக் கூட்டலாம்?” என்று கறாராகக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் சொன்ன அசால்ட்டான பதிலைக் கேட்டு போலீஸ்காரர்களே தலைசுற்றிப் போய் நின்றுள்ளனர்.

மின்சார வாரிய அதிகாரிகள் பதில்
“சார்… தப்பா நினைச்சுக்காதீங்க.. இப்போதைக்கு எங்க துறையில வீடு வீடாப் போய் ரீடிங் எடுக்குறதுக்கு போதிய ஆட்கள் இல்லை. அதனால, போன தடவை உங்களுக்கு என்ன பில் வந்ததோ… அதை பேஸா வச்சு, இந்தத் தடவை இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா போட்டு ‘குத்துமதிப்பா’ ஒரு பில் தொகையை ஃபிக்ஸ் பண்ணிட்டோம். டிபார்ட்மெண்ட்ல புதுசா ஆட்களை நியமிச்சதுக்கு அப்புறமா இதெல்லாம் சரியாயிடும் சார்!” எனக் கூறியுள்ளனர்.

ரீடிங் எடுக்க ஆள் இல்லை என்பதற்காக, மக்களின் பாக்கெட்டில் இருந்து குத்துமதிப்பாக ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறிப்பது எந்த ஊர் நியாயம் என்று பொதுமக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

விஜயை நெருக்கும் ‘கிறிஸ்தவ லாபி’..! ‘ரூட்’ போடும் டேவிட்சன்.! ‘தி.மு.க பார்ட்-2’ ஆக மாறுகிறதா த.வெ.க..?

டிஜிட்டல் இந்தியா, ஈஸி பேமெண்ட் என்றெல்லாம் கலர் கலராகக் கதை சொல்லிவிட்டு, உள்ளே நிர்வாகச் சீர்கேட்டால் தவிக்கும் மின்சார வாரியம், மக்களின் உழைப்பை இப்படி குத்துமதிப்பாக சுரண்டலாமா? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் துக்ளக் தர்பார் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? அல்லது த.வெ.க தம்பிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நெட்டிசன்களிடம் பல்பு வாங்கிக் கொண்டிருக்கப் போகிறார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago