Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் போயிருந்த செய்திகளை நேரடியில் பார்த்திருப்பீர்கள். செய்திகளையும் கேட்டிருப்பீர்கள். கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் நடந்த அந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானது. அப்போது விட்டு வெளியேறிய விஜய் அதன் பிறகு இப்போதுதான் முதல் முறையாக முதலமைச்சராகி கரூர் மண்ணுக்குள் தன்னோட காலடி எடுத்து வைத்தார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேராக கரூர் கலெக்டர் ஆஃபீஸ்க்கு போன முதலமைச்சர் விஜய் அந்த நெரிசல் கொடூரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு பணிக்கான பணி ஆணைகளை வழங்கினார். இந்த அரசு விழாவில் அமைச்சர்களான செங்கோட்டையன், அமைச்சர் விஜயலட்சுமி, எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட நிறைய விஐபிகள் எல்லாருமே மேடையில் கலந்து கொண்டார்கள்.

த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்… சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!

ஆனால் இந்த மெகா சுபநிகழ்ச்சிக்கு பின் தவெகவையே உலுக்குகிற ஒரு மரண கண்ணீர் கதை அரங்கேறி இருக்கிறது. இதற்கு முன் கரூரில் அந்த பிரம்மாண்டமான கூட்டத்திற்கு பக்கவாக ஏற்பாடு செய்து கொடுத்தது, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் தான். இந்த நெரிசல் விபத்துக்கு காரணமாக இருந்ததாகச் சொல்லி இவர்கள் இரண்டு பேர் மீது தான் அப்போது போலீஸ் வழக்கு பதிவு செய்தார்கள். அதனால் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்கும் நிலைமை கூட ஏற்பட்டது.

இதையும் படியுங்க  “திமுகவும் அதிமுகவும் திணறும் அளவுக்கு விஜயின் சாணக்கிய அரசியல்!”

இப்படி கட்சிக்காகவும், தலைவர் விஜய்க்காகவும் எல்லா வழக்குகளையும், தொல்லைகளையும் சுமந்து நின்ற கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு இந்த அரசு பணி ஆணை வழங்கும் மெகா நிகழ்வில் முறையான அழைப்பு கொடுக்கப்படவில்லை.

“எங்கே உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சுப்பாருங்க..? விஜய்க்கு செக்.. தவெக-வை திணறடிக்கும் பெண் ஐஏஎஸ்..!

கரூர் கலெக்டர் ஆபீஸ் உள்ளே முதலமைச்சர் விஜய் மேடையில் கம்பீரமாக உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்த அதே நேரத்தில் அந்த விழாவுக்கு போக முடியாமல், அதாவது அழைக்கப்படாமல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள்ளேயே தனது காரில் உட்கார்ந்தபடி அமைச்சர் புஸ்ஸிஆனந்த் விம்மி விம்மி அழுதுகொண்டு இருந்திருக்கிறார். கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனும் கண்கலங்கி நின்று இருக்கிறார்.

நிர்வாகிகள் வட்டாரத்தில் இது குறித்து நாம் விசாரித்தபோது ”விஜய் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், அப்புறம் அரசியல் கட்சி என படிப்படியாக தவெகவுக்காக ரத்தம் சிந்தி வளர்த்தெடுத்த புஸ்ஸி ஆனந்தை இப்போது நேற்று புதிதாக வந்த ஆதவ் அர்ஜூனா, ரெட்டி இவங்க மூணு பேரும் ஒன்னா சேர்ந்து ஒரு மெகா லாபி பண்ணி டோட்டலா ஓரங்கட்டி வருக்கிறார்கள். ஆனால், கட்சிக்காக உழைத்த புஸ்ஸி ஆனந்த் இப்போது காரில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறார்” என முக்கியமான சில தவெக நிர்வாகிகள் கொந்தளித்தார்கள்.

இதையும் படியுங்க  ''தவெகவுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது..!'' சாபம் விட்ட ஆர்.எஸ்.பாரதி..!

விஜயை நெருக்கும் ‘கிறிஸ்தவ லாபி’..! ‘ரூட்’ போடும் டேவிட்சன்.! ‘தி.மு.க பார்ட்-2’ ஆக மாறுகிறதா த.வெ.க..?

இந்த விஷயம் முதலமைச்சர் விஜயின் காதுக்கு எப்படியோ போயிருக்கிறது. கரூர் விழா எல்லாவற்றையும் முடித்து விட்டு அங்கிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு புறப்பட்ட முதலமைச்சர் விஜய் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை நேரில் பார்த்து ”அண்ணே வாங்க.. என் கூடவே சென்னைக்கு போகலாம்” என ரொம்பவே பாசமாக கூப்பிட்டு இருக்கிறார்.

அதற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கண் கலங்கியப்படியே ”இல்லைங்க.. நான் அப்படியே கார்ல பாண்டிச்சேரி போயிட்டு அப்புறமா சென்னைக்கு வந்துடுறேன்” எனச் சொல்லி இருக்கிறார். ஆனால், முதலமைச்சர் விஜய் அவரை விடாமல் ”நான் சென்னையில் இருந்து கிளம்புறப்பவே உங்களுக்கும் சேர்த்துதான் ஃபிளைட் டிக்கெட் போட்டேன். இப்போ நீங்க என்கூட தான் வர்ரீங்க” எனச் சொல்லி அமைச்சர் ஆனந்தை கட்டாயப்படுத்தி தன் கூடவே சென்னை கூட்டி வந்திருக்கிறார்.

“எங்கே உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சுப்பாருங்க..? விஜய்க்கு செக்.. தவெக-வை திணறடிக்கும் பெண் ஐஏஎஸ்..!

இதையும் படியுங்க  திமுக- அதிமுக ஒரே கட்சியாக வாய்ப்பு..! விஜயின் சுனாமி அலையால் தமிழக அரசியலில் பகீர் திருப்பம்..!

கரூர் அரசு விழாவில் புதுக்கோட்டை மற்றும் கொங்கு லாபியால் புஸ்ஸி ஆனந்துக்கு நேர்ந்த அந்த அவமானத்தையும், வருத்தத்தையும் போக்குவதற்காக சென்னை வரும்வழியில விமானத்திலும், அதன் பிறகு பனையூரிலும் வைத்து முதலமைச்சர் விஜய் அவரை பர்சனலாக சமாதானம் செய்திருக்கிறார் என தவெகவின் சில முக்கியமான நபர்கள் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago