https://republictn.com/

பட வெளியீட்டு தாமதம் தொடர்பாக நடிகர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் அவர், இந்தச் சூழல் ஏற்பட்டிருக்கக் கூடாது என்றும், படத்தைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, காலை முதலே திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மேலும், திரைப்படம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமைகள் மற்றும் மனஅழுத்தங்களில் இருந்து சிறிது நேரம் விடுபடுவதற்கான ஒரு பொழுதுபோக்கு என்றும், ஆனால் ரசிகர்கள் இவ்வளவு சிரமப்பட்டும் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

இன்றைய மாலை 6 மணி முதல் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி, படம் வெளியாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என நீண்ட நாட்களாக நம்பிக்கை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்தப் படத்திற்காக பலரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளதாகவும், குறிப்பாக நடிகர் சூர்யா உட்பட பலர் அதிக முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, ஏற்பட்ட தாமதத்திற்கும் ரசிகர்கள் சந்தித்த சிரமங்களுக்கும் மீண்டும் மன்னிப்பு கோரி, அனைத்து தடைகளையும் கடந்து படம் வெளியாகும் என்றும், ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago