மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேலைக்காக திமுக- அதிமுகாவில் இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தனித்தனி பகுதிகளை பிரித்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ”நாங்க எதுக்குயா இந்த நேரத்துல போய் எங்களோட சொந்த பணத்தை போட்டு இரைக்கணும்” என செலவு செய்வதற்கு ரொம்பவே யோசிக்கிறார்கள் என உதயநிதிக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட் போயிருக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களோட வீடு, ஆபீஸ் என நினைத்த நேரத்துக்கு ரைடு
பறந்து கொண்டு இருக்கிறது.
நாம இந்த இடைத்தேர்தலுக்கு பணத்தை செலவு செய்தோம் என்று தெரிந்தால் அடுத்த ரைடு நமக்குதான் என முன்னாள் அமைச்சர்கள் பயந்து நடுங்குகிறார்களாம். அதுமட்டுமில்லாமல் இடைத்தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எதுக்கு நம்ம சொந்த பணத்தை இப்படி வீணாக்கணும்என தங்களுக்குள்ளேயே பேசி இந்த இடைத்தேர்தலுக்கு பெரிதாக செலவெல்லாம் பண்ணிடக்கூடாது என ஒரு முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

இந்த தகவல் தெரிந்த உதயநிதி உடனே திமுக தலைவர் ஸ்டாலினிடம் சென்று ”தலைவரே இந்த இடைத்தேர்தல் செலவுக்கு நம்மோட முன்னாள் அமைச்சர்களையோ நம்ம நிர்வாகிகளையோ நம்பினால் வேலைக்கு ஆவாது. இது நம்மளோட தன்மான பிரச்சனை. அதனால பேசாம கட்சி தலைமையே எல்லா தேர்தல் செலவையும் ஏத்துக்கலாம்” என யோசனை சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம் இப்போது இருக்கிற மதுராந்தம் தொகுதி அருகில் அச்சரப்பாக்கம் இடைத்தேர்தலை சந்தித்த போது திமுக- அதிமுக இரு கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணமழையாக பொழிந்தது.
இப்போது தவெக ஆட்சியில் திமுகவும், அதிமுகவும் அதே மாதிரி இந்த நோட்டுகளை வாரி வழங்குமா? என்கிற கேள்விதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.
