Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

7 ஆண்டுகாலமாகத் துரத்தித் துரத்தி டார்ச்சர் செய்த ஒரு சைக்கோவின் வெறிச்செயலுக்கு, உழைத்து வாழ நினைத்த ஒரு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் பலியாகப் பார்த்த கொடூரம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது. பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து, வயிறு மற்றும் முதுகுப் பகுதியில் குரூரமாகக் குத்திய சின்னசாமி என்ற மிருகத்தின் செயல், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்கிற அச்சத்தை மீண்டும் ஒருமுறை விஸ்வரூபமாக எழும்பியுள்ளது.

கரூர் விவகாரம்.. திமுக கையில் எடுத்த புதிய அஸ்திரம்..! விஜய்க்கு வைத்த செக்..!

தருமபுரி மாவட்டம், தேங்காய்மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவன் சின்னசாமி என்ற நபர், அதே பகுதியில் வசிக்கும் 23 வயது இளம் பெண்ணான ஷீலா, தர்மபுரியில் உள்ள ஒரு நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரை சின்னசாமி 7 வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஷீலா அவனை காதலிக்க மறுத்து வந்ததாகவும்

இதையும் படியுங்க  இன்ஸ்டாகிராமில் காதல் வலை..! அதற்கு வற்புறுத்திய இளைஞன்..! மாணவி பகீர் முடிவு..!

ஆனாலும் சின்னசாமி விடாமல் ஷீலாவை பின்தொடர்ந்து காதலிக்குமாறும், திருமணம் செய்துக்கொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளான்

சம்பவத்தன்று , நேற்று இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தருமபுரி நகர பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் ஷீலா. அப்போது அவருக்காக சின்னசாமி நீண்ட நேரமாக காத்திருந்தவன் ஷீலாவிடம் மீண்டும் சின்னசாமி திருமணம் தொடர்பான பேச்சை எடுக்க, அதனை ஷீலா மறுக்கவும், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷீலாவின் கழுத்தை அறுத்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல் ஷீலாவின் வயிறு, முதுகுப் பகுதியிலும் கத்தியால் வெட்டியுள்ளான். இரவு நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்தேறியதை. கண்ட பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷீலா ரத்த வெள்ளத்தில் சரிய, சின்னசாமி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளான். சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ரத்தம் சொட்ட சொட்ட நின்ற சைக்கோ சின்னசாமியை தருமபுரி நகர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனிக்கு அனுப்பப்பட்ட ஷீலா தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க  "நீட்டுக்கு முடிவுக்கட்டு! வீதியில் இறங்கிய மாணவர்கள்,  டெல்லி தடியடியால் ஸ்தம்பித்த தமிழகம்!"

சின்னசாமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

இந்த சம்பவம் நடந்து நீண்ட நேரமாகியும் பெண்கள் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பேருந்து நிலையம் வரவில்லை என சமூக வலைத்தளத்தில் வீடியோவை பகிர்ந்து பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். பேருந்து நிலையங்களில் எப்போதும் ஒரு குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உரசும் விசிக.. நெருங்கும் பாமக..! தவெக-வும் வேணும்… திமுக-வும் வேணும்.. திருமாவின் டபுள் கேம்..!

தர்மபுரியில் கடந்த 15 நாட்களில் நடந்த கொலைகள்

ஜூன் 20 ந்தேதி , பென்னாகரம் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி (50) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து அருகிலுள்ள விவசாய நிலத்தில் வீசிவிட்டு சென்றனர்.

ஜூன் 25 ந்தேதி ,தகடூர் கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்த நஞ்சம்மாள் (50) அவரது சகோதரர் மாதேஷ் (34) ஆகியோரை சொத்துக்காக மாதேஷ் மனைவியே இருவரையும் கூலிப்படை வைத்து கொலை செய்தார்.

இதையும் படியுங்க  "பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: தவெக நிர்வாகியை நடுத்தெருவில் கதற கதற வெளுத்த பொதுமக்கள்..!

ஜூன் 30 ந்தேதி ,கோட்டை கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடன் பிரச்சினை காரணமாக மனைவி ,மகளை , கொலை செய்து விட்டு, லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

“விக்னேஷ் சிவன் மேடையில் தேடிய அந்த ‘மீனாகுமாரி’ யார்? நயன்தாராவின் மாமியார் பற்றிய மாஸ் ரகசியம்!

நேற்று ஜூலை-07 இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது

நடிகர் விஜய் முதல்வரானதிலிருந்து தமிழ்நாட்டில் தினமும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் , கொள்ளை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. விஜய் தலைமையிலான தவெக அரசின் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கை விரைந்து பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago