https://republictn.com/

தனது கூட்டணியை கட்டமைக்க தவெக முயன்று வரும் நிலையில் தவெக கூட்டணி நகர்வுகள் கவனம் பெறுகின்றன. பாமகவோடு நெருங்குகிறதா தவெக? விசிக-வை அழுத்தும் காங்கிரஸ்-மதிமுக. கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் பேசாதீர் என்கிறார் வைகோ. உறவு வேறு கூட்டணி வேறு உறவு என்கிறார் மாணிக்கம் தாக்கூர். திருமாவுக்கு வைகோ மாணிக்கம் தாக்கூர் சொல்லும் செய்தி என்ன? சமூகநீதி, கணக்காய்வு குறித்து அரசை பாராட்டுகிறார் அன்புமணி ராமதாஸ். சமீபத்திய அன்புமணியின் சந்திப்புகளும் இந்த நெருக்கத்தை வெளிகாட்டுகின்றன.

பாமக- தவெகவை நெருங்கி வருகிறது. சமூகநீதி கணக்காய்வு எடுக்கப்படும் என்று சொன்னபோதே உடனடியாக பாட்டாளி மக்கள் கட்சி அதை வரவேற்றதில் இருந்து ஒவ்வொரு சூழல்களையும் அவர்கள் நெருங்கி வருகிறார்கள். விடுதலை சிறத்தைகள் கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே ஒரு நிலைப்பாடுதான். பாஜக- பாமக இருக்கிற அணியில் இடம்பெற மாட்டோம். அவர்கள் தேர்தலுக்கு முன்பிருந்தும் பலமுறை இது சொன்ன ஒரு விஷயம்தான்.

சீனாவுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா! 40 ஈபிள் டவர் இரும்புடன் உருவான ₹80,000 கோடி மெகா ஆலை!

ஆனால், தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை பாமகவிடமும் ஒரு சிநேகம் தொடர்கிறது. பாமகவும் இவர்களிடம் சிநேகம் காட்டுகிறது. பதிலுக்கு இங்கிருந்தும் ஒரு சிக்னல் கிடைக்கத்தான் செய்கிறது. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடைய நிரந்தர அரசியல் லாபம் என்பதையும் கணக்கெடுத்து செய்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவோடு தேர்தலை சந்தித்தார்கள். அதிமுகவுக்கு அது ஒரு பெரிய லாபத்தை தந்தது. வட மாவட்டங்களல் கணிசமான எண்ணிக்கையில் அதிமுக ஜெயித்தது.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அது பெரிய வெற்றியை தரவில்லை. இப்போது பாட்டாளி மக்கள் கட்சியிலும் உள்கட்சி குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து அப்பாவும் மகனும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. இன்னைக்கு இயல்பாகவே தமிழக வெற்றி கழகத்திலும் 35% வாக்கு வங்கி இருக்கிறது. அதெல்லாம் பாமகவையும் அவர்களை நோக்கி ஈர்க்கிறது. இன்னொன்று திருமாவளவன் அவர்கள் தொடர்ச்சியான அவருடைய நிலைப்பாட்டில் அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் என்றுதான் தெரிகிறது.

தவெக கூட்டணிக்குள் வந்தார். அதே நேரத்தில் ஆட்சியில மட்டும்தான் பங்கு என்கிற அளவில்தான் அந்த உறவு, அந்த ஆதரவு நிலைப்பாடுதான் என்று அவர் தொடர்ந்தே சொல்லி வந்தார். ஒரு சந்திப்பில் கூட அவர் அதை தெளிவுபடுத்தி இருந்தார். நான் ஆதரவு தானே கொடுத்திருக்கிறோம். எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாதா? என்றெல்லாம் அவர் கருத்தை பேசி இருந்தார்.

டெல்லியில கிங் மேக்கர்… தமிழ்நாட்டுல டுவிஸ்ட் மேக்கர்… திருமாவின் ‘மிஸ்டரி’ அரசியல்! தமிழகமே சிரிப்பா சிரிக்குது..!

திருமாவளவனை பொறுத்தவரை இன்னும் கூட்டணி நிலைப்பாடு என்பதில் திமுகவை முற்றாக அவர் புறந்தள்ளிவிட்டு நிற்கவில்லை. அதற்கு காரணம் ஒரு பக்கம் தவெக பாமகவிடமும் நல்ல முறையில் பேசி கொண்டிருப்பது அல்லது அணுகி கொண்டிருப்பது ஒன்று. இன்னொன்று விடுதலை சிறத்துகள் கட்சியினுடைய நிரந்தர எதிர்காலத்தை பற்றிய ஒரு சில கவலைகளாக இருக்கலாம். ஆளூர் ஷானவாஸ் போன்ற அந்த கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய தளகர்த்தர்கள் இன்னுமே முழுக்க தவெக பக்கம் விசிக நகர்வதை விரும்புகிறார்களா என்கிற ஒரு கேள்வியும் ஐயப்பாடும் இருக்கிறது. இன்னொரு பக்கம் பனையூர் பாபு போன்றவர்கள் இடம்பெயர்ந்து விட்டார்கள்.

ஒருவேளை இந்த நிலை தொடர்ந்தால் இப்போதே கூட்டணியை உறுதி செய்து கொண்டு அறிவித்தால் அது விசிகவுக்குள் ஒரு உள்விகாரங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆகையால் இது ஒரு திருமாவளவனுக்கு பாதுகாப்பான ஆட்டம். நான் அந்த பக்கமும் இல்லை. இந்த பக்கமும் இல்லை என்கிற கருத்தை சொல்வது. ஆனால இதில் பெரியண்ணன் மனப்பான்மையோடு காங்கிரஸ் போன்ற கட்சிகள் தலையீடு செய்கிறார்கள். அந்த இடம் விசிகவின் அரசியல் எதிர்காலத்தை கொஞ்சம் சிதைப்பதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.

“ஒத்த செங்கல் வரலாறு முடிந்தது! 90% வேலை ஓவர்.. ஆகஸ்ட்டில் அதிரடியாக திறக்கப்படும் மதுரை எய்ம்ஸ்!”

காங்கிரஸ், மதிமுக மாதிரி விசிக திமுகவை மொத்தமாக விட்டுச் செல்லாமல் தொடர்ந்து ரெண்டு பக்கமும் நாங்க இருக்கோம் என்கிற மாதிரியான ஒரு ப்ரொஜெக்ஷனை கொடுக்கிறார்கள். அது விசிகவுக்கு ஒரு பாதுகாப்பான விளையாட்டு.

By Naruvi

One thought on “உரசும் விசிக.. நெருங்கும் பாமக..! தவெக-வும் வேணும்… திமுக-வும் வேணும்.. திருமாவின் டபுள் கேம்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago