தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளைச் சாதகமாக்கிக் கொண்டு, பெரியகுளம் மற்றும் தெங்கரை பகுதிகளில் சாலை ஓரங்களிலேயே கட்டுக்கட்டாக கேரளா லாட்டரிகள் புழங்குவது அம்பலமாகியுள்ளது. பள்ளி, கோவில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலேயே இந்த சட்டவிரோத வியாபாரம் நடக்கிறது என்றால், இதற்குப் பின்னால் இருக்கும் “காக்கி”களின் கரம் எவ்வளவு நீளமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மீண்டும் பல குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வரத் துடிக்கும் இந்த லாட்டரி மாஃபியாக்களுக்கு காவல்துறை சிவப்புக் கம்பளம் விரிப்பது பெரும் அவலத்தின் உச்சம்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு பெரியகுளம் பகுதியில் காவல்துறை உதவியுடன் அமோக விற்பனை நடைபெறுகிறது. இந்த லாட்டரி சீட் மீண்டும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதால் பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளதாக சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசால் கேரளா மாநில லாட்டரி சீட் விற்பனை தமிழக முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவ்வப்போது தேனி மாவட்டம், கேரளா அருகே அமைந்துள்ளதால் இந்த மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட் விற்பனை நடைபெற்று வருகிறது.
“நெருப்பாக மாறும் தூங்கா நகரம்! ஆக்ஸ்போர்டு ஆய்வின் பகீர் பின்னணி!”
இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளம், தெங்கரை பகுதியில் சாலை ஓரங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டு கட்டுக்கட்டாக சாலை ஓரங்களில் கிடைக்கின்றன. இதன் மூலம் பெரியகுளம் பகுதியில் லாட்டரி சீட் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாலும் லாட்டரி சீட் விற்பனையை தடுக்காமல் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் மேலும் காவல்துறை உதவியுடன் ஒரு சில நபர்கள் பெரியகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… இன்று முதல் அதிரடி மாற்றம்… நோட் பண்ணிக்கோங்க…!
மேலும் சாலை ஓரங்களில் அதிகமாக பொதுமக்கள் நடமாடும் இடங்களில் பள்ளி, கோவில் உள்ளிட்ட இடங்களில் சாலை ஓரங்களில் கட்டுக்கட்டாக கேரளா மாநில லாட்டரி சீட் கிடக்கின்றன. இதனால் பெரியகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் பெரியகுளம் பகுதியில் அதிகளவில் விற்பனை செய்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கவனம் செலுத்தி லாட்டரி சீட் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
-முத்துவெளியப்பன், தேனி, சிறப்பு நிருபர்
