https://republictn.com/

வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் வாங்க கூப்பன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சி. விஜயபாஸ்கர் பதிலளிக்க தேர்தல் ஆணயம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்திருக்கிறது. நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. விஜய பாஸ்கர் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 6273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இதையும் படியுங்க:- ”தமிழ் நாட்டிலேயே சாணக்கியர் ஆட்சியை நடத்தியது மு.க.ஸ்டாலின் மட்டும்தான்..!” ஆகப் பெரிய சாதனை..?

இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியிற்ற கே.கே.செல்லபாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.விஜயபஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வாக்காளர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிக்க கூறி 10,000 ரூபாய் மற்றும் 2000 ரூபாய்க்கான கூப்பன்களை வினியோகித்தார் என குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்க:- அவர் CM இல்ல.. என் தம்பி!” – ஓடிவந்து முதலமைச்சர் காரை மறித்த ‘வேலு அம்மா’ டி.கே. கலா! நெகிழவைக்கும் பின்னணி!

மேலும் வாக்காளர்கள் பிரிட்ஜ் வாங்க கூப்பன்களை வினியோகித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அந்த மணவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியதை பதிவு செய்தார்.

இதையும் படியுங்க:- “பெற்றோர்களே ஒரு நொடி உஷார்! 3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த ஒரு குட்டி நிலக்கடலை…

மேலும் வழக்கு குறித்து சி. விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 minutes ago at 49 minutes ago