Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Dhanush

தமிழக அரசியல் களம் சினிமா நட்சத்திரங்களின் போர்க்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் தவெக மூலம் மாபெரும் அரசியல் அலையைக் கிளப்பி அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய், மறுபுறம் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் நடிகர் தனுஷின் பக்கம் திரும்பியுள்ளது.

“தனது மாமனார் ரஜினிகாந்தால் பிடிக்க முடியாமல் போன கோட்டையை, மருமகன் தனுஷ் பிடித்தே தீருவேன்” என்று அதிதீவிரமாகக் காய்களை நகர்த்தி வருவதுதான் இப்போதைய ஹாட் டாபிக். சும்மா சலசலப்பு என்று கடந்துபோக முடியாத அளவுக்கு, தனுஷின் ஒவ்வொரு நகர்வும் டெல்லி முதல் சென்னை வரை மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு அரங்கேறி வருகிறது.

சைலண்ட் ஆபரேஷன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் டெல்லிக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சில மிக முக்கியமான தேசிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தனுஷ், சற்றும் தாமதிக்காமல் களத்தில் இறங்கினார். திடீரெனத் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணியினரைச் சந்தித்த அவர், அவர்களுடன் உற்சாகமாகச் செல்பி எடுத்துக்கொண்டார். அதுமட்டுமன்றி, வந்திருந்த மகளிரணி நிர்வாகிகள் அனைவருக்கும் தலா 20 கிராம் எடைக் கொண்ட அசல் வெள்ளி காமாட்சி விளக்குகளைத் தீபாவளி பரிசாகக் கொடுத்து அசத்தினார்.

இதையும் படியுங்க  "அதிமுக கரைவதற்கு ஒன்றும் சர்க்கரை அல்ல; இது இரும்பு தவெக அரசுக்கு எடப்பாடி கொடுத்த 55-வது ஆண்டு ‘அதிர்வேட்டு’ அறிக்கை!
Dhanush

அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த ‘தாமரை’ ட்விஸ்ட்
ஒரு பிரபல நகைக்கடையில் வாங்கப்பட்ட அந்த விளக்குகளின் அடிபாகத்தில், ஸ்பெஷலாக ‘தாமரை’ சின்னம் பதிக்கப்பட்டிருந்ததுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நகைக்கடையின் லோகோவிலேயே தாமரை போன்ற வடிவம் இருந்தாலும், தனுஷ் கொடுத்த விளக்குகளில் தாமரை சின்னம் அழுத்தமாகப் பதிக்கப்பட்டிருந்தது, அவருக்குப் பின்னால் இருக்கும் ‘தேசியக் கட்சி’யின் நிழலை அப்பட்டமாகக் காட்டுவதாக அரசியல் விமரிசகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

‘டி.வி.கே’ பாணியில் ‘டி.இ.கே’
விஜய்யின் அரசியல் பாதையை அப்படியே தனுஷும் பின்தொடர்வதாகப் பேச்சுக்கள் பலமாக எழுந்துள்ளன. தனுஷ் தொடங்கப்போகும் புதிய கட்சியின் பெயர் “தமிழக எழுச்சிக் கழகம்” TEK) என்று சொல்லப்படுகிறது. விஜய் தனது கட்சியின் பெயரை ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அறிவித்தபோது, ‘வெற்றி’க்கு பக்கத்தில் ஒற்றெழுத்தான “க்” விடுபட்டதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். பின்னர் விஜய் அதை ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) எனத் திருத்தினார். ஆனால், மாமனாரின் ஆன்மீக அரசியலையும், நண்பன் விஜய்யின் அரசியல் தந்திரங்களையும் உற்றுநோக்கிய தனுஷ், ஆரம்பத்திலேயே இலக்கணப் பிழையின்றி “தமிழக எழுச்சிக் கழகம்” (த.எ.க) என்ற பெயரிலேயே களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தொண்டர்கள் சிலாகிக்கிறார்கள்.

இதையும் படியுங்க  சூப்பர் சிஎம்-மா..? பாடநூல் கழக தலைவரா..? முந்திரிக் கொட்டை 'லயோலா மணி'..! கதறும் அதிகாரிகள்..!
TVK

தமிழக எழுச்சிக் கழகம் (TEK) -> த.எ.க
விஜய்யின் ‘த.வெ.க’-வுக்குப் போட்டியாக தனுஷின் ‘த.எ.க’ களம் காணுமா? மாமனாரின் அரசியல் கனவை மருமகன் தனுஷ் டெல்லியின் துணையோடு நனவாக்குவாரா? இந்த விவாதங்கள் தமிழக அரசியலின் சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், தனுஷ் தரப்பிலிருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago