Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறான தகவல்கள் பரவிக்கொண்டு இருக்கிறது.. அவை எதுவும் உண்மையல்ல.. அரசு வழக்கறிஞர் நியமனம் 100% நியாயமாக நடைபெறும்” என சட்டடதுறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறைகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த நியமனங்களில் அதிக லஞ்சம் பெறப்படுவதாகவும், தகுதியில்லாதவர்கள் நிரப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில், அது தொடர்பாகப் பரவி வரும் தவறான தகவல்களுக்குச் சட்டத்துறை அமைச்சகம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக மறுத்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், தற்போதைய நியமனங்களின் தகுதி மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தே அவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டில் உருகிய தமிழ்ப் பாடல்.. 40 வருட சாதனையை உடைக்கும் மோடி..!! உலகையே அதிரவைக்கும் வரலாற்றுப் பயணம்!”

இதுகுறித்து சட்டடதுறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், ”மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறான தகவல்கள் பரவிக்கொண்டு இருக்குறது. யாராவது பணம் வாங்கியிருந்தால், பணம் அளித்தவர்கள் புகார் அளிக்கலாம். இதுவரை அரசு வழக்கறிஞர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. நேற்று மாலை முதல் தான் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. யாராவது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பணம் பெற்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படியுங்க  முடிவுக்கு வரும் திராவிட கட்சிகளின் சாம்ராஜ்ஜியம்..? அண்ணாமலை VS விஜய்..! மாறும் தமிழக அரசியல்..!

தவெக கூட்டணியால் விசிக வளர்கிறதா…? அழிகிறதா..? அதிர வைக்கும் மக்கள் கணிப்பு..!

யாருடைய பெயரையாவது தவறாக பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 3 மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைபெறும் நியமனம் 6 மாதங்களுக்கு தற்காலிகமானது. யாராவது பணம் வாங்கியிருந்தால், பணம் அளித்தவர்கள் புகார் அளிக்கலாம். நேற்று மாலை முதல் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறுகிறது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எந்த பாகுபாடும் இல்லை. அரசு வழக்கறிஞர்கள் பணியிடம் சுமார் 800 வரை நிரப்பப்பட உள்ளன

“சாத்தான்குளம் வழக்கில் திடீர் கிளைமாக்ஸ்! ஜூலை 15 முதல் தினமும் பிற்பகல் 2:15 மணிக்கு நடக்கும் அதிரடி வேட்டை!”

இன்னும் தேவைப்பட்டால் கூடுதலாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் அரசு தயாராக உள்ளது. தற்போதைக்கு 6 மாதத்திற்கு தற்காலிகமாகவே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

எங்காவது முறைகேடு நடைபெறுவதாக புகார் கொடுக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் என்று பரவும் தகவல் தவறானது. அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக நேற்று மாலை தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முழுமையாக நிறைவடைந்துவிடும். செயல்பாடுகளை பொறுத்து 6 மாதத்திற்கு பிறகே அரசு வழக்கறிஞர்கள் நிரந்தரமாக்கப்படுவர். முந்தைய ஆட்சியில் கட்சி ரீதியாகவே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  ஸ்டாலின் பற்றி பேசியது தப்பு..! CM விஜய்க்கு திருமா கடும் கண்டனம்..! தவெக -விசிக இடையே ஆரம்பித்த மோதல்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago