https://republictn.com/

தமிழக அரசியல் களம் புதிய கூட்டணிகள், வியூகங்களால் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கட்சியைப் பலப்படுத்த அதிரடியான புதிய நடைமுறைகளைக் கையாண்டு வருகிறார். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், வரலாற்றிலேயே முதன்முறையாகப் பல முக்கிய முடிவுகளும், கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தவெக தலைமையிலான புதிய கூட்டணியில் அதிகாரப் பகிர்வு மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் அளித்த முக்கிய வாக்குறுதியை மாணிக் தாக்கூர் இக்கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாக்கூர் கட்சியைப் பலப்படுத்த அதிரடியான புதிய நடைமுறைகளைக் கையாண்டு வருகிறார். அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற 77 காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக அனைத்து மாவட்டத் தலைவர்களையும் தனித்தனியாகப் பேச வைத்தார்.

இதையும் படியுங்க:- தலைகீழ் ட்விஸ்ட்… தவெக-வை விழுங்கும் அதிமுக..? ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்..! அலறும் விஜய் ரசிகர்கள்!

கூட்டத்தில் எழுந்த கோரிக்கைகள்
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையைக் கொட்டினர். “நாம் ஆட்சியில் பங்கு பெற்று அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டோம். ஆனால் அதுமட்டும் போதாது. அரசு வழக்கறிஞர்கள் நியமனம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுச் சங்கத் தேர்தல் மற்றும் வாரியப் பதவிகளில் காங்கிரஸிற்கு உரிய பங்கைப் பெற்றுத் தர வேண்டும்” என்று மாநிலத் தலைமையிடம் வற்புறுத்தினர்.

ஒருங்கிணைப்புக் குழு திட்டம்
இதற்குப் பதிலளித்த மாணிக் தாக்கூர், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்தபோது மாநில அல்லது மாவட்ட அளவில் கட்சிகளுக்கு இடையே முறையான தொடர்போ, ஒருங்கிணைப்போ இல்லாததால் தான் அந்தக் கூட்டணி வீணாய்ப் போனது என்ற கசப்பான பாடத்தைக் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்க:- அதிமுக தலைமைக்கு வருகிறாரா அண்ணாமலை? – தீயாய் பரவிய வதந்திக்கு எரிமலையாய் வந்த பதில்..!

எனவே, தற்போது தவெக தலைமையிலான இந்த புதிய கூட்டணியில், மாநில அளவில் ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் கூட்டணிக் கட்சிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அதற்கு அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களைத் தலைவராக்க வேண்டும்.

இதன் மூலம் மாவட்ட அளவிலான சிறு பிரச்சினைகளை அங்கேயே பேசித் தீர்க்க முடியும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் தாம் வலியுறுத்தியதாக மாணிக் தாக்கூர் தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் விஜய், “மாணிக் பிரதர், நான் கண்டிப்பா இதைச் செய்கிறேன்” என்று நேரில் உறுதி யளித்துள்ளதாகக் கூட்டத்தில் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க:- ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்… தவெக நோக்கி நகரும் மகன்… தவிக்கும் ‘தர்மயுத்த’ நாயகன்!

இதன் மூலம், விரைவில் தவெக கூட்டணியில் மாநில, மாவட்ட அளவிலான அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

2 thoughts on “திமுக கூட்டணியில் கசப்பான பாடம்… தவெக-விடம் உஷாரான காங்கிரஸ்..! மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago