https://republictn.com/

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு செயல்பட்டு வரும் நிலையில், கூட்டணிக்குள்ளேயே மிகப்பெரிய முட்டல், மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. தவெக அமைச்சரவையில் சமூக நீதி அமைச்சர் பதவியைப் பெற்றுள்ள விசிக, தற்போது தவெக-விற்கும், திமுக-விற்கும் இடையே ஒரு தந்திரமான அரசியல் நகர்வை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது அரசியல் விமர்சகர்களை உற்றுநோக்க வைத்துள்ளது.

தவெக அமைச்சரவையில் விசிக; திமுகவுடன் நட்பு

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தவெக ஆட்சியில் அமைச்சரவையில் பங்கு வகித்தாலும், தங்களுக்கு “திமுகவுடன் நட்பு தொடர்கிறது” என்று அவர் கூறியிருப்பது தவெக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கூட்டணியால் விசிக வளர்கிறதா…? அழிகிறதா..? அதிர வைக்கும் மக்கள் கணிப்பு..!

திருமாவளவன் அதிர்ச்சி பேச்சு
“தவெக தலைமையில் இன்னும் முழுமையான கூட்டணி அமையவில்லை. தவெக அரசை நாங்கள் வெளியில் இருந்து ஆதரித்த போதே திமுக கூட்டணியில் தான் தொடர்ந்தோம். இப்போது அமைச்சரவையில் இணைந்திருந்தாலும், தவெக-வோடு முழுமையாகக் கூட்டணிக்குள் இணையவில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எதுவும் ஏற்படவில்லை. மேலும், விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது உண்மைதான். மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்ற பிறகு தான், தவெக அரசை விசிக ஆதரித்தது” எனத் தெரிவித்துள்ளார் திருமா.

திருமாவின் இந்த அதிரடி பேச்சு, தவெக ஆட்சியில் இருந்தாலும் தங்களது பிரதான அரசியல் வேர்கள் இன்னும் திமுக பக்கமே நீடிக்கின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

“வெளிநாட்டில் உருகிய தமிழ்ப் பாடல்.. 40 வருட சாதனையை உடைக்கும் மோடி..!! உலகையே அதிரவைக்கும் வரலாற்றுப் பயணம்!”

‘ரீல்ஸ் ஆய்வு’க்கு திருமாவின் குட்டு
சமீபகாலமாக அமைச்சர்களும், அதிகாரிகளும் எங்கு சென்றாலும் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் நடத்திய ஆய்வின் போது எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள் பெரும் பேசுபொருளாகின.

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது இந்தியா முழுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ரீல்ஸ் கலாச்சாரம் பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால் நாங்கள் கண்டிப்பாகச் சுட்டிக்காட்டுவோம். அமைச்சர்கள் அதை உள்வாங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று தவெக அமைச்சரின் செயல்பாட்டைக் கூட்டணியில் இருந்துகொண்டே திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விசிக-வின் பலமான டிமாண்ட்
அரசியல் வட்டாரங்களில் கசியும் தகவல்களின்படி, விசிக-வுக்கு தற்போது தவெக அமைச்சரவையில் ‘சமூக நீதி அமைச்சர்’ பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமாவளவன் இத்துடன் திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. விசிக-விற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த, ‘வெயிட்டான’ அமைச்சர் பதவிகள் வேண்டும். வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விசிக போட்டியிட தவெக வாய்ப்பளிக்க வேண்டும். விசிக நிர்வாகிகளுக்கு அரசு வாரியத் தலைவர் பதவிகளை வாரி வழங்க வேண்டும் என இப்படி அடுக்கடுக்கான டிமாண்டுகளை திருமாவளவன் முன்வைத்து வருவதாகவும், இந்த பேரங்களை வலுப்படுத்தவே அவர் திமுக கார்டை கையில் எடுத்து தவெக-வை மறைமுகமாக மிரட்டி வருகிறார் என்றும் உடன்பிறவா கட்சிகள் முணுமுணுக்கின்றன.

திமுக கூட்டணியில் கசப்பான பாடம்… தவெக-விடம் உஷாரான காங்கிரஸ்..! மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’..!

கறார் காட்டும் முதல்வர் விஜய்
கூட்டணியில் இருந்து கொண்டே, தவெக ஆட்சியைத் திருமாவளவன் தொடர்ந்து விமர்சித்து வருவது முதலமைச்சர் விஜய்யை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“கூட்டணியை விட்டுப் போனால் போகட்டும்; ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்” என்று விஜய் தனது நெருங்கிய வட்டாரங்களில் கறாராகக் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. விசிக-வின் இந்த இரட்டை நிலைப்பாட்டிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தவெக தற்போது கூட்டணியில் உள்ள பாமக -வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அன்புமணி, செளமியாவை கோட்டைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளது தவெக. இதனையும் மனதில் கொண்டே திருமாவளவன் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக அறிவித்துள்ளார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

3 thoughts on “திருமாவின் திமுக ட்ரம் கார்டு.. விசிக-வின் டபுள் கேம்..! கூட்டணிக்குள் வரும் பாமக..! தவெக எடுத்த அதிரடி முடிவு..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago