Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமீபத்தில் நடைபெற்ற ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லி, நடிகர் விஜய் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேடையில் பேசிய அட்லி, “ரொம்ப நாளாச்சு சென்னைக்கு வந்து. கடைசியாக ஓட்டு போடத்தான் வந்தேன். நான் அங்கு போய் நம்ம தளபதிக்குத்தான் ஓட்டு போட்டேன்,” என்று கூறினார். அவர் “தளபதி” மற்றும் “ஓட்டு” என்று குறிப்பிட்ட அடுத்த நொடியே, அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் “தளபதி… தளபதி…” என்று முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.

தவெக கூட்டணியால் விசிக வளர்கிறதா…? அழிகிறதா..? அதிர வைக்கும் மக்கள் கணிப்பு..!

நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லி, தங்களுக்கிடையேயான பாசமும் நெருக்கமும் இன்றளவும் தொடர்வதை இந்த மேடையில் வெளிப்படுத்தினார். இதனால், “எனக்கு தளபதிதான் எல்லாம்” என்ற வாசகத்துடன் அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், இந்தப் படத்தின் நாயகன் ஆகாஷ் தனது தம்பியைப் போன்றவர் மட்டுமல்ல, உண்மையிலேயே தம்பிதான் என்றும், அவர் கேட்ட எந்த உதவிக்கும் தன்னால் மறுப்பு சொல்ல முடியாது என்றும் கூறினார்.

இதையும் படியுங்க  நகைச்சுவை கடந்து… நெஞ்சை தொடும் நாயகனாக யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து!

மோடிக்கு குறி… மரண மிரட்டல் விடுத்த இளைஞர்..! மின்னல் வேகத்தில் தட்டித் தூக்கிய ஆஸ்திரேலிய போலீஸ்..!

“வயதில் சிறியவராக இருந்தாலும், மிகவும் பொறுப்பானவர். நீண்ட நாட்களாக ஒரு கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். ‘நானே தயாரிக்கிறேன்’ என்று சொன்னேன். ஆனால், இறுதியில் அவரே தயாரிப்பாளராக இந்தப் படத்தை உருவாக்கினார். படம் முடிந்தவுடன் முதலில் எனக்குக் காட்டினார். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார்.

மேலும், “ராஜா ராணி’ திரைப்படத்திற்குப் பிறகு என்னால் ஒரு காதல் திரைப்படத்தை இயக்க முடியவில்லை என்ற ஏக்கம் எப்போதும் இருந்தது. அதனால்தான் ஒரு நல்ல காதல் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆகாஷ் இந்தக் கதையைக் காட்டியவுடன் மிகவும் பிடித்துவிட்டது. இது கிட்டத்தட்ட அவருடைய வாழ்க்கைப் பயணத்தை பிரதிபலிக்கும் படம்,” என்று தெரிவித்தார்.

படத்தின் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தனைப் பாராட்டிய அவர், “அவருடைய நடனமும், நடிப்பும் மிகவும் அருமை. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, என் படத்திலும் நடிக்க அழைத்தேன். ஆனால், இந்தப் படத்தின் பணிகளில் பிஸியாக இருந்ததால் முடியவில்லை. அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இதையும் படியுங்க  "என் வீடியோவைக் கூட பார்க்காதீங்க!" - படுக்கையில் செய்த தப்பால் கதறும் ஷகிலா.. ₹3 லட்சம் காலி!

நடிகை காயத்ரி லோகேஷைப் பற்றிப் பேசிய அட்லி, “அவர் மிக விரைவில் தேசிய அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகையாக உயர்வார். அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது,” என்று பாராட்டினார்.

திமுக கூட்டணியில் கசப்பான பாடம்… தவெக-விடம் உஷாரான காங்கிரஸ்..! மாணிக்கம் தாகூர் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’..!

இசையமைப்பாளர் தமனின் இசையையும் பாராட்டிய அவர், “இந்தப் படத்தின் இசை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜீவா நடித்த பழைய காதல் திரைப்படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் அந்த உணர்வை இந்தப் படமும் தருகிறது. ஆகாஷும் தமனும் இணைந்து ஒரு அழகான காதல் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளனர்,” என்றார்.

மேலும், “இது ஒரு வார இறுதி பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் மீண்டும் மீண்டும் திரையரங்கில் சென்று ரசிக்கக்கூடிய திரைப்படம். பள்ளி, கல்லூரி இளைஞர்கள் முதல் குடும்ப பார்வையாளர்கள் வரை அனைவரையும் இந்தப் படம் கவரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் படத்தில் நடித்துள்ள சுதாகரின் கதாபாத்திரத்தையும் அட்லி வெகுவாகப் பாராட்டினார். “அவர் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,” என்று கூறினார்.

இதையும் படியுங்க  "அதிகார பலத்தால் அடக்காதே!" டெல்லியில் திரண்ட மாணவர்கள்.. களத்தில் குதித்த மஞ்சு வாரியர்!

காதல் குறித்து பேசிய அட்லி, “நமக்கு முதலில் காதலைக் கற்றுக் கொடுப்பவர் நம் அம்மாதான். நாம் எதையும் அறியாத குழந்தைகளாக இருக்கும்போதே அன்பை உணர வைப்பவர் தாய்தான். அந்த அன்பும் காதலும் எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத உணர்வு. அந்த உணர்வை இந்தப் படம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்,” என்றார்.

இறுதியாக, “விமர்சனங்கள் வருவது இயல்புதான். நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சென்று மனதை இலகுவாக வைத்துக்கொண்டு ரசிக்கக்கூடிய திரைப்படம் ‘இதயம் முரளி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று மனதார வாழ்த்துகிறேன்,” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

Eswari

By Eswari

One thought on ““நான் தளபதிக்கு தான் ஓட்டு போட்டேன்!” – மேடையில் அட்லி ஓபன் டாக்! அரங்கத்தையே உலுக்கிய நெகிழ்ச்சியான தருணம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago