Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

எடப்பாடி பழனிசாமி இப்போது சளைக்காமல் ஒவ்வொரு மாவட்டமாகப் போய் அந்த கீழ்நிலை நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டம் எல்லாம் நடத்திக்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அங்க பேசிய கும்பகோணம் பகுதி கழக செயலாளர் பத்மா முருகேசன் ரொம்ப ஓப்பனாக ”அண்ணன் நம்ம கட்சியில் இருந்து பிரிஞ்சு போன டிடிவி தினகரனை நம்ம மறுபடியும் அதிமுகவில் கொண்டு வந்து சேர்த்தரலாம்ணே.. இப்போ கட்சியை விட்டு பல பேர் வெளியில போயிட்டு இருக்க இந்த இக்கட்டான நிலைமையில டிடிவி தினகரனை மறுபடியும் கட்சியில் கொண்டு வந்தா அது நமக்கு ஒரு மிக வலிமையா இருக்கும்” என எடப்பாடி பழனிசாமி முன்அவ்வளவு பேருக்கு மத்தியில் ரொம்ப ஓப்பனாக சொல்லி இருக்கிறார்.

முன்பெல்லாம் கட்சி மீட்டிங்கில் இப்படி நீக்கப்பட்டவர்களைப்பற்றியோ சசிகலாவை பற்றியோ இல்லை டிடிவி தினகரன் பற்றியோ யாராவது பேசினால் எடப்பாடிக்கு சும்மா கோபம் தலைக்கேறி பயங்கரமாக கத்துவார். ஆனால் நேற்று எடப்பாடியார் துளி கூட கோபப்படாமல் அந்த நிர்வாகிகளிடம் ரொம்ப சாந்தமாவும் தன்மையாவும் சில விஷயங்களை விளக்கி இருக்கிறார். ”டிடிவி தினகரன் இப்பவும் நம்மகூட கூட்டணியில தான் இருக்காரு. அவரே இப்ப தனியா ஒரு கட்சி நடத்திட்டு வராரு. அதனால அவரு அதிமுகவில் சேர்வதைப் பற்றி இப்போதைக்கு நாம எதுவும் வெளியில சொல்ல முடியாது” என பக்குவமாகப் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதையும் படியுங்க  பாஜக டூ அதிமுக.. இப்போ அங்கேயும் பாய் பாய்! கௌதமியின் அரசியல் மூவ்.. அடுத்து என்ன?

டிடிவி தினகரனை அதிமுகவோடு இணைப்பதற்காக சேலம் கூட்டுறவு இளங்கோவன் மூலமாக எடப்பாடி பழனிசாமி அண்டர் கிரவுண்ட்டில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகிறார். அதிமுக கட்சி நிர்வாகிகளே அமமுக-வை அதிமுகவுடன் இணைக்கணும் என்கிற கோரிக்கையை இபிஎஸ் முன்பே ஓப்பனாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமி அவர்களது நிர்வாகிகளை பார்த்து இன்னொரு முக்கியமான அறிவுரையும் கொடுத்திருக்கிறார்.

”உங்க வீட்ல உங்க குடும்பத்துல 18 வயசுக்கு மேல இருக்கற எல்லாரையும் முதல்ல அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக சேருங்க. நாம ஒவ்வொருத்தரும் நம்ம வீட்ல இருக்கறவங்களை முதல்ல அதிமுகவுக்குள் கொண்டு வரணும்” எனச் சொல்லி இருக்கிறார். இதை கேட்ட கீழ்நிலை அதிமுக நிர்வாகிகள் மத்தியில் இப்போது ஒரு புதிய கிசுகிசு கிளம்பி இருக்கிறது.

அதாவது ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அவருடைய மகன் மிதுனை கட்சிக்குள்ள கொண்டு வர பார்க்கிறார்ன் என வெளியில சென்றவர்கள் பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு இபிஎஸ் பதில் சொல்கிற போது ”என்னோட மகன் அதிமுக-வில் வெறும் அடிப்படை உறுப்பினரா மட்டும்தான் இருக்காரு” எனச் சொன்னார்.

இதையும் படியுங்க  “அமைச்சர்கள் இல்ல.. ஜோக்கர்கள்!” - தவெக அரசை வறுத்தெடுத்த EX அமைச்சர்  சிவசங்கர்!

இப்போது எல்லாரையும் குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டு வரச் சொல்கிற அதே ரூட்டில் அவரோட மகன் மிதுனையும் அடுத்த கட்ட மெகா பதவிக்கு எடப்பாடியார் நகர்த்த பார்க்கிறாரோ என அதிமுக அண்டர் கிரவுண்ட் வட்டாரங்கள் இப்போது புதிய வாரிசு அரசியல் புகைச்சல் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

One thought on ““குடும்பத்தோட கட்சிக்கு வாங்க..!” அதிமுக-வில் டிடிவி.தினகரன்- சசிகலா..? இபிஎஸ் கொடுத்த அசைன்மென்ட்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago