Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Premalatha Vijayakanth - CM Vijay

தேமுதிக முதல் மாநிலங்களவை உறுப்பினரான எல்.கே.சுதீஷ் தனது மகள் திருமணத்திற்காக அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுர்கள் எல்லாரையுமே நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்து வருகிறார். இந்த அடிப்படையில் முதலமைச்சரை சந்திச்சு அந்த திருமண பத்திரிக்கையை கொடுத்தார்.

அப்போ இன்னொரு பர்சனல் வேண்டுகோள் ஒன்றையும் முதல்வர் விஜயிடம் சுதீஷ் முன் வைத்திருக்கிறார். அதை உடனடியாக முதலமைச்சர் விஜயும் நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதாவது தனக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு வேணும் என எல்.கே.சுதீஷ் எம்.பி., முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க, அதை ஏற்றுக்கொண்டு இந்த நவம்பர் இரண்டாம் தேதியிலிருந்து தேமுதிக எம்.பி., சுதீஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தமிழக அரசால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Premalatha Vijayakanth

அதே வேளையில் செப்டம்பர் மாதம் தேமுதிகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தபோது அதில் பங்கேற்ற சில முக்கிய நிர்வாகிகள் பிரேமலதாவிடம் ”தம்பி விஜய பிரபாகரனுக்கு எப்ப கல்யாணம்? என ரொம்ப உரிமையாகக் கேட்டிருக்கிறார்கள். இதே ஆர்வத்துடன் மேலும் சில மாவட்ட செயலாளர்களும் கேட்க, உடனே டென்ஷனான பிரேமலதா ”எனக்கு தெரியாதா தம்பிக்கு எப்ப கல்யாணம் செய்யணும்னு?” என திடீரென கோபப்பட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க  தவெக எம்.எல்.ஏ போட்ட தோசை ரீல்ஸ்..! அவதூறை நிரூபிக்க திமுக ஸ்கெட்ச்? இட்லி சட்டி இல்லை… தோசையும் போச்சா..!

அதாவது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் பேத்திக்கும், கேப்டன் விஜயகாந்தோட மகன் விஜய் பிரபாகரனுக்கும்
திருமணம் என்கிற ஒரு தகவல் கிடைத்துதான் பிரேமலதாவிடம் இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் பிரேமலதாவோ அதற்கு பயங்கர கோபமாக பதில் சொல்லி இருக்கிறார்.

Premalatha

இதற்கிடையில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விஐபிக்களுக்கும் தேடி தேடி போய் திருமண பத்திரிக்கை வைத்து வருகிற சுதீஷ் தன்னுடைய கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு இன்னும் பத்திரிக்கை வைக்கவில்லை என்கிற வருத்தமும் அவர்களிடம் உள்ளது.

இதுமட்டுமில்ல சுதீஷ் எம்பி கோரிக்கை வைத்ததும் அதை உடனடியாக முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி வைத்திருப்பதை பார்க்கிற போது விஜயுடன் தேமுதிக நெருங்குதா? என்கிற கேள்வி கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆகையால் தேமுகவில் இருந்த கூட்டணி கட்சிகள் கிட்டத்தட்ட எல்லாருமே தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு போய்விட்ட நிலைமையில் இப்போது சுதீஷ் மகள் திருமணம் முடிந்ததும் தேமுதிகவும் தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு போய் விடுடுமா? என்கிற அரசியல் விவாதங்கள் இப்போது கட்சிக்குள் பயங்கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

இதையும் படியுங்க  "மோடி… மோடி …" கோஷங்களால் அதிர்ந்த மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை அசத்திய 'மிஸ்டர் இந்தியா'!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago