Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gold

தங்கத்தை ஒரு இன்வெஸ்ட்மெண்ட்டாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது எல்லாமே ஜீரோ ஆகிவிடும். கிராம் 15,000 விற்கிற தங்கம் அப்புறம் வெறும் ₹100 ரூபாய்க்கு வாங்குறதுக்கு கூட ஆள் இருக்க மாட்டார்கள்.

தங்கம் விலை குறையும், கூடும் என்பது ஒரு விஷயம். அது பரவாயில்லை. ஆனால் எதனால் கூடும்? எதனால் குறையும்? அதாவது குறிப்பாக சொல்லப்போனால் எதனால் தங்கத்தோட விலை குறைய போகிறது என்றால் மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்துக்கொண்டு இருக்கிறது. அதாவது ஒரு பக்கம் டாலர் மதிப்பு வட்டி விகிதத்தில் ஏற்றம், இறக்கம், குரூட் ஆயில் விலை, ஷேர் மார்க்கெட் இறக்கம் பொன்ற பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் கூட இதெல்லாம் இல்லை. புதிதாக ஒன்று வந்திருக்கிறது. அதாவது லேப் கிரோன் டைமண்ட் எப்படியோ அது போல லேப் கிரோன் கோல்டு. அதாவது செயற்கை தங்கம்.

Lab Grown Gold

சிம்பிளாகச் சொல்லப்போனால் செயற்கை தங்கம். இந்த இயற்கை தங்கம் பல மைல்கள் கீழே போய் பூமியை
தோண்டி அதிலிருந்து மண்னை எடுத்து, தாது பொருட்கள் எடுத்து, சுத்தம் செய்து அதை கொண்டு வந்து பியூரிபை செய்து அதை நாம் கோல்டாக கொண்டு வருகிறோம். அதாவது இந்தியாவில் இருக்கிற கோலார் கோல்ட் ஃபீல்டில் இதுலிருந்து 1 கிராம் தங்கம் எடுக்கணும்னா ஒரு லாரி மண்ணைஎடுத்து அதை சுத்தம் பண்ணி பண்ணி பண்ணி எல்லாம் பண்ணாதான் 1 கிராம் தங்கம் கிடைக்கும்.

இதையும் படியுங்க  திடீரென சரிந்த தங்கம் விலை..! இது வெறும் ஆரம்பம் தான்… அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்..!
gold loan

இந்த செலவே இல்லாமல், இவ்வளவு வேலையாட்களும் இல்லாமல் லேப்-பில் வைத்து தயார் செய்தால், ஈஸியாக கண்டுபிடித்தால் அந்த மாதிரி தங்கம் வந்தால் தங்கத்தினுடைய விலை கட்டுக்குள் அப்படியே வந்துவிடும். ஆனால் வருமா? வராதா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. பல பேர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவப்போது ஒரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை செய்தி வரும்.

இந்தியாவில் சித்தூர் பக்கத்தில் ஒரு கோல்டுஃபீல்ட் தங்க சுரங்கம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதற்கு முன் ரெண்டு வருஷம் மூணு வருஷம் முன் பார்த்தால் வட மாநிலத்தில் சோனாப்பூரில் தங்க சுரங்கம் கண்டுபிடித்தார்கள். அதெல்லாம் கண்டுபிடிச்சாலும் கூட, அதில் இருந்து வரக்கூடிய தங்கம் அளவு வந்து ரொம்ப ரொம்ப கம்மி. நம்முடைய தேவைகளை கூட முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது.

அது மாதிரிதான் இந்த செயற்கை தங்கமும். சரி அந்த செயற்கை தங்கம் வந்தால் நல்லதுதானே. வந்தால் இன்னொரு விஷயம் நாம் யார் யாரெல்லாம் தங்கம் வைத்து இருக்கிறோமோ.. தங்கத்தை ஒரு இன்வெஸ்ட்மெண்ட்டாக பார்த்து வருகிறோமோ அது எல்லாமே ஜீரோ ஆகிவிடும்.

இதையும் படியுங்க  தங்கம் விலையில் மாபெரும் 'Twist'..! இன்று நள்ளிரவு  காத்திருக்கும் பேரதிர்ச்சி..?
Gold

போதும் என்கிற அளவுக்கு தங்கம் கிடைத்துக் கொண்டே இருந்தால் இப்போது 15,000 விற்கிற 1 கிராம் தங்கம் அப்போது வெறும் 50, 100 ரூபாய்க்கு கூட வாங்வதற்கு ஆள் இருக்க மாட்டார்கள்.

தங்கத்தினுடைய அணுக்கூறுகள் 79 புரோட்டான். வெள்ளியுடைய அணுக்கூறு 47 புரோட்டான். செம்புடைய அணுக்கூறு 29 புரோட்டான். அப்போ தங்கத்தோட கூட இருக்கிறது பாதரசம். புரோட்டான் 80 புரோட்டான்கள் அணுக்கூறுகள் சேர்ந்தது. அதிலிருந்து ஒரு அணுக்கூறை எடுத்து செய்தால் மட்டும்தான் அதை தங்கமாக உருவாக்க முடியும். இந்தியாவுக்கு மட்டுமே 700ல் இருந்து 800 டன் தங்கம் தேவை இருக்கிறது. அதனால் இப்போது இருக்கற தங்கம்தான் நிஜம். செயற்கை தங்கம் என்பது நிழல். அந்த நிழல் எப்ப நிஜமாகிறது? காத்திருந்துதான் பாக்கணும். காலம்தான் பதில் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago