Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

BLM

தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க) சுற்றி அமலாக்கத்துறையின் வளையம் இறுகுகிறதா? இன்று காலை முதல் அரசியல் வட்டாரத்தை உலுக்கும் ஒரே ஹாட் டாபிக் இதுதான்.

ஒரு பக்கம் பிரபல தொழிலதிபர் YBM பாலாஜி, இன்னொரு பக்கம் BLM சாம்ராஜ்யத்தின் பிரேம்குமார். இரண்டு பெயர்களையும் ஒரே நேரத்தில் குறிவைத்து ED வீசியிருக்கும் வலை, த.வெ.க தலைமை வரை நீளுமா?

 04.11.2026. இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் அதிரடி. சோதனை நடத்தினர் 

ED அதிகாரப்பூர்வ தகவல்படி, பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம் (BLM) தொடர்பான பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடக்கிறது. கொச்சி, கோழிக்கோடு, சென்னை உட்பட குறைந்தது 11 இடங்களில் ரெய்டு. சென்னை கோயம்பேடு தலைமையகம், கோவை வரை விடவில்லை.  

இந்த வளையத்திற்குள் தான் YBM பாலாஜிக்கு சொந்தமான இடங்களும், அவருடன் தொடர்புடைய நிறுவனங்களான YBM Transports, News Tamil 24×7, News Malayalam 24×7, BLM மற்றும் ட்ராலஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் சிக்கியதாக  பரபரக்கிறது.

இதையும் படியுங்க  தவெகவின் 'அரைவேகாட்டு' வெற்றி..!? விஜயால் நிறைவேறிய மு.க.ஸ்டாலின் ஆசை..!

யார் இந்த BLM பிரேம்குமார்? 5000 கோடி கேள்வி!

இது தான் கதையின் ஆணிவேர். BLM என்பது சாதாரண சங்கம் அல்ல.

சென்னையை தலைமையிடமாக கொண்டு, 2002-ம் ஆண்டு பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ‘பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம்’. கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி என கிளைகளை விரித்தது.

இதன் நிறுவனர் மற்றும் De facto தலைவர் R. பிரேம்குமார். ED குற்றச்சாட்டு என்ன தெரியுமா? பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தை, தனது மனைவி மற்றும் உறவினர்கள் கணக்கிற்கு திருப்பி விட்டு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது.  

5000 கோடி ரூபாய் வரை பொதுமக்கள் பணம் சுருட்டப்பட்டதாக புகார். அந்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தான் இன்று YBM பாலாஜி பெயரில் உள்ளதா? என்ற கோணத்தில் தான் ED தோண்டத் தொடங்கியிருக்கிறது.

யார் இந்த YBM பாலாஜி? த.வெ.க-வின் ‘நிழல் அமைச்சர்’!

YBM Transport என்ற பிரமாண்ட பேருந்து சாம்ராஜ்யத்தின் அதிபர். ஆனால் கட்சி வட்டாரத்தில் இவர் பெயர் அடிபடுவது வேறு காரணத்திற்காக.

இதையும் படியுங்க  விஜயின் மறுபக்கம்..! கதறும் அமைச்சர்கள்… குமுறும் கூட்டணித் தலைவர்கள்..!

1 தமிழ்நாடு அரசின். நிழல் பவர் சென்டர்: த.வெ.க-வில் அமைச்சர்களுக்கு நிகரான செல்வாக்கு. கட்சியின் முக்கிய முடிவுகளில் இவரது தலையீடு உண்டு என கட்சிக்குள்ளேயே சலசலப்பு.

2. MLA-க்களை வளைத்த ட்ரிக்: த.வெ.க MLA-க்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க, ஒரு பிரபல சட்ட ஆலோசனை நிறுவனத்திற்கு (Legal Consultancy) அழைத்துச் சென்றது இவர்தான் என்கிறார்கள்.

3. பேருந்து முதல் பிரியாணி வரை: தமிழகம் முழுவதும் நடந்த அனைத்து த.வெ.க நிகழ்வுகள், மாநாடுகளுக்கு தொண்டர்களை அழைத்து வர பேருந்துகளை வழங்கியது YBM தான். ஒரு நிகழ்வுக்கு குறைந்தது 500 பஸ்கள் வரை இலவசமாக இயக்கப்பட்டதாக கணக்கு சொல்கிறார்கள். இது சேவையா? இல்லை கணக்கில் காட்டாத பணத்தை வெள்ளையாக்கும் டெக்னிக்கா?

ED-ன் கணக்கு என்ன சொல்கிறது? டெல்லி வட்டார தகவல்படி, இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள்:

• த.வெ.க-வுக்கு முறைகேடாக நிதி வழங்கியது. • கணக்கில் காட்டாத பணத்தை ‘பேருந்து வாடகை’ என்ற பெயரில் வெள்ளையாக்கியது. 

இதையும் படியுங்க  ஜூலி லைஃப் முடிஞ்சது..? கழற்றி விட்ட திமுக.. கிட்னி திருட்டு வழக்கை கையெடுக்கும் தவெக?

BLM-ல் சுருட்டிய பணம் -> YBM நிறுவனங்களில் முதலீடு -> அங்கிருந்து அரசியல் கட்சிக்கு பேருந்து, மீடியா, நிகழ்வு செலவாக மடைமாற்றம். இது தான் ED-ன் சந்தேக வளையம்.

ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேர்தல் நெருங்கும் நேரத்தில், த.வெ.க-வின் பண பலத்தை முடக்கும் நடவடிக்கையாகவே இதை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.

ED அதிகாரிகள் சோதனை முடிந்து வெளியே வந்தால் தான் தெரியும் – இது வெறும் சோதனையா? அல்லது த.வெ.க தலைமைக்கு வைக்கப்படும் பெரிய ஆப்பா?

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago