Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

பூத் கமிட்டி பலப்படுத்துதல்
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் சேர்த்து, அதிமுகவை அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் காலியாக உள்ள கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் போன்ற பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை மிக விரைவில் நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட வாய்ப்புள்ளதால், அதற்குள் இந்த நியமனங்களை விரைந்து முடிக்க இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Republic Tamil

செங்கோட்டையன் ‘ரூட்’
அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் இப்போதும் இரவு நேரங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். “செங்கோட்டையனிடம் இருந்து போன் வந்தால் எடுக்காதீர்கள். அவர் மூலமாகவோ அல்லது வேறு யார் மூலமாகவோ உங்களுக்கு தூது அனுப்பி, உங்களை தவெக-விற்கு அழைக்கப் பேசினால் அதற்கு எக்காரணம் கொண்டும் பிடிகொடுக்க வேண்டாம்” என மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதையும் படியுங்க  “பயிர்க்கடன் விவகாரம்: CM விஜய்க்கு எதிராக குரல் கொடுத்த தவெக வேட்பாளர்”

தவெக-விற்கு போனவர்களின் நிலை
அதிமுகவில் இருந்து தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அங்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை விளக்கும் வகையில் சில உதாரணங்களை இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட தவெக அமைச்சர் பரவேசுக்கு கட்டுப்பட்டு, அவர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் பவ்வியமாக நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வடதமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தவெக-வில் இணைந்தார். ஆனால், அங்கு சேர்ந்த சில வாரங்களுக்குப் பின்புதான் அவரால் தவெக தலைவர் விஜய்யையே சந்திக்க முடிந்தது. அவருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டாலும், உள்ளூரில் மதிப்பு இல்லை.

கடலூர் மாவட்ட தவெக அமைச்சராக இருக்கும் ராஜ்குமார், “மாவட்டத்தில் நடக்கும் எந்தவொரு கட்சி நிகழ்விலும், அழைப்பிதழிலும் எம்.சி. சம்பத் பெயரைப் போடக்கூடாது; அவரை அழைக்கவும் கூடாது” என நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு விட்டுள்ளார். இதனால் எம்.சி. சம்பத் போன்றவர்கள் கடுமையான மனப்புழுக்கத்தில் உள்ளனர்.
கட்சியில் ஓரங்கட்டப்படும் இவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே வர முயற்சி செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை உணர்ந்து, செங்கோட்டையனின் வலை வீச்சிற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தனது நிர்வாகிகளை எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்க  இனி அதிமுக அவ்வளவுதான்..! எடப்பாடிக்கு புது சிக்கல்..! இது நடந்தால் விஜயும் மண்ணை கவ்வுவார்..! பீதியில் ஸ்டாலின்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 minutes ago at 58 minutes ago