Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கச் செய்யவும் தமிழகக் கூட்டுறவுத் துறை சார்பில் கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED நிறுவனத்திடம் இருந்து கிலோ ரூ.29 என்ற விலையில் 400 மெட்ரிக் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) அக்டோபர் மாதம் ஆணை பிறப்பித்திருந்தது. கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் ‘A’ தரத்தில் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வெங்காயமும் குறைந்தபட்சம் 45 மில்லி மீட்டர் அளவு கொண்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆய்வில் வெங்காயம் தரமற்றதாக இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 31-ஆம் தேதியே NAFED நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையைத் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ரத்து செய்தது. ஆனால் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வெங்காயச் சரக்கை அரசு நிறுவனம் தனியார் மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனைக்காகத் திருப்பிவிட்டதாகச் செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  ''காரியவாதிடா நீங்க.. ஓட்டு போட்ட நாங்க என்ன லூசா..?'' இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் மரண அடி..!

இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.

மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, “நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை – கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.

இதையும் படியுங்க  "ICU-வில் வி.எஸ். பாபு.. நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! அதிரடி போலீஸ் குவிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!"

அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார்.

வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  “வாக்குறுதி என்னாச்சு?” – சபாநாயகரை அதிர வைத்த உதயநிதி ஸ்டாலினின் ஒற்றைக் கடிதம்!

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago