Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay house

சென்னை, நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் முதல்வர் விஜய் இல்லத்தின் அருகே தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கபாலீஸ்வரர் நகர் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு, நான்காவது மெயின் ரோடு பகுதியில் முதலமைச்சர் வீட்டுக்கு பின்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

வழக்கம் போல் பகுதி மக்கள் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சாலையோரம் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக அரசு குழந்தைகள் நல குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "ரீல்ஸ் வேண்டாம், ரியல் ஆக்‌ஷன்! தப்பு பண்ணா சீட் கிழிஞ்சிடும்!" - அமைச்சர்களை அலறவிட்ட முதல்வர் விஜய்!

தற்போது அந்த குழந்தை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையை யார் வீசி சென்றது என்பதை கண்டறிய கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீராங்கரை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பச்சிளம் குழந்தையை இப்படி சாலையில் வீசி சென்ற சம்பவம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும் னீ நீலாங்கரை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 minutes ago at 41 minutes ago