Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Jailer 2

சிவாஜி ராவாக தமிழ்நாட்டிற்கு வந்த ரஜினிகாந்திற்கு அவரின் வேகத்தை பார்த்து ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தவர் இயக்குனர் பாலசந்தர். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி தனது வேகத்தாலும், ஸ்டைலாலும் தமிழ் ரசிகர்களை கட்டி 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக கோலோச்சி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலற்று படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியது. உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயலர் 2 திரைப்படம் வெளியான 18வது நாளில் உலகளவில் 800 கோடி ரூபாய் வசூல் என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சன் பிச்சஸ் நிறுவனத்திற்கு ரஜினிகாந்தின் ஜெய்லர் 2 திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது.

மேலும் தியேட்டர் ஓனர்கள் முதல் வினியோகஸ்தர்கள் என வலரும் இந்த படத்தின் மூலம் மகிழ்ச்சி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள இப்படம் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபீஸலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. தமிழகத்தில் 220 கோடி, வெளிநாடுகளில் 273 கோடி, ஆந்திரா, தெலுங்கானாவில் 100 கோடி, கேரளாவில் 79 கோடி, கர்நாடகாவில் 93 கோடி என திரையிட்ட அனைத்து இடங்களிலும் புதிய சாதனை படைத்துள்ளது. ஜெய்லர் 2 திரைப்படம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என தான் மட்டுமே என ரஜினிகாந்த் நிரூபித்துள்ளார்.

இதையும் படியுங்க  "தோத்துறக் கூடாதுன்னு நினைச்சேன், ஆனா… 'அஞ்சான்' ட்ரோல்களும் விஜய் படம் மிஸ்ஸான வலியும்: லிங்குசாமி ஓப்பன் டாக்!"

அடுத்த கட்டமாக 9ய கோடி வசூலை நோக்கி வேகமாக நகர்ந்து வருவது திரை உலக வட்டாரங்களிலும், வினியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலற்று படத்தின் பிரம்மாண்ட வெற்றி காரணமாக சுமார் 200 கோடி ரூபாய் வரை சூப்பர் ஸ்டாருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மேல் ரஜினிகாந்தின் சம்பளமும் 200 முதல் 250 கோடி வரை எகிறிரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 100 வருட தமிழ் சினிமாவில் இல்லாத அளவில் ஜெய்லர் 2 படம் வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

75 வயதிலும் இந்த சாதனைகளை தலைவர் ரஜினியால் மட்டுமே செய்ய முடியும் என ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர். வரும் நவம்பர் 12 ஆம் தேதிஅமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜெயிலர்-2 ஸ்ட்ரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு வாரங்களில் ஓடிடியில் ஜெயிலர்-2 வெளியாகும் என டீல் செய்யப்பட்ட நிலையில் அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

இதையும் படியுங்க  "கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் முதன்முறையாகப் புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago