Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த தோசையை திமுக., வினர் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதால் தவெக கட்சி நிர்வாகிகள் அம்மா உணவகத்தில் தோசை வழங்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம், அம்மா உணவகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற தவெக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் உணவின் தரம் குறித்து அறிந்து கொள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த தோசையை சாப்பிட்டார். இந்த நிகழ்வு தனியார் செய்தி சேனலில் தவெக எம்.எல்.ஏ., அம்மா உணவகத்தில் விலை பட்டியலில் இல்லாத தோசையை சமூக வளைத்தள ரீல்ஸ்க்காக வெளியில் தோசை வாங்கி வந்து சாப்பிட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி சமூக வளைத் தளங்களில் வைரல் ஆகி திமுக- தவெக வினர் இடையை சமூக வளைத்தலங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் செய்தி வெளியிட்ட எதிர்கட்சி சேனலை கண்டித்து தவெக கட்சியினர் சமூக வளைத்தலங்களில் வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் கம்பம் நகராட்சி நிர்வாகம் விலை பட்டியலில் இல்லாத தோசையை வழங்க வேண்டாம் என அம்மா உணவக ஊழியர்களுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த தோசை இன்று வழங்கப்படவில்லை.

இதையும் படியுங்க  சசிகலாவின் இன்னொரு முகம்..! பொம்மலாட்ட ராஜதந்திரி..! சல்லி சல்லியாய் உடைந்த சீக்ரெட்..!

இதனை அறிந்த தவெக கட்சி நிர்வாகிகள் அம்மா உணவகத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி அலுவலகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட தவெக-வினர் கூறுகையில் ”அம்மா உணவகம் நகாரட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த உணவகத்தில் தோசை வழங்கப்பட்டு வரும் சூழலில் எம்.எம்.ஏ சாப்பிட்டார் என்ற காரணத்திற்காகவும் தவறான செய்தி வெளியிட்டதை உறுதி படுத்துவதற்க்காகவும் திமுக கட்சியினர் உத்தரவின் பேரில் தற்போது தோசை வழங்கவில்லை.

மேலும் விலை பட்டியலில் உள்ளது போல் இட்லி வழங்கபட்டு வந்த நிலையில் இட்லி சட்டி சேதாரம் ஆனதால், அந்த இட்லி சட்டியை மாற்றி தராத திமுக அரசால் தான் உழியர்கள் தோசை தயார் செய்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து தங்களது எம்.எல்.ஏ., ஆய்வு பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், திமுக -வினர் முட்டுகட்டை போடும் விதமாக செயல்படுவதாக குற்றசாட்டை தெரிவித்தனர். மேலும், இங்கு தோசை சாப்பிட வந்த பொதுமக்கள் தற்போது தோசை வழங்கப்படாததை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதையும் படியுங்க  “மக்கள் கடும் எச்சரிக்கை! TVK-வில் இணைந்த முன்னாள் MLA-க்கு எதிராக போஸ்டர் போர் வெடிப்பு!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago