Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

News tamil Owner

அதிகாலை 5 மணி. சென்னை விருகம்பாக்கம். கதவு பலமாகத் தட்டப்படுகிறது. திறந்தவர் அதிர்ந்து போகிறார். வெளியே நின்றது கேரள குற்றப்பிரிவு போலீஸ்.

உள்ளே இருந்தவர் சாதாரண ஆள் இல்லை. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என மூன்று மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கிளைகள், லட்சக்கணக்கான உறுப்பினர்கள் என்று மார்தட்டிக்கொண்ட ஒரு கூட்டுறவு சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. பெயர் – ஆர்.பிரேம்குமார். சுருக்கமாக ‘BLM பிரேம்குமார்’.

2026 அக்டோபர் 29-ம் தேதி அவர் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிடம், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துவிட்டது. காரணம், இது வெறும் பொருளாதாரக் குற்றம் மட்டுமல்ல… முதல்வர், விஜய் உடனான அரசியல் தொடர்புகள்!

யார் இந்த BLM பிரேம்குமார்?

திருவனந்தபுரத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர். 2006-ல் 4 நண்பர்களுடன் சேர்ந்து அவர் தொடங்கியதுதான் ‘Bharath Lajhna Multi State Housing Co-operative Society Limited’.

வீட்டுவசதி என்று சிறிதாக ஆரம்பித்தது, 20 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக விரிந்தது. BLM Transports பேருந்துகள், Eurotech Cement தொழிற்சாலைகள், திருச்சூரில் நகைக்கடை, மூணாறில் Vibe Resort, திருவனந்தபுரத்தில் Navaratna Hotel என பிசினஸ் சாம்ராஜ்யம் பல கிளைகள் பரவிக்கிடக்கிறது.

இதையும் படியுங்க  ரீல்ஸ் போட்டால் முதலீடு வருமா? ஒரே மாதத்தில் ₹7,000 கோடியைக் கோட்டை விட்ட தவெக அமைச்சர் கீர்த்தனா!"

என்ன குற்றச்சாட்டு?

மக்களிடம் ‘அதிக வட்டி’ என்று ஆசை காட்டி வசூலித்த பணத்தை, சொந்தக் கணக்குகளுக்கும் உறவினர்கள் கணக்குகளுக்கும் திருப்பிவிட்டதாக கேரள EOW குற்றம் சாட்டுகிறது.

மோசடித் தொகை ரூ.5,000 கோடி வரை இருக்கலாம் என்கிறது குற்றப்பிரிவு. 320 வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அமலாக்கத்துறை தரப்பில் ECIR பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணை வளையம் விரிகிறது. இவை அனைத்தும் இப்போதைக்கு ‘குற்றச்சாட்டு’ மட்டுமே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிவி சேனல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி! இந்த விவகாரத்தில் மிகப்பெரிய குழப்பம் – News Tamil 24×7 சேனல் பெயர் சிக்கியதுதான்.

இதுகுறித்து News தமிழ் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, “News Tamil 24X7 சேனலின் இயக்குநர்களாக திரு.சகிலன் பத்மநாபன், திரு.ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர். News Tamil 24×7-க்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”வதந்தி பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளது தமிழ் சேனல்

இதையும் படியுங்க  அனைவருக்கும் தரமான வீடு..! சொன்னதை செய்யும் CM விஜய்..!

மோசடி வழக்கில் கைதான BLM பிரேம்குமாருக்குச் சொந்தமானது News Malayalam 24×7 மட்டுமே. என ஒரு ஊடகத்திற்கு பிரேம் குமார் தெரிவித்திருக்கிறார்

முதல்வர் உடன் news malayalam பிரேம்குமார் – News தமிழ் சகிலன் பத்மநாபன் சந்திப்பு படங்கள்

கடந்த ஜூலை 3-ம் தேதி DIPR தவறுதலாக ‘News Tamil 24×7 இயக்குநர்’ என்று குறிப்பிட்டதே இந்தக் குழப்பத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இரு டிவி அதிபர்களும் முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அதில் கைதான BLM பிரேம்குமார் படம் தான் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எதிர்கட்சி தலைவர் உதயநிதியின் அதிரடி அறிக்கை!

கைது செய்தி வெளியான சில மணி நேரத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது முகநூல் / எக்ஸ் பக்கத்தில் அதிரடி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைதான் இப்போது அரசியல் விவாதத்தின் மையப்புள்ளி.

“5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த BLM பிரேம்குமாருக்கும், தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம்தான் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்குச் சொந்தமான BLM பேருந்துகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்க  மாற்றத்தின் தொடக்கமா? வாக்குறுதிகளின் ஏமாற்றமா? – CM விஜயின் 100 நாள் 'வெற்றி' ரிப்போர்ட்!

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். அப்படி எந்த ‘விவகாரமான’ தொடர்பும் இல்லையெனில், ஏன் அவசர அவசரமாக புகைப்படங்களை DIPR மற்றும்   சமூக வலைதளத்திலிருந்து அகற்ற வேண்டும்?

MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என த.வெ.க-வின் முறைகேடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED விசாரிக்க வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்து என்ன?

ஒரு பக்கம் 5,000 கோடி மோசடி விசாரணை, மறுபக்கம் முதல்வருடனான புகைப்பட சர்ச்சை, இன்னொரு பக்கம் டிவி சேனல் உரிமை குழப்பம்… என மூன்று முனைகளில் இந்த விவகாரம் வெடித்திருக்கிறது.

த.வெ.க தரப்பு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? புகைப்படங்கள் அகற்றப்பட்டது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago