Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Love sucide

னித உணர்வுகளிலேயே மிகவும் சிக்கலானது காதல்தான். அது சில நேரங்களில் வாழ்வை அழகாக்குகிறது. பல நேரங்களில் வாழ வேண்டிய வாழ்க்கையையே திசைமாற்றி, மரணப் பொறியில் கொண்டு போய் தள்ளி விடுகிறது.

கடமையின் எல்லையில் நின்று நாட்டைக் காக்க வேண்டிய ஒரு ராணுவ வீரர், தன் பள்ளிப் பருவக் காதல், கல்லூரிப் பருவக் காதல் ஆகிய இருவேறு உணர்வுகளுக்கு இடையே சிக்கித் தவித்ததன் விளைவு… இன்று இரண்டு குடும்பங்களில் தீராப் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்ற பந்தத்தைத் தாண்டியும் பிரிய முடியாத இன்னொரு காதல், அதற்கு பேசப்பட்ட 50 லட்ச ரூபாய் விலை, பிறந்த 5 மாதக் குழந்தையையும் பார்க்க மறுத்த ஒரு பிடிவாதம் எனத் தொடர்ந்த இந்த விபரீதப் பயணம், இறுதியில் இரண்டு பேரும் அடுத்தடுத்து தற்கொலைகளில் போய் முடிந்திருக்கிறார்கள்

ராணுவ வீரர் தினேஷ்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மண்டலவாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த‌ மகன் தினேஷ்குமார் பள்ளியில் படிக்கும் போதே சுகுணா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த தினேஷ்குமார், திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் போது மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணுடனும் நட்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்த தினேஷ்குமார், முன்பு பள்ளியில் ஒன்றாக படித்தபோது காதலித்த சுகுணாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார். பின்னர் இந்திய ராணுவத்தில் சேர்ந்த தினேஷ்குமார். அவரது சகோதரரையும் ராணுவத்தில் இனைத்துக் கொண்டு குடும்ப வறுமையை ஒழித்துக் கட்டி முன்னேற தொடங்கினார்

இதையும் படியுங்க  பிஞ்சு உயிரைக் குடித்த அலட்சியம்..! மூடி மறைக்க ஓடோடி வந்த த.வெ.க எம்.எல்.ஏ..! அரசின் இமேஜ்தான் முக்கியமா..?

“எனக்குள் இருக்கும் நடிகன் வெளியே வருவான்..!” அப்பாவிற்கு வழிவிட்டு, வாழ்க்கை ரகசியங்களை உடைத்த ஜேசன் சஞ்சய்!

விதி யாரை விட்டது, விடுமுறையில் வரும்போதெல்லாம் கல்லூரியில் காதலித்த ராஜலட்சுமி என்ற பெண்ணோடு காதலை வளர்த்து வந்த தினேஷ்குமார், திருமணம் செய்த பின்னரும் ஜோடியாக சுற்றி திரிந்து திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விடுமுறையில் வரும்போதெல்லாம் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த கல்லூரி காதலி ராஜலட்சுமியை சந்தித்து வாரக் கணக்கில் இருவரும் தனிமையில் சந்தித்து கொள்வது வழக்கமாகி வந்துள்ளது. இந்த விவகாரம் மனைவி சுகுணாவுக்கு திருமணம் ஆன புதிதிலே தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இது தொடர்பாக தினேஷ்குமார் வரும்போதெல்லாம் சண்டையிட்டு வந்துள்ளார் சுகுணா.

கல்லூரி காதலி  ராஜலட்சுமி

இந்நிலையில் தினேஷ்குமார்- சுகுணா தம்பதிக்கு குழந்தை பிறந்து 5 மாதம் ஆகிறது. கடந்த மாதம் 40 நாட்கள் விடுமுறையில் வந்த தினேஷ்குமார் சென்னையில் பணிபுரியும் ராஜலட்சுமியை சந்தித்து விட்டு ஊருக்கு வந்தவர் விடுமுறை முடிந்தும் பணிக்கு செல்லாமல் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி மேலும் 15 நாட்கள் வரை லீவை புதுப்பித்துக் கொண்டுள்ளார். வந்த நாள் முதல் பெற்ற குழந்தையை தொட்டு பார்க்காமலும், வீட்டில் சாப்பிடாமலும் தவிர்த்து வந்தவரை மனைவி சுகுணா, மாமனார் கோவிந்தராஜிடம் சொல்லி கண்டிக்கும் போது இனி மனைவி சுகுணாவிடம் வாழ முடியாது என்றும் ”நான் காதலிக்கும் ராஜலட்சுமியைதான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன். எனக்கு மனைவிடமிருந்து விவகாரத்து வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்க  சனிக்கிழமை அதுவுமா… சென்னையில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை!

“ஏடிஎம் கார்டை வாடகைக்கு எடுத்தா ஜெயில்தான்! கிரிப்டோ மோசடி கும்பலை சுருட்டிய ராமநாதபுரம் சைபர் கிரைம்!”

அதிர்ச்சி அடைந்த மனைவி சுகுணா அவரின் பெற்றோரை வரவழைத்து பஞ்சாயத்து பேசி பார்த்த பிறகும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு காதலி ராஜலட்சுமியை கரம் பிடிப்பதில்லை குறியாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் மனைவி சுகுணாவே வெறுத்துப் போய் விவகாரத்து செய்யும் மனநிலைக்கு வந்துள்ளார். இதற்கிடையில், கல்லூரி காதலி ராஜலட்சுமியை கரம் பிடிக்க அச்சமங்கலம் சென்று அவரது பெற்றோர்களிடம் பேசி இறுதியில் 50 லட்சம் வரை பணம் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்து பின்னர் ராஜலட்சுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது

இதனைத் தொடர்ந்து ஜூலை 15- ம்தேதி காலையில் தன் மனைவி வீட்டிற்கு சென்ற தினேஷ்குமார் அவரது குழந்தைக்கு திருப்பத்தூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு நேராக காதலி ராஜலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் ”ராஜலட்சுமிக்கு மாப்பிள்ளை பார்க்க போவதாக கேள்வி பட்டேன். நிச்சயமாக சுகுணாவை விவாகரத்து செய்துவிட்டு ராஜலட்சுமியை திருமணம் செய்து கொள்ளவேன்” என மீண்டும் அவரது பெற்றோரிடம் சமாதானம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்த தினேஷ் கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

தற்கொலைக்கு முன்னர் சென்னையில் இருக்கும் காதலி ராஜலட்சுமியிடம் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, ”தினேஷ்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உடனே சென்று பாருங்கள்” என சென்னையில் இருந்தவாரே ராஜலட்சுமிடமிருந்து தினேஷ்குமார் அப்பாவுக்கு போன் வந்துள்ளது.

இதையும் படியுங்க  சமூக ஆர்வலரின் லீலை..! 26 வயது மருமகளை கர்ப்பமாக்கி மிரட்டிய 66 வயது மாமனார் கைது..!

உடனடியாக கதவை உடைத்த பார்த்த உறவினர்கள் தினேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்தனர்

தொடர்ந்து, மேலும் ஒரு பேரிடியாக. நேற்று சென்னை பூந்தமல்லியிருந்து பேருந்து மூலம் ஜோலார்பேட்டைக்கு கிளம்பி வந்த காதலி ராஜலட்சுமி ஜோலார்பேட்டையில் இறங்கி நேராக தினேஷ்குமார் உடலை பார்க்க அவரது பேற்றோருக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு தினேஷ்குமாரின் உடலை எரித்துவிட்டதாக வந்த தகவலையடுத்து

“அமைச்சரை விமர்சிப்பது அவதூறு ஆகாது! – சைபர் கிரைம் போலீஸுக்கு உயர் நீதிமன்றம் ‘நச்’ கேள்வி!”

மனமுடைந்தத ராஜலட்சுமி துக்கம் தாளாமல் 40 கீலோமீட்டர் முன்னாடியே ஆம்பூரில் இறங்கி ஆம்பூர் – பச்சக்குப்பம் ரயில் நிலையங்களுக்கிடையே சுமார் 7 மணிக்கு சென்ற மைசூர் – சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்

நாட்டை காக்க சென்று வீட்டை காக்க மறந்த ராணுவ வீரரும், திருமணம் செய்து வாழ்கையை தொடங்க வேண்டிய வயசில் ஐடி வேலையை உதறி திருமணமாணவனோடு உறவில் வீழ்ந்த காதலியும் பிரிய முடியாமல் ஒரே நாளில் வாழ்கையை முடித்துக் கொண்டுள்ளார்கள் , ஒரு கணம் யோசித்திருந்தால் முன்னேறி வந்த இரு குடும்பங்கள் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்காது .

  • தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050 தொடர்புகொள்ளவும்
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago