Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாகக் கூறி கணவன் பிரபாகரன் (30) கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியைச் சேர்ந்த பிரபாகரன், கார்த்திகா (24) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 வயதுடைய ஒரு பெண் குழந்தை உள்ளது.

கார்த்திகாவின் நடத்தையில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்திகா தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், பிரபாகரன் மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கமேனி இறுதிச்சடங்கில் இந்தியா..! இதை மறக்கவே மாட்டோம்..! உருகி உருகி நன்றி சொன்ன ஈரான் தூதரகம்..!

பின்னர், கார்த்திகாவை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்துவதற்காக பிரபாகரன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த ஜூலை 3-ஆம் தேதி இரவு, தனது சொந்த விவசாய வயலுக்கு கார்த்திகாவை அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  சமாதி மீது கிடந்த சடலம்… தலை முதல் கால் வரை கொடூர வெட்டு… பச்சையப்பன் கல்லூரி மாணவன் படுகொலை…!

அதன்பின், கொலையை மறைக்கும் நோக்கில் கார்த்திகாவின் உடலை அங்கேயே எரித்துள்ளார். தொடர்ந்து, எஞ்சிய சாம்பல் மற்றும் எலும்புகளை அருகில் இருந்த கிணற்றில் கொட்டி, தடயங்களை முழுமையாக அழிக்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கொலை செய்த குற்ற உணர்ச்சியாலோ அல்லது காவல்துறையினரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தாலோ, பிரபாகரன் கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இந்தக் கொலைச் சம்பவத்திலும், உடலை எரித்து தடயங்களை அழிக்கும் முயற்சியிலும் பிரபாகரனுக்கு உதவியதாகக் கூறப்படும் அவரது நண்பர்களான கரண் மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“விஜய் அரசு ஆறு மாதத்தில் கவிழும்..? ” ஸ்டாலின் லண்டன் பயணத்தின் பகீர் பின்னணி..! அரசியலை உலுக்கும் ‘டாப் சீக்ரெட்’..!

இதையும் படியுங்க  கள்ளக்காதல் வெறி..! நாடு காத்த கணவனுக்கு வீட்டுக்குள் மனைவி செய்த கொடூரம்..!

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன், கார்த்திகாவின் சாம்பல் கரைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணற்றுப் பகுதியில் மேலூர் காவல்துறையினர் தீவிர தடயத் தேடுதல் மற்றும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியைக் கொலை செய்து, உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாகக் கூறி, பின்னர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த இந்தச் சம்பவம், மதுரை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago