நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இடையேயான காதல் சர்ச்சை மற்றும் பிரேக்கப் விவகாரம் குறித்து, பிரபல குணச்சித்திர நடிகர் பகவதி காட்டமான பதிலை அளித்துள்ளார்.

ஊடகங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, “அதைப்பற்றி பேச எனக்கு எந்தத் தகுதியும் இல்லை” என்று கூறிய பகவதி, அனுபமா–துருவ் விக்ரம் இடையேயான தனிப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும் தனது பதிலின் மூலம் உணர்த்தியுள்ளார்.
இதற்கிடையே, அனுபமா பரமேஸ்வரன் அண்மையில் அளித்த நேர்காணலில், தனது முன்னாள் காதலரால் தனக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் (Narcissistic Abuse), அதனால் ஏற்பட்ட அரியவகை கண் பாதிப்பு மற்றும் அதற்காக மேற்கொண்ட அறுவை சிகிச்சை குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். எனினும், அந்த நேர்காணலில் தனது முன்னாள் காதலரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் (Bison Kaalamaadan) திரைப்படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா இணைந்து நடித்திருந்த நிலையில், இருவரும் காதலித்து வந்ததாக ஏற்கெனவே சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இதனால், அனுபமா தனது முன்னாள் காதலர் குறித்து பேசியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
அனுபமாவின் பேச்சில் குறிப்பிடப்பட்ட நபர் யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக துருவ் விக்ரம் தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதனால், அனுபமாவின் காதல் தோல்வி குறித்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த தனிப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நடிகர் பகவதியின் பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
