Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Amman Hotel

மதுரை, ராசாக்கூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் நகைச்சுவை நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்து, நாயகனாக வலம் வரும் சூரி அவரது ஆரம்பகால கட்டத்தில் தான் அனுபவித்த கஷ்டங்களையும், சாப்பாட்டு கஷ்டத்தையும் மேடைதோறும் கூறி கண்கலங்குவார். அப்படிப்பட்ட சூரி தனது சொந்த ஊரான மதுரை மாநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். வியாபாரம் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஆனாலும், அவர் நடத்தும் அம்மன் உணவகத்தில், ”விலைக்கேற்ற தரமில்லை” என்கிற விமர்சனம் கடுமையாக கிளம்பி வருகிறது

இந்நிலையில். செந்தமிழ் செல்வன் ரமேஷ் என்பவர் தனது முகநூல் பதிவில் நடிகர் சூரி மதுரையில் நடத்தி வரும் அம்மன் உணவகம் பற்றி கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், ”மேடையில தத்துவம்… கல்லாப்பெட்டியில கந்துவட்டியா சூரி அண்ணே? சினிமா மேடைகளிலும், ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் நடிகர் சூரி பேசும்போது, அப்படியே புத்தருக்கு அடுத்த நிலைக்குப் போன ஞானி மாதிரி பேசுவதைப் பார்க்க முடிகிறது. “சின்ன வயசுல சோத்துக்கே கஷ்டப்பட்டேன், பத்து நாளா வெறும் பச்சைத் தண்ணிய மட்டும் குடிச்சு பசியோட தூங்கின காலமெல்லாம் உண்டு” என்று தன் கடந்த கால வறுமையைக் கண்ணீரோடு விவரிப்பார்.

இதையும் படியுங்க  "விஜய் நடிச்சிருக்க வேண்டிய 'ரன்' படம்; மாதவனுக்கு எப்படி போனது?" — மேடையில் உண்மையை உடைத்த லிங்குசாமி!

அண்ணே, நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்ததை யாருமே மறுக்கல; அதுக்கு உங்க உழைப்பும், கடவுளின் ஆசியும், இந்த மக்களின் ஆதரவும் இருக்கு. இன்னைக்கு கோடி கோடியா சம்பாதிக்கிறீங்க, சந்தோஷம். ஆனா, அப்படிப் பட்டினியின் வலி தெரிஞ்ச நீங்க நடத்தும் ‘அம்மன்’ உணவகத்துல சாதாரண மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்குது?

நாங்க உங்ககிட்ட இலவசமாவா சோறு கேட்கிறோம்? உழைக்கிற பாட்டாளி வர்க்கத்துக்கு ஏத்த நியாயமான விலையில கொடுக்கக் கூடாதா? ஒரு டீ ₹18, காபி ₹23. இதெல்லாம் விடக் கொடுமை… அந்த ஒத்த நெய் பணியாரம் ₹18! ரெண்டு குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு கடைக்குப் போனா, ஆளுக்கு ரெண்டு பணியாரம் சாப்பிட்டாலே ₹100 முதல் ₹200 காலி. சாதாரண குடும்பங்களுக்கு என்ன அந்த அளவுக்கா வருமானம் கொட்டுது?

ஒரு சாப்பாடு ₹160 + GST. ஆனா இலையில வைக்கிற 10-15 ஐட்டத்துல ஒண்ணு கூட மனசையோ, வயிற்றையோ திருப்திப்படுத்தல. சாப்பிட்டு முடிச்சதும் நாக்குல நிக்கிற மாதிரி ஒரு டேஸ்ட்டும் இல்லை. அந்தப் பால் பாயாசம்… பச்சைத் தண்ணில ஜவ்வரிசியையும் சேமியாவையும் போட்டு வேக வச்ச மாதிரி இருக்கு!

அளவும் பத்தல. அரசு ராஜாஜி ஹாஸ்பிடல் பிராஞ்ச்லயும் இதே கதைதான். தரம் சுமாராக இருந்தாலும் தர்ற அளவோ ரொம்பக் கம்மி. ஒரு மனுஷன் திருப்தியா சாப்பிடவே முடியாது. அங்கெல்லாம் முடியாத ஒன்னும் நோயாளிகளோ அவங்க கூட உங்களுக்காக ஒரு இருபது ரூபாய்க்கு தயிர் சாப்பாடு தக்காளி சாப்பாடு கூட கொடுக்கலாமில்ல. உங்க ஹோட்டல்ல வாஷ்பேசின் ஸ்டைலா இருக்கு. பாத்ரூம் சுத்தமா இருக்கு. சர்வீஸ் நல்லா இருக்கு. ஆனா ஹோட்டலுக்கு வர்றது பாத்ரூம் பார்க்கவா… பசியாறவா?

இதையும் படியுங்க  அவர் CM இல்ல.. என் தம்பி!" - ஓடிவந்து முதலமைச்சர் காரை மறித்த 'வேலு அம்மா' டி.கே. கலா! நெகிழவைக்கும் பின்னணி!

எங்களுக்கு ஒண்ணும் ஏசி டைனிங் ஹால் வேண்டாம் அண்ணே. வாழை இலையைப் போட்டு, ஒரு ஃபேன் காத்துல, ரெண்டு சுவையான பொரியலோட வயிறார ஒரு அன்லிமிடெட் சாப்பாட்டை ₹100 அல்லது ₹120-க்கு கொடுக்க முடியாதா? ஒரு டீ, காபியை ₹15-க்கும், பணியாரத்தை ₹10-க்கும் கொடுக்க மனசு வரலையா? பக்கத்துல இருக்குற கோயம்புத்தூர்ல சாந்தி கியர் ஹாஸ்பிடல் அப்படிங்கிற இடத்துல பத்து ரூபாய்க்கு ஃபுல் மீல்ஸ் கொடுக்குறாங்க. அஞ்சு ரூபாய்க்கு வெரைட்டி ரைஸ் குடுக்குறாங்க. அதுவும் 70 வயசுக்கு மேல முடியாதவங்களுக்கு இலவசமாகவும் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்களும் மனுஷங்க தானே.

https://www.facebook.com/photo?fbid=3644485509035582&set=a.105862619564573

கோபுரத்தில் இருக்கிறவன் குப்பைக்கு போறதும், குப்பையில் இருக்கிறவன் கோபுரத்துக்கு வர்றதும் காலத்தோட கணக்கு.” பசியோட அருமை தெரிஞ்ச நீங்க, மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம்… அட்லீஸ்ட் கிள்ளியாவது கொடுங்க அண்ணே! கொஞ்சம் மனசாட்சியோட யோசிங்க!” எனப்பதிவிட்டுள்ளார்.

இதற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், ”ஏழையாக பிறந்து வளர்ந்த இவரும், ஆர்.ஆர். பிரியாணி கடை உரிமையாளரும் தற்போது நிலைமையை உணராமல் பணக்காரர்களுக்கு மட்டுமே உணவகம் நடத்துகிறார்கள். எப்பேர்ப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளரை நினைத்து வாழ்கையில் அடக்கி வாசித்து வாழவேண்டும். ஒரு பொங்களும், இரண்டு இட்லியும் சரவணபவன் ஓட்டலில் ஏழை சாப்பிட முடியுமா? அவரும் ஏழ்மை நிலையிலிருந்து வந்தவர்தான்.

இதையும் படியுங்க  நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

ஏழை நிலையை கருத்தில் கொண்டு அனைவருக்குமான உணவை கொடுங்கள். இல்லை எனில் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் சரிவிற்கு வழி செய்து விடுவார். ஒரு காலத்தில் உணவு ஒரு விற்பனை பொருள் அல்ல, ஆங்காங்கே சத்திரங்களும் தங்கும் மடங்களும் இருந்தது போகும் வழியில் கட்டுச்சோறும், தங்கும் இடத்தில் உணவும் உபசரிப்பும் கொடுத்து வாழ்ந்த மக்கள் கொண்டது நமது நாடு. காலப்போக்கில் உணவு ஒரு வணிக பொருளாக மாறி இது ஒரு கார்பரேட் கம்பெனி அளவிற்கு வந்து விட்டது. இருப்பினும் ஏழைகள் சாப்பிடும் அளவிற்கு உணவின் விலையை தீர்மானியுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

கள்ள ஆட்டம் ஆடுனா ஒத்துக்க மாட்டீங்களே சூரி.. இப்போ உங்க ஓட்டலில் கள்ளாட்டம் ஆட எப்படி மனசு வருகிறது? எல்லா கோட்டையும் அழிச்சிட்டு கம்மியான விலைக்கு மாத்துங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago