Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தின் தூய ஆட்சியில் திருச்சி மின்துறையில் லஞ்சப்புகாரால் பரபரப்பு …….

லட்சக்கணக்க Gpay, பணம் மற்றும் வங்கி கணக்கு மூலம் சட்டவிரோதமாக ரூ.24 லட்சம் லஞ்சம் – மின்துறை ஊழியர்கள் 3 பெண்கள் உள்பட 12 மின்வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு.

திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக செயல்பட்டு வருகிறது.
இங்கு புதிய மின் இணைப்பு வழங்குவது மற்றும் மின்மாற்றங்களைச் செய்வது போன்ற பணிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பொதுமக்கள் விண்ணப்பங்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கும், மின் மாற்றங்கள் ஆகியவற்ற செயல்பாடுகளுக்கு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் பெறப்படுவதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தன.

அதன் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் தென்னூர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ₹1.07 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்க  திண்ணையில் தூங்கிய சிறுமி.. கிணற்றில் சடலம்! 5 வயது சிறுமியின் மர்ம மரணம்..!!

மேலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டும் ₹13.58 லட்சம் அளவிற்கு லஞ்சமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் உதவி மின்பொறியாளர் கமலநாதன் என்பவரின் வங்கி கணக்கில் மட்டும் சுமார் ₹9 லட்சம் லஞ்சப் பணம் இருந்ததும், சதீஷ்குமார் என்ற ஊழியரிடம் ₹45,000 இருந்ததும் சோதனையில் தெரிய வருகிறது.

இந்த முறைகேடுகள் மற்றும் லஞ்சப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டத்தின் அடிப்படையில் புகார்கள்
உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை துறையினர் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 3 பெண் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் 9 ஆண் ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

தூய ஆட்சியில் லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் அனைத்தையும் ஒரு பைசா செலவின்றி தங்களது உரிமைகளை பெற்று வருவதாகவும், லஞ்சம் என்ற வார்த்தை கூட இப்பொழுது அரசு அலுவலகத்தில் கிடையாது, லஞ்சம் வாங்குபவர்களை விட மாட்டோம் என முதல்வரும், மின்துறை அமைச்சரும் மற்றும் கட்சியினரும் கூவி வரும் வேளையில் திருச்சியில் லட்சக்கணக்கில் மின்துறையில் லஞ்சம் பெறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

இதையும் படியுங்க  “தூக்கு தண்டனை கைதி விடுதலை வழக்கில் திடீர் திருப்பம் – தமிழக அரசின் முக்கிய நகர்வு”

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago