Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமீபத்தில் முதல்வர் விஜய் புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ”என்ன திடீரென முதல்வர் விஜய் புழல் சிறைக்குசென்று ஆய்வு செய்கிறார்? என்கிற குழப்பம் பலரும் இருக்கும். ஒரு சிலரோ, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் முன்னாள் திமுக அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படலாம். அதற்காக அவர்களுக்கு எதுவாக சிறையில் அறைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்றபடி வசதிகள் இருக்கிறதா என்று புழல் சிறையை முதல்வர் விஜய் ஆய்வு செய்கிறார் என்று பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

sekar babu

ஆனால் அது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி தற்போது ரூ.6,900 கோடி கடனில் இருக்கிறது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துறையை தன் கைவசம் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பக்கம் தவெக அரசின் பார்வை திரும்பி உள்ளது. அதாவது இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு.

இதையும் படியுங்க  டெல்லியில கிங் மேக்கர்… தமிழ்நாட்டுல டுவிஸ்ட் மேக்கர்… திருமாவின் ‘மிஸ்டரி’ அரசியல்! தமிழகமே சிரிப்பா சிரிக்குது..!

கடந்த 2022, அவருக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் வருடத்திற்கு சென்னை மாநகராட்சியில் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரைதான் டெண்டர் விடப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால், கடந்த திமுக ஆட்சி முடியும் தருவாயில் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே சுமார் 15 ஆயிரம் டெண்டர்கள் சென்னை மாநகராட்சியில் விடப்பட்டதின் விளைவு, சென்னை மாநகராட்சி மட்டும் தற்பொழுது ரூ.6,900 கோடி கடனில் மூழ்கியுள்ளது.

அந்த வகையில் கடந்து திமுக ஆட்சி முடியும் தருவாயில், மீண்டும் ஆட்சிக்கு வருவோமோ? மாட்டோமோ? அல்லது ஆட்சிக்கு வந்தால்கூட இதே துறை நமக்கு கிடைக்குமோ? இல்லையோ? என்கிற நோக்கில், இருக்கும் வரை அடித்து குவித்து விட வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையில், ஒரு வருடத்தில் 15 ஆயிரம் டெண்டர்களை விட்ட சேகர்பாபு வகித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துறைக்கு டெண்டர் மூலம் கிடைத்த கமிஷன் எவ்வளவு என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க  த.வெ.க-வுக்கு வி.சி.க ஆதரவு..! கடிதத்தில் திருமா கூறிய வார்த்தை.. மொத்தமாக மாறிய ட்விஸ்ட்..!
Republic Tamil

அந்த வகையில் தற்பொழுது முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தவெக அரசால் டார்கெட் செய்யப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிள்ளது. சேகர் பாபு கடந்த ஆட்சியில் செய்த பல முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை தவெக அரசு திரட்டி வைத்துள்ளதாகவும், தற்போது வழக்கு பதிவு செய்து சேகர் பாபு கைது செய்யப்பட்டால் சட்டசபை கூட்ட தொடர் நடைபெற்று கொண்டிருப்பதால், சட்டசபை கூட்ட தொடர் பாதிப்பு அடைய கூடும், என்பதால் நடைபெற்று கொண்டிருக்கும் சட்டசபை கூட்ட தொடர் முடிந்த பின்பு, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு குறித்து இதுவரை திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்கள் ஆட்டிப்படையில் அவரை கைது செய்யும் முடிவில் தவெக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சட்டசபையில் ஆம்ஸ்ட்ராங் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, சேகர் பாபு எழுந்து பதில் சொல்ல முயன்றார். அதற்கு ”ஆம்ஸ்ட்ராங் பெயரை சொன்னாலே அண்ணன் சேகர் பாபு எழுந்து விடுகிறார்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதின் பின்னனியில் பலர் சூச்சமம் ஒளிந்து உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்க  தமிழகமே காத்திருந்த அதிரடி அறிவிப்பு.. அமைச்சரவை ஒதுக்கீடு..!யார் யாருக்கு எந்தெந்த இலாகா..?

ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஜார்ச் சீட் போடப்படவில்லை. ஆகையால் ஜார்ச் சீட் வெளியான பின்பு தான் அரசியலில் எத்தனை முக்கிய புள்ளிகள் சிக்கக் கூடும் எனத் தெரிய வரும். ஆகையால் அமைச்சர் ஆதவா அர்ஜுனா சட்டசபையில் பேசிய ஆம்ஸ்ட்ராங் குறித்த பேச்சை மிக எளிதாக கடந்து செல்லமுடியாது. அதன் பின்னனியில் பல சமிக்கைகள் உள்ளது என்கிநன்றன அரசியல் வட்டாரங்கள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 minutes ago at 40 minutes ago

You missed