Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

coconut water

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயற்கையான பானம் என்றால் அது இளநீர்தான். ஆனால் இளநீரும் சிலர் உயிருக்கே ஆபத்து என்பது என்பது உங்களுக்கு தெரியுமா..?

யாரெல்லாம் இளநீரை தினமும் குடிக்க கூடாது? சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா என நிறைய பேருக்கு டவுட் இருக்கும். இளநீரில் சர்க்கரை இருந்தாலும் இதோட கிளைசமிக் குறியீடு ரொம்ப குறைவு. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறவர்கள் 100 மில்லி வரை குடிக்கலாம். ஆனால் சுகர் லெவல் ரொம்ப அதிகமா இருக்கறவங்க இத தவிர்க்கிறது ரொம்ப நல்லது.

அதேபோல ரெகுலர் ஒர்க்அவுட் பண்றவங்க அதாவது நீங்க சாதாரணமா உடல் பயிற்சி பண்ணீங்கன்னா உடலை நீரேற்றமா வைத்திருக்க இளநீர் ஒரு சூப்பரான பானம்தான். ஆனால் கெவியான ஒர்க்வுட் பண்ற விளையாட்டு வீரர்களுக்கு இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் மட்டுமே போதாது. அவங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸும் தேவைப்படலாம்.

யாரெல்லாம் கண்டிப்பா தவிர்க்கணும் எனப் பார்த்தால் கிட்னி நோய் இருக்கறவர்கள், இதய நோய் இருக்கிறவர்கள் இளநீரை தினமும் குடிக்க வைக்க கூடாது. ஏனென்றால் பலவீனமான சிறுநீரகத்தால் அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றவே முடியாது. அதேபோல உடலில் பொட்டாசியம் தக்க வைக்கக்கூடிய மருந்து எடுத்துக் கொள்கிறவர்களும் இளநீரை கண்டிப்பா தவிர்க்க வேண்டும். இளநீரில் பொட்டாசியம் சத்து ரொம்ப அதிகம்.

இதையும் படியுங்க  மனைவியின் நகையைத் திருப்பித் தராவிட்டால் 3 ஆண்டு ஜெயில்! சட்டம் சொல்லும் பகீர் உண்மை!

அதிகப்படியான பொட்டாசியம் இதய துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறுநீரக பிரச்சனை இருக்கிறவர்கள் தினமும் இளநீர் குடிக்கும் போது இரத்தத்தில் பொட்டாசியம் அளவு ஆபத்தான அளவுக்கு அதிகமாயிடும். இதைத்தான்
1ஹைப்பர்களிமியா என சொல்கிறார்கள். இது இதய துடிப்பை பாதித்து உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும் உடல் வீக்கம் இருக்கிறவர்கள் ,கை, கால் வீக்கம் இருக்கிறவர்கள் இளநீரை தவிர்க்கிறது ரொம்ப நல்லது. இளநீர் நல்லதுதான். ஆனால் யார் எவ்வளவு குடிக்க வேண்டும் என்கிறஒரு அளவு இருக்கிறது. இளநீர் குடிப்பதை பற்றி உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் ரொம்ப நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago