Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gold

இன்னைக்கு நீங்க 1,23,000 ரூபாய் கொடுத்து ஆசையா ஒரு பவுன் செயின் வாங்குறீங்க. வாங்குன அஞ்சே நிமிஷத்துல அதே கவுண்டர்ல திருப்பி கொடுத்தா உங்க கைக்கு ₹1 லட்சத்து 9,000 கூட கிடைக்காது.

அஞ்சு நிமிஷத்துல 14000 காலி. எப்படின்னு கேக்குறீங்களா? எல்லாமே செய்கூலி, சேத்தாரம்கிற மாயாஜால வார்த்தையிலதான். ஆனா அந்த ஒரு பவுன் செயினை செய்யும்போது உண்மையா வீணாகுற தங்கம் 500 ரூபாய்க்கும் கம்மிதான். அதுலயும் 90% தங்கத்தை உருக்கி திரும்பவும் கடைக்காரங்களே எடுத்துப்பாங்க. அப்போ சேத்தாராங்கிற பேர்ல நம்மகிட்ட வாங்குற பணம் எங்கதான் போகுது?

பில் போடும்போது சொல்ற 5% ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் தந்துரும். 11 மாச நகை சீட்டு, பழைய தங்கம் எக்ஸ்சேஞ் இது
எல்லாத்தையும் தாண்டி கடை ஓனருக்கு அந்த ஒரு பவுனில் உண்மையாவே எவ்வளவுதான் லாபம் நிக்கும்?
இந்த நகைக்கடை பிசினஸ் சீக்ரெட்டை அப்படியே உடைச்சு பார்க்க முருகேசன் நடத்துகிற ஸ்ரீ லட்ஷ்மி ஜுவல்லர்ஸ் கடைக்குள்ள போவோம்.

அங்க ஒரு வருஷமா கஷ்டப்பட்டு சேர்த்த காசுல தீபாவளிக்கு ஒரு பவுன் செயின் வாங்க செல்வியோட குடும்பம் வராங்க. ஆனா சேல்ஸ்மேன் கிழிச்சு கொடுத்த அந்த எஸ்டிமேட் ஸ்லிப்பில் பார்த்ததும் செல்வியோட அப்பாவுக்கு தூக்கி வாரி போடுது. ஏன்னா வாசல்ல போர்டுல பார்த்த தங்கம் விலையை விட அந்த ஸ்லிப்ல கிட்டத்தட்ட 14000 அதிகமா இருக்கு. வாங்க எஸ்டிமேட் ஸ்லிப்பில் ஒளிந்திருக்கும் கணக்குகள் அந்த எஸ்டிமேட் ஸ்லிப்ல எப்படி இவ்வளவு தொகை ஏறுதுன்னு பிரிச்சு பாப்போம்.

gold loan

எந்த நகைக்கடை பில் எடுத்தாலும் அதுல மூணு பகுதி இருக்கும். முதல் பகுதி தங்கத்தோட அசல் விலை. இந்த 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ. 13625 னா 8 கிராம் இருக்குற ஒரு பவுனுக்கு ₹109000 வருது. தெருவுல இருக்குற எல்லா கடையிலயும் போர்டுல ஒரே ரேட்டுதான் ஓடும். இதை கடை ஓனர் முருகேசனால மாத்த முடியாது. மூணாவது
பகுதி ஜிஎஸ்டி தங்கத்தோட விலையும் அதுக்கான செய்கூலி சேதாரத்தையும் சேர்த்து மொத்த பில் தொகை மேல கவர்மெண்ட் போடுற 3% வரி. இந்த 3%ல ஒரு பைசா கூட முருகேசன் பாக்கெட்டுக்கு போகாது. நேரா கவர்மெண்டக்கு போயிடும். அப்போ தங்கம் விலையும் மாறாது ஜிஎஸ்டியும் மாறாது.

நடுவுல இருக்கற அந்த ரெண்டாவது பகுதிக்கு பேருதான் விஏ. அதாவது வேல்யூ அடிஷன். நம்ம ஊரு பாஷையில சொல்லணும்னா செய்கூலி சேதாரம். செல்வி எடுத்த செயினுக்கு எஸ்டிமேட் ஸ்லிப்ல 12%விஏ அதாவது 13080
போட்டுருக்காங்க. இந்த ஒரு பகுதி மட்டும்தான் கடையோட கையில இருக்கு. சரி சேதாரம்னு சொல்ற அந்த தங்கம் உண்மையாவே எங்கதான் போகுது?

இதையும் படியுங்க  "வீடா இது.. இல்ல குபேரன் கஜானாவா? பெரம்பூர் சொகுசு பங்களாவுக்குள் நுழைந்த போலீஸ்.. கண்ட அதிர்ச்சி காட்சி!"

இன்னைக்கு கடைநில விக்கிற முக்காவாசி சாதாரண செயின் எல்லாமே கையால செய்றது இல்ல. பெரிய ஃபேக்டரிகள்ல மெஷின் மூலமா கட் பண்ணி வர செயின்கள். இதுக்கு ஆரம்ப சேதாரம் வெறும் 1/2ல இருந்து 1%
மட்டும்தான். அதுமட்டும்ல்ல அந்த பட்டறையில சிந்துற தங்க துகள்களை சும்மா கூட்டி குப்பையில கொட்ட மாட்டாங்க. அந்த ஆசாரி உட்கார்ந்து வேலை பார்க்கிற தரவிரிப்பு, அவர் கை கழுவுற தண்ணி, பாலிஷ்
போடுற துணி, ஏன் அந்த ரூம்ல இருக்கற தூசியை கூட மொத்தமா வழிச்சு எடுத்து உருக்கி தங்கத்தை தனியா பிரிச்சு எடுத்துப்பாங்க.

அப்படி உறுக்கும் போது கீழ விழுந்த தங்கத்துல 80ல இருந்து 90% திரும்ப கிடைச்சிரும். கடைசியா பாலிஷ் போட்டு
உருக்கி எடுக்கும்போது உண்மையாவே திரும்ப கிடைக்காம போற தங்க நஷ்டம் வெறும்0.05ல இருந்து 0.20% மட்டும்தான். அதாவது ஒரு பவுனுக்கு வெறும் 4லிருந்து 16 மில்லி கிராம். மதிப்புன்னு பார்த்தா வெறும் 55ல இருந்து
220 தங்கம். ஆனா செல்வியோட எஸ்டிமேட் ஸ்லிப்ல சேதாரம் 12% 1380 அப்படின்னு போட்டுருக்கு. இது உண்மையான தங்க நஷ்டம் இல்லைங்கறதுக்கு கவுண்டர்ல நடக்குற அடுத்த விஷயமே சாட்சி. 12% சேதாரம் ரொம்ப அதிகம்.

நகைக்கடையோட வருமானம் அந்த செயின் பில்லோட முடிஞ்சு போறதில்ல. அதுக்கு பின்னாடி
நகைக்கடையின் மூன்று வருமான இயந்திரங்கள் மறைமுகமா பணம் சம்பாதிச்சு கொடுக்கற மூணு வருமான இயந்திரங்கள் இருக்கு. மாசம் சீட்டு முடிஞ்சு நகை வாங்கும்போது உங்களுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது
அப்படின்னு ஒரு நகை சீட்டு புக்கை நீட்டுறாங்க. இங்கதான் முதல் வருமான இயந்திரம் இருக்கு. நகை சீட்டு. ஏன்

நகைக்கடைங்க இந்த சீட்டை எப்பவுமே 11 மாசம்னு ஒரு வருஷத்துக்குள்ளயே வச்சிருக்காங்கன்னு யோசிச்சிருக்கீங்களா? கம்பெனி சட்டப்படி 12 மாசம் இல்லன்னா 365 நாளை தாண்டி பணம் வசூலிச்சா அது பப்ளிக் டெபாசிட் கணக்குல வந்துரும். கவர்மென்ட் ரூல்ஸ் ரொம்ப கடுமையாயிடும். அதனாலதான் 11 மாசத்துல முடிச்சறாங்க. இந்த சீட்டு பணம் மூலமா நகைக்கடைக்கு பேங்க் வட்டியே இல்லாத வொர்க்கிங் கேப்பிடல் கிடைக்குது.

சேதார தள்ளுபடி போக இதுல மிச்சமாகுற வட்டி மட்டுமே சராசரியா பவுனுக்கு 220 லாபத்தை கொடுக்குது. அது மட்டும் இல்ல உங்க சீட்டு பணத்துக்கு கரெக்டா 4 கிராம் தங்கம் தான் வருதுன்னா கடையில உங்களுக்கு பிடிச்ச
டிசைன் 6 கிரம்ல இருக்கும். முதல் 4 கிராமக்கு சேதாரம் கிடையாது. ஆனா கூட எடுக்கற அந்த 2 கிராமக்கு பேரம் பேச முடியாதபடி 12ல இருந்து 14% முழு சேதாரத்தையும் போட்டே தீருவாங்க.

இதையும் படியுங்க  ரூ.1.64 லட்சமாக உயர்ந்த தங்கம்..! 2 நாட்களில் ரூ.10,000 குறைந்த வெள்ளி விலை..!

இரண்டாவது வருமான இயந்திரம் பழைய தங்கம் எக்ஸ்சேஞ்ச். கடையில நடக்குற சேல்ஸ்ல சுமார் 35% வில்கள்ல பழைய தங்கம் எக்ஸ்சேஞ்ச் வருது. நீங்க ஹால்மார்க் இல்லாத பழைய நகைய எடுத்துட்டு போனால் அழுக்கு பத்த வச்ச பொடி போக உங்க கண்ணு முன்னாடியே உருக்கி டெஸ்ட் பண்ணும்போது 1%ல இருந்து 3% கழிவு எடுப்பாங்க.
முக்கியமா உங்க நகையை உருக்கி சின்ன கட்டியா மாத்துனதுக்கு அப்புறம் விலை பிடிக்கலன்னு உங்களால வெளிய போக முடியுமா?

Gold Loan

வேற வழியே இல்லாம அவங்க சொல்ற சேதாரத்துக்கு புது நகை வாங்கியே ஆகணும். இந்த பழைய தங்கம் எக்ஸ்சேஞ்ச் மூலமா மட்டுமே கடையில விக்கிற சராசரி பவுனுக்கு 950 கூடுதல் வருமானம் கிடைக்குது. மூணாவது
வருமான இயந்திரம் கல் நகை 18 கேரட் அப்புறம் வெள்ளி விற்பனை. சாதாரண 22 கேரட் தங்க நகைக்கு 8லிருந்து 10% தான் மார்ஜின் நிக்கும். ஆனா கடையில விக்கிற வைர நகை 18 கேரட் நகை, அப்புறம் வெள்ளி பொருட்கள்ல
25லிருந்து 35% வரைக்கும் மார்ஜின் இருக்கும். இது மூலமா சராசரியா பவுனுக்கு 900 கூடுதல் வருமானம் வருது.

அதுபோக சாதாரண நகையில பதிச்சிருக்கிற சின்ன சின்ன கல்லுங்க. அப்புறம் எனாமல் எடை மூலமா
சராசரியா பவுனுக்கு 350 கூடுதலா கிடைக்குது. நகை சீட்டு, பழைய தங்கம் எக்ஸ்சேஞ்ச், கல் நகைன்னு நமக்கே தெரியாம நம்மள இன்னும் அதிகமா பணம் செலவு பண்ண தூண்டுற சைக்காலஜிதான் நகைக்கடையோட
உண்மையான வருமான இயந்திரம். கடைக்குள்ள சின்ன சின்ன சைக்காலஜி தந்திரங்கள் நடக்கும். நீங்க உள்ள நுழைஞ்ச உடனே ஒருத்தர் வந்து சூடா பில்டர் காபியோ, பாதாம் பாலோ கொடுப்பாரு. நம்ம ஊரு கலாச்சாரத்துல ஒருத்தங்க கையால காபி குடிச்சுட்டா எதுவுமே வாங்காம எந்திரிச்சு போகவோ இல்ல கராரா பேரம் பேசவோ நம்ம மனசு கூசும்.

அதே மாதிரி எப்பல்லாம் மார்க்கெட்ல தங்கம் விலை திடீர்னு குறையுதோ அன்னைக்கு மக்கள் கூட்டம் கூட்டமா வருவாங்க. தங்கம் விலை குறைஞ்ச சந்தோஷத்துல இருக்கறப்போ சில கடைங்க சேதாரத்தை ஒன்னுல இருந்து 2% சத்தமே இல்லாம ஏத்திருவாங்க. ஆனா இந்த பிசினஸ்ல நகைக்கடை ஓனருக்கு தூக்கத்தை கெடுக்கற ஒரே ஒரு
பெரிய ரிஸ்க் இருக்கு. அவர் கடையில இருக்கற 32 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ தங்கம்.

உதாரணத்துக்கு ஒரே மாசத்துல தங்க விலை திடீர்னு 9% சரிஞ்சா கடையில இருக்கற ஸ்டாக் மதிப்புல கிட்டத்தட்ட 3 கோடி ரூபா அப்படியே கரைஞ்சிரும். பெரிய கார்ப்பரேட் கடைங்க கோல்ட் மெட்டல் லோன் மூலமா 70லிருந்து 80% ஹெட்ஜிங் பண்ணி தப்பிச்சுப்பாங்க. ஆனா நடுத்தர கடை ஓனர்கள் இந்த விலை இறக்க ரிஸ்க்க தினமும் சுமந்துட்டுதான் பிசினஸ் பண்றாங்க. ஆனா நாணயத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்குல்ல. போன வருஷம்
அக்டோபர்ல 1 கிரம் 11300க்கு வித்த தங்கம் இந்த ஒரு வருஷத்துல 21% ஏறி இன்னைக்கு ரூ.13625 நிக்குது. அப்போ நகைக்கடையில் சும்மா தூங்கிட்டு இருந்த அந்த 24 கிலோ ஸ்டாக்கோட மதிப்பு மட்டுமே இந்த ஒரே வருஷத்துல
பேப்பர்ல 5 கோடியே 60 லட்சம் ரூபா ஏறி இருக்கு.

இதையும் படியுங்க  மொத்தமாக மாறும் தங்கம் விலை..? இனி கனவில் கூட இது நடக்காது..! ரஷ்யா செய்தது என்ன..?

எல்லா வருமானமும் செலவும் போக ஒரு பவுனுக்கு முருகேசனுக்கு உண்மையாவே கையில எவ்வளவுதான் லாபம் மிச்சமாகுது. வாங்க ஒரு பவுன் தங்கத்துக்கான லாப கணக்கை ஸ்டெப் பை ஸ்டெப்பா போட்டு பாப்போம். முதல்படி மொத்த வருமானம். செல்வியோட அப்பா கட்டின பில்லோட ஜிஎஸ்டி போக கடையில நிக்கிறது ₹1,19,580.
இதோட நாம பார்த்த மூணு மறைமுக வருமான 2420 ரூபாயும் சேர்த்தா ஒரு பவுனுக்கு கடைக்கு வர மொத்த வருமானம் ₹1,22,000 இரண்டாவது படி நேரடி செலவுகள். வித்த தங்கத்தை திரும்ப வாங்குற செலவு ₹1,8400
இதோட ஹோல்சேலர் செய்கூலி, பாக்ஸ், கார்ட் சார்ஜ் எல்லாம் சேர்த்து 3200 நேரடி செலவை கழிச்சா ஒரு பவுனுக்கு நிக்கிறது 10400. மூணாவது படி கடை செலவு அப்புறம் வட்டி.

நாம ஏற்கனவே பார்த்த மாச கடை செலவு, பேங்க் வட்டி, தேய்மானம்னு மொத்தம் 3300 கழிஞ்சா வரிக்கு முன்னாடி நிக்கிற லாபம்7100. நாலாவது படி வருமான வரி. இதுல 25% இன்கம் டாக்ஸ்ஆன 1775 கழிச்சா ஒரு பவுனுக்கு முருகேசன் பாக்கெட்ல நிக்கிற லாபம் 5325. அதாவது 4.3% நிகர லாபம். இந்த தீபாவளிக்கு நீங்க நகை வாங்க போறீங்கன்னா மூணே மூணு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க. ஒன்னு சேதாரத்துல 5% டிஸ்கவுண்ட், 10% டிஸ்கவுண்ட்ன்னு சொல்ற வார்த்தையை நம்பாதீங்க.

எல்லாம் சேர்த்து கடைசியா கையில எவ்வளவு ரூபாய் தரணும்னு மொத்த தொகையை கேட்டு பேரம் பேசுங்க. ரெண்டு ஒரே தெருவுல இருக்கற ரெண்டு மூணு கடையில அதே இடைக்கு என்ன பைனல் ரேட் சொல்றாங்கன்னு
விசாரிச்சிட்டு எடுங்க. மூணு உங்க கையில பழைய தங்கம் இருந்தா முதல்லயே அதை காட்டாதீங்க. புது நகையை செலக்ட் பண்ணி சேதாரத்தை முழுசா குறைச்சு பில் ரேட்ட பிக்ஸ் பண்ணதுக்கு அப்புறம் கடைசி
நேரத்துல உங்க பழைய தங்கத்தை எடுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 minutes ago at 23 minutes ago