ரீல்ஸ்களை புறக்கணித்து விட்டு இனி அரசியல் செய்ய முடியாது” என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ”ஒரு மாதத்தில் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள். பின்னர் 3 மாதம் என்றனர். 6 மாதங்களை நெருங்கி இருக்கிறோம். 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் வரை முழு பலத்துடன் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டு, சிறப்பாக செயல்படுவோம்.
6 மாதத்திற்கு ஒருமுறை நம்பிக்கை ஓட்டு கோருவது திமுகவின் வாடிக்கையாக இருக்கலாம். அவர்களின் ஒரே லட்சியம், தவெகவை ஆளவிடக்கூடாது. இன்னும் அதிகார தோரணையில் இருந்து கொண்டு இருக்கின்றனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர், சர்வ சாதாரணமாக கொலை செய்துவிட்டு ரீல்ஸ் வெளியிடுகிறார்களே? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதிலில் ”இன்று உலகமே மாறிவிட்டது. சோஷியல் மீடியா ரொம்பவும் முக்கியம். இதை தவிர்த்துவிட்டு ஒரு உலக அரசியலை பார்க்க முடியாது.
இன்றைக்கு அமெரிக்க அதிபர் ஒரு நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்றால் அடுத்த நிமிடமே ஒரு ரீல்ஸ் ஆக வெளி வருகிறது. ரீல்சை இன்றைக்கு புறக்கணித்துவிட்டு ஒரு நிர்வாகமோ, அரசியலோ பண்ணமுடியாது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்” எனத் தெரிவித்தார்.
